என்னுயிர் நீ தானே

Wednesday, November 11, 2020



* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 8

Friday, November 06, 2020

 

வேல்யாத்திரை சென்றும் பயனில்லை வேலவன்

குறவர்மருகன் என்பதை ஏற்காதபோழ்து..

- தினேஷ்மாயா


மெய்ம்மயக்கம் !!

 

“க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் “

வேறொன்றுமில்லை

அவளைக்கண்டு 

மெய்ம்மறந்தேனோ என்று 

சுயபரிசோதனை செய்துக்கொண்டேன் !!

* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 7

Thursday, November 05, 2020

 

மரணிக்க எவரும் தயாரில்லை இக்கனமே

மரணிக்க வல்லான் ஞானி..

* தினேஷ்மாயா *


குறள் வெண்பா - 6

 

காதல் காமமாய் மாறுகையில் உணரலாம்

மனிதன் விலங்கின் மிச்சம்..


* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 5

 

அன்பே அனைத்திற்கும் ஆதாரம் ஆகையால்

அதனுள் நீமூழ்கிப் போ.


* தினேஷ்மாயா *

குறள் வெண்பா -4

Wednesday, November 04, 2020

 

இரவில் உறக்கமின்றி தொலைப்பேசியில் மூழ்கியோர்க்கு
ஆயுள்குறைவாம் அறிவியலாளர்கள் கண்டவுண்மை..

- தினேஷ்மாயா

குறள் வெண்பா -3

 


இறையென மறையெனயேதும் தேவையில்லை அறமே தன்

வாழ்வின் நோக்காய் கொண்டவர்க்கு..

* தினேஷ்மாயா *

மணமேடை ஏறினாள்


 மனதினுள் காதலுடன்

ஆழ்மனதில் கவலையுடன்

புறத்தே புன்னகையுடன்

கழுத்தில் மாலையுடன்

கைகூடாக் காதலின் பாரத்தோடு

குடும்ப மானமெனும் பாரமும் ஏற்றி

மணமேடை ஏறினாள்

மாதொருத்தி !!

* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 2


“ கனவே கனவாய் மாறிடா வண்ணம்
   எண்ணம் கொண்டு விரைந்தெழு”

* தினேஷ்மாயா *

குறள் வெண்பா

 


திடிரென ஒரு ஆசை வந்தது. குறள் வெண்பா வடிவில் கவிதை எழுத முயற்சி செய்யலாமே என்று.

தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுத இப்போதைக்கு முடியாது. அதை கைவர கற்கவில்லை யான் இன்னும்.

புதுக்கவிதை வடிவில் குறள் வெண்பா என் முதல் முயற்சி - இதோ 

“ இமையாள் மைவிழியாள் என்னவள் நிகராகமாட்டாள்
   உமையாள் என்னவள் பேரழகின்முன்”

* தினேஷ்மாயா *