ஆண் தேவதைகளுக்கு

Monday, November 19, 2018



பேருந்தில் எத்தனை முறை
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

முதல் காதலுக்காக
முதல் பாசத்துக்காக தன் உயிரை
கூட விடும் அந்த புனிதமான
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....‌

ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...

ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் பயம் உண்டு
நேர்முகதேர்வில் குடும்ப பொறுப்பை ஏற்று
அவர்கள் கேட்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் கற்பு உண்டு
காதலி இருக்கும் போது கண்டவள்
பேசும் நேரத்தில்..‌

ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
அழும் நேரத்தில்..‌

ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....

ஆண்களுக்கும் மானம் உண்டு
அலுவலகத்தில் நாலுபேர் முன்னே
மானேஜர் திட்டும் நேரத்தில்..‌

ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...‌

ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்...

ஆண்களுக்கும் நாணம் உண்டு
காதல் சொன்னதும் காதலி முகம்
பார்க்கும் நேரத்தில்....

ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..‌‌

ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு

ஆண் தேவதைகளுக்கு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்..

#Shared

* தினேஷ்மாயா *

ஜெய்பீம் Anthem !!

Friday, November 09, 2018



மனிதனை மனிதனாகவே மதித்திடல் வேண்டுமென்று
புனித புத்தன் அன்று தோன்றினாரே மண்மேலே
மதமென்றும் சாதியென்றும் மக்களை பிரிக்கின்ற
மடமைய மாற்ற வேண்டும் என்றே மீண்டும் பிறந்தாரே !

வணக்கம் Bro, தமிழா
தமிழச்சி என் தங்கச்சி
நான் சொல்லும் கதையை
கொஞ்சம் காது கொடுத்துக் கேளு மச்சி
எத்தனை தலைவர்கள் நம் இந்தியாவிலே பிறந்தபோதிலும்
நம் நிலைமை மாறவில்லையே அடிமையாகவே இத்தனை காலமும்
இந்தியா முழுவதுமே இருக்குது இன்னும் சாதி வேற்றுமை
ஆனாலும் எதிர்த்து பேசிட யார் தந்தது நமக்கு உரிமை ?
தொட்டாலே தீட்டென்றார்
பார்த்தாலே பாவமென்றார்
இல்லாத கட்டு கதைகளை சொல்லி சொல்லி
நமை தள்ளிவைத்தார்
பள்ளியில் சேரமுடியாது
கோயிலுக்குள் உன் பாதம் நுழையாது
சாலையில் போக முடியாது
சாகடித்தாலும் கேட்க ஆளேது
ஆயிரம் ஆண்டுகள் போனது இப்படி
ஆனால் இன்றைக்கு மாறியதெப்படி ?
எடுத்துப்பார் உன் வரலாறு
நமக்கு முகவரி அதுயாரு ?

பாபாசாகேப் என்றொருவர்
பாரத நாட்டின் தந்தையவர்..

பாபாசாகேப் என்றொருவர்
உரிமையை வாங்கி தந்ததவர்..



பாபாசாகேப் என்றொருவர்
பாரத நாட்டின் தந்தையவர்..

பாபாசாகேப் என்றொருவர்
உரிமையை வாங்கி தந்ததவர்..


ரூபாயின் பிரச்சனை
இந்தியாவிலே சாதிகள்
உலகை திரும்பி பார்க்க வைத்தது
அம்பேத்கரின் சிந்தனை...
வட்ட மேசையும் வியந்து தந்தது
ரெட்டை வாக்குரிமை அன்றைக்கு..
இதனை ஏற்காத மகாத்மா காந்தி
சிறையில் கிடந்தார் பட்டினி போராட்டம்..
என்றாலும, சுதந்திரத்தை விடவும் இங்கே
சமத்துவம் தான் முக்கியம்
இது புரட்சியாளர் இலட்சியம்
அடிமை என்பதை உணர்ந்துவிட்டால் போதும்
மக்கள் படித்துவிட்டால் மாறும்
உலக மதஙகளை ஆய்வுகள் செய்தார்
நமது மதம் இனி பௌத்தம் என்றார்
சாதி ஒழியாத இந்திய நாட்டில்
சாத்தியமில்லை சமத்துவம்
கல்வி இல்லாத இருண்ட வீட்டில்
என்றுமில்லையே வெளிச்சமும்
உடலை வருத்தி இரவும் பகலும்
எழுதிமுடித்தார் சட்டம்
மனித மாண்பினை மீட்டெடுக்க
அவர் தொடுத்தார் யுத்தம்

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே


கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்
கற்றுக்கொள்ள தினம் முயற்சிசெய்
சாதி என்பதொரு மனநிலைதான்
மாற்றிக்கொண்டாலே நீ மனிதன்

கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்
கற்றுக்கொள்ள தினம் முயற்சிசெய்
சாதி என்பதொரு மனநிலைதான்
மாற்றிக்கொண்டாலே நீ மனிதன்

சாதிமத பேதஙகளை தூக்கிப்போடு
இனிவரும் காலங்களை மாற்றிவிடு
கையிலெடு சமத்துவம்
மரண மனிதகுலத்தை பிரித்த மதங்களை
மறந்த விலங்குகளாய் பிறப்பெடு ஒருமுறை
எடுத்து படித்துப்பாரு அம்பேத்கரை
அதற்குப்பிறகு பாரு உன் வாழ்க்கையை
எடுத்து படித்துப்பாரு அம்பேத்கரை
அதற்குப்பிறகு பாரு உன் வாழ்க்கையை

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே


ஜெய்பீம் !!!!!


ஆல்பம்: The Casteless Collectives
தயாரிப்பு: நீலம் பண்பாட்டு மையம்

* தினேஷ்மாயா *

வடசென்ன எப்படி இருக்கும்?




வடசென்ன எப்படி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா ?
உண்மைய எடுத்துச் சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா ?

வடசென்ன எப்படி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா ?
உண்மைய எடுத்துச் சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா ?

இருந்த அழகயெல்லாம் அழிச்சுட்டானுங்க - பல
உண்மைகள அடியோடு மறைச்சுட்டானுங்க
இழந்த நிலங்கள நாம மீட்டு எடுக்கனும்..
இரண்டாம் சுதந்திரமா அதுவும் இருக்கனும்..

வடசென்ன எப்படி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா ?
உண்மைய எடுத்துச் சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா ?
கூவம்நதி ஓரத்துல குடிச நெறைய இருந்துச்சா..
நம்மள அடிச்சு போலீஸ் மானபங்கப்படுத்துச்சா..
செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனைய கொடுத்துச்சா..
லஞ்சத்த வாங்கிகிட்டு லட்சம் வீட்ட கொளுத்திச்சா..

இத்தன நாளா நாம வாய பொத்தினு இருந்தோம்..
எத்தன இன்னல்கள ராவும் பகலும் சுமந்தோம்..
இதயா தட்டிக்கேக்க நாமயெல்லாம் மறந்தோம்..
இதுக்கா பெரியாரின் பேரனாக பிறந்தோம்..
மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

தட்டி கேட்டவன ஜெயிலுக்குள்ள போட்டுட்டான்
நம்மள ஏமாத்தி பல கட்டிடத்த கட்டிட்டான்..
ராஜாவா வாழ்ந்த ஜனங்க வாழுதிப்போ ரோட்டுல..
வாயில்லா மக்களுக்கு வாதாடவும் கோர்ட்டில்ல..

இதுக்கு சப்போர்ட் பண்ண ஆளுங்கெல்லாம் யாரு ?
நம்முடைய வரிப்பணத்துல துன்னுறாண்டா சோறு..
ஒருநாள் எழுந்து வருவோம் பொறுத்திருந்து பாரு..
உனக்கு மூக்கணாங்கயிறு போட்டு ஓட்டியிடுவோம் ஏறு..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

இணைஞ்சு இணைஞ்சு வாழுற கூட்டம்
குனிஞ்சு குனிஞ்சே கெடக்க மாட்டோம்
நிமிந்து நிக்குறோம் புளிகளாட்டம்
இனிமே எதுத்து கேள்வி கேப்போம்

சொந்த ஊரு மெட்ராசு
நாங்க இல்லடா புதுசு..
சொந்த மண்ண விட்டு
போகசொல்லுது அரசு..
படிச்சுப்பாரு என் வரலாறு
அதிலிருக்குது ஆயிரம் கோளாறு..
உழச்சு போட்டது என் முன்னோரு
புடுங்கி திங்குற நீயாரு ?
சென்னை என்பது கருப்பர் நகரம்
உண்மைய இப்போ உறக்க சொல்லுவோம்
வியாசர்பாடி வண்ணாரப்பேட்ட
நான் கட்டினது ஜார்ஜுகோட்ட..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

ஆல்பம்: The Casteless Collectives
தயாரிப்பு: நீலம் பண்பாட்டு மையம்



* தினேஷ்மாயா *

பார்ப்பனியம்

Thursday, November 08, 2018




 இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளது. ஆனால் நான்கு பக்கமும் பார்ப்பனியத்தால் சூழப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இன்றைய சமூகத்தில ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதுபற்றிய பதிவுகளை இங்கே பதிய விழைகிறேன். அதற்கான முன்னுரையே இந்த பதிவு.

* தினேஷ்மாயா *

உலக பொதுமறை


உலக பொதுமறை

காதல் !!

ஆம்..

இனம் மொழி எல்லைகள் கடந்து

உலகத்திற்கே பொதுவான ஒன்று

அன்பு என்னும் காதல் மட்டுமே..

* தினேஷ்மாயா *

தரிசனம்



 நான் உன்னை கோயிலில் வந்து தரிசிப்பதில்லை. அதற்கு நீ காரணமில்லாதபோதிலும் உன்னை சுற்றியிருப்பவர்கள் காரணமாக இருக்கிறார்கள். 

   ஆனாலும், என் பக்தியை உணர்ந்த நீ... என் கனவில் வந்து எனக்கு தரிசனம் கொடுத்தாயே ஈசனே..

    எனை தடுத்தாட்கொண்டமைக்கு என்ன கைம்மாறு செய்வேனோ ?!

* தினேஷ்மாயா *

கைக்குழந்தை

Wednesday, November 07, 2018


நீ செய்யும் குறும்புகள்

குழந்தையையே மிஞ்சிவிடும்...

குழந்தைக்கு ஈடேதுமில்லை என்போர்

உன்னை கண்டிருக்கவில்லை...

* தினேஷ்மாயா *

இசை



இசைக்கருவியை மீட்டினால் மட்டுமே

இசை பிறக்கும்...

ஆனால்,

மீட்டாமலே இசையை பொழியும்

யாழ் நீ !

* தினேஷ்மாயா *