வானம் போல..

Sunday, January 29, 2017



திருவான்மியூர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் ஆலயத்தில் இன்று நான் கண்ட வாசகம் என்னை அதிகம் கவர்ந்து.. அது -

" வானம் போல தியானம் செய் "

* தினேஷ்மாயா *

அரி - விஷ்ணு

Tuesday, January 24, 2017



அறிபவனும்

அறியப்படும் பொருளும்

அறிவும் - இவையாவும்

அரியே என்றென்றறிவாய்

மனமே !?

* தினேஷ்மாயா *

விவசாயத்தின் பெருமை

Monday, January 23, 2017




"சீரைத் தேடின் ஏரைத் தேடு"
- கொன்றை வேந்தன் ( ஔவையார்)

விளக்கம்
புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்..

விவசாயத்தின் பெருமையை எம் ஔவை மூதாட்டி அன்றே பாடியிருக்கிறாள்.

* தினேஷ்மாயா *

மெய்ஞ்ஞான நூல்



"நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்? " 39

- மெய்ஞ்ஞான புலம்பல்
பத்திரகிரியார் சித்தர் எழுதியது..

இந்த உடம்பை நான் என்று தவறாக நினைத்து வாழ்ந்து வருகிறோம். ஆனால், சிவனே உண்மை என்பதை இவர் வரிகள் புரியவைக்கிறது..

* தினேஷ்மாயா *

விவேகானந்தர் பொன்மொழி


"நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்"
- சுவாமி விவேகானந்தர்

* தினேஷ்மாயா *

ஏழுமலையான் மகிமை

Sunday, January 22, 2017


நேற்று என் பெற்றோர்களுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தேன்.

15 வருடங்களுக்கு முன்னர், அவர்கள் என்னை திருப்பதி அழைத்து வந்தனர். இன்று, 15 ஆண்டுகள் கழித்து அவர்களை திருப்பதி அழைத்து வந்து இறைவனை தரிசிக்க நான் காரணமாக இருப்பதற்கு அந்த ஏழுமலையானுக்கு நன்றி..

ஏழுமலையான் தரிசனம் கண்டு வெளியே வரும்போது அம்மா அப்பா இருவர் கண்களிலும் ஆனந்தம் சொல்லமுடியாத மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது. அவர்களின் மகிழ்ச்சியை கண்டு எனக்கு பேரானந்தம். பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு நாம் காரணமாக இருப்பதைவிட வேறென்ன மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு இருந்துவிடப் போகிறது ?

இது வழக்கமாக நடக்கும் விஷயம் போல தோன்றினாலும், கீழே திருப்பதியில் இருந்து மேலே திருமலை வந்து ஏழுமையான் தரிசனம் கண்டு திரும்பி ஊர் செல்லும்வரை பற்பல அதிசயங்கள் நடத்திகாட்டினார் பெருமாள். அதை இங்கே பதிந்தாலும் பலருக்கு புரியாது. ஆத்மார்த்தமாக அவன் அதிசயங்களில் நான் அவனது மகிமையை கண்டு மனம் இலயித்தேன் என்பதைத்தவிர ஏதும் சொல்ல வார்த்தைகளில்லை..

ஓம் நமோ வெங்கடேசாய

ஓம் நமோ நாராயணாய

* தினேஷ்மாயா *

தமிழ் வாழ்க..

சமீபத்தில் தமிழகத்தில் நடைப்பெற்று வரும் அறப்போராட்டம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த தன்னெழுச்சி போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும். மாணவர்களின் சக்தியை மாணவரளே அறியாமல் இருந்தனர். இன்று அவர்களும் அறிந்து தங்கள் சக்தியை உலகுக்கும் உணர்த்தியுள்ளனர். சில கருப்பு ஆடுகள் தங்கள் கருத்தை தெரிவிக்கிறேன் என்று பிரிவினையையும் வெறுப்பையும் விதைத்தாலும் எம் சிங்கங்கள் அவற்றுள் சிக்காமல் சீறி செல்வது மகிழ்ச்சி. இந்த அறவழிப்போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் இருந்துவிடக்கூடாது. இந்த மாணவர் எழுச்சியை ஒருங்கிணைத்து இது என்றென்றும் தொடர ஒர் தலைமை வேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வந்து அரசாங்கத்தில் பங்குபெற்று நாட்டை சுத்தம் செய்ய வேண்டும். நம் அப்துல் கலாம் ஐயா அவர்களின் கனவான வல்லரசு இந்தியா 2020 தமிழகத்தில் இருந்தே ஆரம்பமாகட்டும். நம் அடுத்த இலக்கு 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்.

மாணவர்கள் அரசியலில் வரும் நிலைவந்தால், என் அரசாங்க பணியை விட்டு நானும் மக்களுக்காக அரசியலில் இறங்கவும் தயாராக இருக்கிறேன். இப்போராட்டம் முடிந்ததும், மாணவர்களின் அரசியல் எழுச்சிக்கு ஒரு பிள்ளையார் சுழி போட ஒரு வழியை தேடிக்கொண்டு இருக்கிறேன்..

தமிழ் வாழ்க. தமிழினம் வெல்க..

இனியொரு விதி செய்வோம்..

* தினேஷ்மாயா *

மஞ்சள் ஆறு


அவள் மஞ்சள் பூசிக்கொண்டு

ஆற்றங்கரையில் நடந்து சென்றாள்..

அவளை உரசி சென்ற ஆறுதான்

மஞ்சள் ஆறாக மாறியது !

P.C.: Facebook

* தினேஷ்மாயா *

ரோஹித் வெமுலா

Wednesday, January 18, 2017

காவி தேசியவாதமும் மதவாதமும் சாதியும் தன் அகோர பசிக்கு இரையாக்கப்பட்ட ஒரு மாணவன் இம்மண்ணில் விதைக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகிவிட்டது..
# RohitVemula

* தினேஷ்மாயா *

சுவர்க்கம் இலவசம்

Tuesday, January 17, 2017




ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
பேரனே! சுவர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
பேரன்: அது எப்படி தாத்தா?
முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்,
மது அருந்த பணம் வேண்டும்,
சிகரெட் புகைக்க பணம் வேண்டும்,
கூடாத இசை கேட்க பணம் வேண்டும்,
பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
சுவர்க்கம் செல்வது இலவசம்
தொழுபவனுக்கு பணம் தேவையில்லை,
நோன்பு நோற்க பணம் தேவையில்லை,
பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை,
பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை,
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான சுவர்க்கத்தை நேசிக்கிறாயா?

- படித்ததில் பிடித்தது

* தினேஷ்மாயா *

உபகாரம்

Monday, January 16, 2017



" நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்  "     

- ஔவையார் ( மூதுரை :2)

எவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று ஔவை கூறிய வார்தைகள் இவை..

* தினேஷ்மாயா *

ஔவையாரின் நல்வழி

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்  "
- ஔவையார் (நல்வழி : 22 )

இதன் பொருள் அனைவருக்கும் புரியும் என நம்புகிறேன்..

* தினேஷ்மாயா *

வான ஊர்தி

Sunday, January 15, 2017

"ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்"

- திருத்தக்கதேவர் ( சீவக சிந்தாமணி)

மயிலால் ஆன வானவூர்தி பற்றி சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது..

* தினேஷ்மாயா *

இரு தெய்வங்கள்

Saturday, January 14, 2017



தெய்வத்தைத்தேடி தெய்வம் வந்திருக்கிறது..

கோவிலில் என் அம்மா..

* தினேஷ்மாயா *

பொங்கல் நல்வாழ்த்துகள்..



இவ்வுலகம் தழைக்க சூரியன் ஒருவனே காரணம். அவனுக்கு நன்றி செலுத்தும் தினம் இன்று. அனைத்து உயிர்களும் செழிப்பாய் வாழ, மும்மாரி பொழிந்து விவசாயம் தழைத்தோங்க, மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ, பிறந்திருக்கும் தைமகள் அனைவர் மனதிலும் அன்பை விதைத்து பேரன்பை அறுவடை செய்யட்டும்..

அனைவருக்கும் என் மனமார்ந்த தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

* தினேஷ்மாயா *

கோடிட்ட இடங்களை நிரப்புக

Friday, January 13, 2017

இன்று பொங்கலுக்காக ஊருக்கு செல்ல கோவை இரயில் நிலையம் வந்தேன். இரயில் நிலையத்தில் பலவகையான விளம்பரங்கள் கேட்டிருக்கிறேன். இன்று முதல்முறையாக கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக திரு. ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் குரலில் இந்த படத்திற்கான விளம்பரத்தை கேட்டேன். இதுவே என்னை இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது.

நிச்சயம் வெகு விரைவில் இந்த படத்தை அவருக்காக திரையரங்கம் சென்று அந்த கோடிட்ட இடங்களை நிரப்பிவிட்டு, படம் பற்றி இங்கே பதிவு செய்கிறேன்..

* தினேஷ்மாயா *

இப்படியும் இருக்கலாமோ ?



உலகின் மாபெரும் சக்தி வாய்ந்த நாடுகளாக திகழ்பவை அமெரிக்கா மற்றும் இரசியா.. இவர்களுக்கிடையில் பனிப்போர் 45 ஆண்டுகளாக நடந்து வந்தது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் பாதாளம் தொடங்கி விண்வெளி வரை நீண்டிருந்தது..

அந்த பனிப்போர் முடிந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் உலகின் மாபெரும் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இவ்விரு நாடுகளும் எண்ணற்ற முயற்சிகளை செய்துக்கொண்டே வருகின்றன. ஆயினும், நேர் வழியைவிட குறுக்குவழியில்தான் இவர்கள் பயணப்பட்டது அதிகம் என்பது சரித்திரத்தை திரும்பி பார்த்தால் புரியும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் இந்த பனிப்போரின் இன்னொரு பரிணாமமாக நான் கருதுகிறேன்.

அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாத இரசியா, தன் ஆதரவாளர் ஒருவரை அமெரிக்காவின் அதிபராக வந்தால் தங்கள் காரியம் அனைத்தையும் சாதித்துக்கொள்ளலாம் என்று நினைத்து செய்த காரியம்தான் இதுவோ என நினைக்க தோன்றுகிறது.

எது எப்படியானாலும், மூன்றாம் உலகப்போர் வராமல் இருந்தால் சரி..

* தினேஷ்மாயா *

நாளை ஆருத்ரா தரிசனம்...

Tuesday, January 10, 2017


மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே
- சேந்தனார்

* தினேஷ்மாயா *

ஏணி


என்னடி இது ?

ஏணிப்படிகளை உன்னகத்தே வைத்திருக்கிறாயே !

* தினேஷ்மாயா *

இந்தியாவே ! விழித்துக்கொள் !



இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரிடம் அடிமையாய் இந்தியா இருந்தது. அப்போது அவர்கள் போடும் சட்டம் மக்களுக்கு எதிராக இருந்ததாலும், அவர்கள் நம்மை அடிமைப்படுத்தியதாலும் மக்கள் வீதியில் இறங்கி போராடினர். தங்கள் சுதந்திரத்துக்காக போராடியதால் நம் நாட்டின் வளர்ச்சி சுமார் 200 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது எனவும் கூறலாம். ஆனால், சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளாகியும் இன்று மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜம்மு மக்கள் அமைதியான வாழ்க்கைக்காக போராட்டம், வடகிழக்கு மக்களும் தங்களின் இழந்த உரிமைகளுக்காக போராட்டம், ஜார்க்கண்ட் மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராட்டம், மேற்கு மற்றும் வடமேற்கில் தண்ணீர் பிரச்சனை, மத்தியில் விவசாயிகள் இறப்பு, குஜராத்தில் அணை வரக்கூடாது என்பதற்காக, இதோ இங்கே தமிழகம் - மீனவர் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, காவிரி பிரச்சனை, இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை, நேற்று பொங்கலுக்கு பொதுவிடுமுறை இல்லை என்ற பிரச்சனை...

அப்பப்பா !

என்ன நடக்கிறது இங்கே !? 

130 கோடி மக்கள் இருக்கிறோம் இங்கே. எவ்வளவு ஆக்கப்பூர்வமான சக்தி நம் தாய்நாட்டுக்கு இருக்கிறது. அதை அரசாங்கம் சரிவர பயன்படுத்தாமல் இருப்பதை கண்டு வருந்துகிறேன். இப்படி எத்தனைக்காலம் மக்கள் போராட்டத்திலேயே தங்கள் சக்தியை வீணாக்க வேண்டும். உலக மேடையில் நாம் எப்போது முன்னேறுவது ?

இதற்கு பதில் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது என்று மக்கள் ஊமையாக இருக்க கூடாது. நீங்கள் தேர்ந்தெடுப்பவர்தான் அரசாங்கத்தில் இருக்கிறார் என்பதை மறவாதீர்.

* தினேஷ்மாயா *

ஆராரிரோ பாடியதாரோ



ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ யாரோ

நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டு தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்தி பார்த்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு
இசை : இளையராஜா
பாடியவர் : ஜேசுதாஸ்
வரிகள் : வைரமுத்து

* தினேஷ்மாயா *

அந்தியில வானம்



அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கூடும் காவேரி இவ தான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்... ஹோ...

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கட்டுமர தோனி போல
கட்டழகு உங்க மேலே
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ... ஓ... ஓ... ஓ...

பட்டு உடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ... ஓ... ஓ... ஓ...

பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேலே நீ போடு தூங்காத விருந்து
நாணம் உண்டல்லோ அதை நானும் கண்டல்லோ
இதை நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ... ஓ...

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

வெள்ளியில தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேலை வந்தாச்சு கண்ணம்மா.... ஆ... ஆ... ஆ...
மல்லிகைப்பூ மாலைக் கட்ட
மாரியிட வேலைக்கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா... ஆ... ஆ... ஆ...

கடலோர காத்து
ஒரு கவிப்பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர கூறாதோ தேன் தான்

தேகம் இரண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...
கூடும் காவேரி இவ தான் உன் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்... ஹோ... ஓ...

அந்தியில வானம் ஹா... தந்தனத்தோம் போடும் ஆ... ஹா...
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...
சந்திரனே வாரும் ஓய்... சுந்தரியை பாரும் ஆ... ஹா...
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...


படம்: சின்னவர்
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா
இசை: இசைஞானி இளையராஜா

* தினேஷ்மாயா *

ஏலேலங்கிளியே



ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

தெம்மாங்கு பாட்டு அட நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்டும் காலம் வரும்
அடி கண்ணம்மா பாராட்டும் காலம் வரும்

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

சோகம் எல்லாம் போகும் ஒரு சேதி சொல்லட்டுமா
நல்ல சேதி சொல்லட்டுமா
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா
வெற்றி முத்தை அல்லட்டுமா
ஒத்தையடிப் பாதை இதில் தேரும் வரும் நாளை
ஒத்தையடிப் பாதை இதில் தேரும் வரும் நாளை
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்
ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

படம் : நான் பேச நினைப்பதெல்லாம்
பாடியவர்கள் : பி.சுசிலா, மனோ
இசை: சிற்பி

* தினேஷ்மாயா *

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது


தந்தனன தானானா
தந்தனன
தானானா
தந்தானா
தந்தானா
தந்தனா னானா

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா
நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா
போன வழி பார்த்த கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும்
சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும்

ன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலதா
மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது

திரைப்படம்: பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா, மனோ

* தினேஷ்மாயா *

நான் ஏரிக்கரை மேலிருந்து


நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு
தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே
கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ
அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

படம்: சின்ன தாயி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா

* தினேஷ்மாயா *

உறவுகள் தொடர்கதை...


உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்..
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

படம்: அவள் அப்படித்தான்.
இசை: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.

சமீபத்தில் என் நண்பன் சொல்லி இந்த பாடலை கேட்டேன். இளையராஜா அவர்கள் ஏன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்பதற்கு அர்த்தம் கிடைக்கும் வண்ணம் இந்த பாடல் இருந்தது. என்ன ஒரு ஆளுமை. அருமையான இசையமைப்பு...

* தினேஷ்மாயா *

அவளும் நானும்



அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

மீனும் புனலும்..  விண்ணும் விரிவும்..
வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
பாட்டும் உரையும்.. நானும் அவளும்..

நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..

அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
அவளும் நானும்..திங்களும் குளிரும்..
அவளும் நானும்..கதிரும் ஒளியும்..

 அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்..


படம் : அச்சம் என்பது மடமையடா
இசை : ரஹ்மான் AR
பாடியவர் : விஜய் ஏசுதாஸ்
கவிஞர்: பாவேந்தர் பாரதிதாசன்


வெகு நாட்களுக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான பாடல்..

* தினேஷ்மாயா *

மாயா !!

Monday, January 09, 2017



உன் கண்ணை பார்த்தால் - அங்கே
ஒரு கவிஞன் பிறப்பான்..
உன் கண்களை பார்த்துக்கொண்டே இருந்தால் - அங்கே
ஒரு கவிஞன் இறப்பான்..

உன்னை புராணம் என்று மேதாவி படிப்பான்..
நீ சிலையென்று சிற்பி உன்னை வடிப்பான்..

தாளம் நீயென்று நாடோடி ஆனந்தகூத்தாடுவான்..
ராகம் நீயென்று இசைக்கவி தெய்வீகமாய்
பாடுவான்..

உனைப்பாட வார்த்தைகள் ஏது?
உனக்கில்லை இவ்வுலகில் ஈடு..

உன்னால் கிறுக்கனானேன் - இதை
இங்கு கிறுக்கலானேன் !

- தினேஷ்மாயா

2017 பயணம்



என் 2017-ஆம் ஆண்டின் பயணம் இராமேஸ்வரத்தில் இருந்து துவங்கியது.
இராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி மற்றும் பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி தரிசனம் கண்டு, மதுரை வந்தேன். மீனாட்சி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்துவிட்டு அங்கு சுந்தரானந்தர் சித்தரின் ஜீவசமாதியையும் தரிசித்துவிட்டு, திருப்பரங்குன்றம் காசி விசுவநாதர் ஆலயத்தில் உள்ள மச்சமுனி சித்தர் ஜீவசமாதி தரிசித்து, பின் திருப்பரங்குன்றம் முருகனையும் தரிசித்தேன்.

வைகுண்ட ஏகாதசி அன்று, அழகர் கோவில் சென்று, பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி, கள்ளழகர் இருவரையும் தரிசித்து, பழமுதிர்ச்சோலை முருகனை வணங்கி பின் அழகர் மலை உச்சியில் இருக்கும் இராமதேவர் ஜீவசமாதிக்கு மலை ஏற்றம் மேற்கொண்டு சித்தரின் தரிசனம் கண்டு இன்புற்று பின்னர் வீடு திரும்பினேன்.


* தினேஷ்மாயா *

தேன் நீர்


அது வெறும் நீர் தான்..

நீ பருகிய பின்னரே

தேன்-நீர் ஆனது !

* தினேஷ்மாயா *

நம்பிக்கை


* தினேஷ்மாயா *

Relax.. Things Take Time


* தினேஷ்மாயா *