வாழ்க்கையும் நீயும்

Tuesday, November 29, 2016


வாழ்க்கையும் நீயும் ஒன்றே

அள்ள அள்ள ஆச்சரியங்களை

அன்பளிப்பாய் அளிப்பதனால் !

* தினேஷ்மாயா *

நந்தி


ஓவியம் : தினேஷ்மாயா

புத்தர்


ஓவியம்: தினேஷ்மாயா

தோழி

Wednesday, November 23, 2016



I just don't want a wife.I want a Girl Friend for entire Lifetime.Being a good friend to my wife ll sound better than just being an husband.

-  தினேஷ்மாயா -

வாழ்க வளமுடன்

Wednesday, November 16, 2016


என் தோழி ஒருத்திக்கு, அவள் திருமணத்தை பொருட்டு நான் வரைந்து பரிசளித்த ஓவியம் இது.

* தினேஷ்மாயா *

சமீபத்தில் இரசித்த திரைப்படங்கள்

Thursday, November 10, 2016

     என் சிறு வயதில் அதிகம் படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது நான் பார்க்காமல் இரசிக்காமல் விட்டுப்போன படங்களை இப்போது பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அப்படி நான் சமீபத்தில் பார்த்து இரசித்த திரைப்படங்களை இங்கே பதிகிறேன்

கருத்தம்மா:

 கருத்தம்மா கதாபாத்திரம், பெரியார்தாசன் அவர்களின் இயல்பான நடிப்பு, இசைப்புயலின் பிண்ணனி இசை, வசனம், என்னை அதிகம் கவர்ந்தது. சில இடங்களில் பிண்ணனி இசையால் கண்களில் நீரை வரவைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள். அவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். மண்வாசம் ததும்ப ததும்ப இந்த விருந்தை பாரதிராஜா படைத்திருக்கிறார். 

கிழக்கு சீமையிலே:


கருத்தம்மா படம் கொடுத்த அனுபவம் எனக்கு இதில் கிடைக்காவிட்டாலும், ஏ.ஆர்.ரஹ்மான், பாரதிராஜா கூட்டணியில் வந்த மற்றுமொரு திரைப்படம். அண்ணன் தங்கை பாசத்தை இக்காலத்துகேற்ப சமைத்து நமக்கு பரிமாறியிருக்கிறார். பிண்ணனி இசையைவிட, பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சேது:

படம் முழுக்க எனக்கு இசைஞானி மட்டுமே தெரிந்தார். நான் அவரின் இரசிகன் என்பதால் இதுவோ என எனக்கு தெரியவில்லை. வார்த்தை தவறிவிட்டாய், எங்கே செல்லும் இந்த பாதை பாடல்கள் இளையராஜா அவர்களின் குரலில் கண்ணீருக்கும் மேல் வேறெதையோ எனக்கு தந்தது. பாலா அவர்களின் திரைக்கதை அற்புதம். அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. விக்ரம் அவர்களின் நடிப்பு இன்னொரு பரிணாமத்தை அடைய ஆரம்பித்தது இங்கிருந்துதான். அருமையான படம். 

நாயகன்: 


மணிரத்னம், இளையராஜா, கமல். மூன்று ஜாம்பவான்கள். சொல்லவா வேண்டும் ? இப்போதும் படம் முழுக்க இளையராஜா அவர்கள்தான் இருக்கிறார். தென்பாண்டி சீமையில பாடல் இசைஞானியில் குரலில் கேட்கையில் ஒரு உணர்வு, கமல் குரலில் கேட்கையில் இன்னொரு வித்தியாசமான உணர்வு. என்ன மாயம் இது ? படத்தின் கதை, திரைக்கதை, அருமையான வசனம், கமல் அவர்களின் தேர்ந்த நடிப்பு, இசைஞானியின் பிண்ணனி இசை மற்றும் பாடல்கள், எல்லாம் சேர்ந்து என்னை புரட்டிப்போட்டுவிட்டது..

சிந்து பைரவி:


கே.பாலசந்தர் அவர்களின் விசிறி நான். அவரின் படங்களில் அவரின் தனித்துவம் நன்றாக தெரியும். இதிலும் அதை காட்டியிருக்கிறார். முதலில் என்னை கவர்ந்தது, இசைஞானி, பிறகு வைரமுத்து. இவர்கள் இருவரின் உழைப்பால் அமைந்த அத்துனை பாடல்களும் அருமை. தீக்ஷிதர், தியாகராஜர் அவர்களின் கீர்த்தனைகளையும் படத்தில் இணைத்திருந்தார் கே.பி., இது இவர் ஸ்டைல். நடிப்பில் அதிகம் கவர்ந்தது சுஹாசினி. அட அட அட அட, என்ன ஒரு நடிப்பு. முகத்தில் அத்துனை பாவங்கள், அனைத்து உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எப்படி இவரால் ஒருசேர வெளிகாட்ட முடிகிறது என்று வியந்தேன். சிரித்துக்கொண்டே அழுகையை மறைக்க முயல்வது, அதிர்ச்சியை புருவத்தில் மட்டும் காட்டிக்கொண்டு புன்னகை பூப்பது, இன்னும் இப்படி ஏராளம். சிவக்குமார் அவர்களின் நடிப்பும் அருமை. 

கலைவாணியே...


கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..


உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
க்ண்ணீர் பெருகியதே... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : KJ ஜேசுதாஸ்

சிதம்பர இரகசியம்

Wednesday, November 09, 2016



வாழ்க்கை மறைத்து வைத்திருக்கும் இரகசியம் என்னவென்று தெரியுமா ?

மரணம் எக்கனமும் நமக்கு நேரலாம் என்பதே !

இந்த ஊரறிந்த இரகசியத்தை எவரும் உணர்ந்தபாடில்லை..

* தினேஷ்மாயா *

மல்லிக மொட்டு

Monday, November 07, 2016


மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதடி மானே !

ஓவியம்: தினேஷ்மாயா

சிங்கம் ஒன்று புறப்பட்டதே !


ஓவியம்: தினேஷ்மாயா

காலப்போக்கில்

Sunday, November 06, 2016



காலப்போக்கில் அந்த கிளி

தான் சிறைப்பட்ட கூண்டையே

நேசிக்க துவங்கிவிடுகிறது !

* தினேஷ்மாயா *

ஒளிந்திருந்து ஒளிவீச


ஒளிந்திருந்து ஒளிவீச

உன்னால் மட்டுமே முடியுமடி..

* தினேஷ்மாயா *

உன் பிம்பத்தை

அந்த கண்ணாடியில் நீ ஒட்டிவைத்த

உன் பொட்டுக்கள், நீயில்லா சமயத்தில்

உன் பிம்பத்தை எனக்கு காட்டுதடி..

* தினேஷ்மாயா *

தேன் நீர்

வெறும் நீர் தான்..

நீ பருகியதும்

தேன் நீர்  - தேநீர் ஆகிவிட்டது..

* தினேஷ்மாயா *

கண்ணம்மா கண்ணம்மா



கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உ ன்னை நினைத்திருந்த்தாலம்மம்மா நெஞ்சமே….
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே….

ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ…

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவைப்போல
ஸ்நேகமான வாய்மொழி
செல்லம்கொஞ்ச கோடைகூட
ஆகிடாதோ மார்கழி

பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா
நில்லம்மா…
உன்னை உள்ளம் என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண
கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண
சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதானென
வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா
என்னம்மா…
வெட்கம் நெட்டி தள்தம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்த்தாலம்மம்மா நெஞ்சமே….
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே….
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ


படம்: றெக்க
இசை: D.இமான்
வரிகள் : யுகபாரதி
பாடியவர்:  நந்தினி

* தினேஷ்மாயா *

ட்ராகன் ஓவியம்

Friday, November 04, 2016



Dragon Art by..

* தினேஷ்மாயா *