உன் பார்வையால்

Friday, September 30, 2016


கல்கி - அவதாரம் எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது..

உன் பார்வையால்

இங்கொரு பிரளயமே உருவாகிவிட்டதே !

* தினேஷ்மாயா *

ஏதாவது ஓர் இடம்


கண் விழித்ததும் நீ தான் தெரிகிறாய்

கண் மூடினாலும் நீயே தெரிகிறாய்

கனவுக்கும் நினைவுக்கும் இடையே

ஏதாவது ஓர் இடம் இருந்தால் சொல்லேன் ?!

* தினேஷ்மாயா *

கண் சிமிட்டல்


உன் இரண்டு கண் சிமிட்டல்களுக்கான

அந்த சின்னஞ்சிறு இடைவெளியில்

என்னை நீ வீழ்த்திவிட்டாயடி !

* தினேஷ்மாயா *

எதற்கு எழுத்து ?


காதல் மூன்றெழுத்து

அட..

காமம் மூன்றெழுத்து

இவ்விரண்டும் சேர்கையில்

"ம்" - ஓரெழுத்து..

அதன்பின்னர்

எதற்கு எழுத்து ?

* தினேஷ்மாயா *

அறியேன் !


அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

இவைதான் சங்ககால புலவர்கள்,

பெண்ணிடம் கண்ட நற்குணங்கள்..

நான் உன்னிடம் கண்ட குணங்களை

அவர்கள் அறிகிலார்..

அதை விவரிக்கும் வார்த்தைகளை

நானும் அறியேன் !

* தினேஷ்மாயா *

நம்பி வா

நம்பி வா

இல்வாழ்க்கை மட்டுமல்ல

என் வாழ்க்கையையும் சேர்த்தே தருகிறேன்..

* தினேஷ்மாயா *

அகர முதல காதலி


அந்தோ !

ஆறுதல் சொல்ல எவருண்டெனக்கு ?

இருக்கிறாய் நீயென நம்பினேன்

ஈருடல் ஓருயிராய் இருந்தோமே

உன்னால் மட்டும் எப்படி முடிந்தது

ஊனமானேனடி நான்

எங்கே இருக்கிறாயடி, என்

ஏகாந்த பைங்கிளியே

ஐயம் கொள்ளாதே

ஒருமுறை மன்னித்துவிடு

ஓடோடி வந்துவிடு

ஔடதம் தந்தென்னை மீட்டுவிடு..

(பி.கு.: இக்கவியில், ஏகாந்தம் : இரகசியம், ஔடதம் : மருந்து )

* தினேஷ்மாயா *

என்ன பிடிவாதமடி உனக்கு ?


என்ன பிடிவாதமடி உனக்கு ?

எவ்வளவு சொல்லியும் என் மனதைவிட்டு நீங்காமல்

என்னுள்ளேயே அமர்ந்துவிட்டாயே நீ !

* தினேஷ்மாயா *

கருமை நிலா



அனைவரும் வெம்மையான நிலவை காண்கையில்

நான் அழகான கருமை நிறம் உடுத்திய நிலவை

கண்டு இரசித்துக்கொண்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

நீ எதற்கு ? சொல் !


நீ என்னருகில்

இருந்தால் என்ன ?

இல்லாவிட்டால் என்ன ?

உன்னை நேசிக்க மனம் போதுமடி..

நீ எதற்கு ? சொல் !

* தினேஷ்மாயா *

காரணம் தேவையில்லை..



கவிதை எழுத காரணம் தேவையில்லை..

காதல் மட்டும் என்ன காரணம் சொல்லிவிட்டா வருகிறது ?

* தினேஷ்மாயா *

ஜீவ சமாதி



மனமும் உடலும் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டு

இறைவனோடு ஒன்றர கலக்கும் நிலையே

ஜீவ சமாதி..

ஓம் நம சிவாய ஓம்

* தினேஷ்மாயா *

உன்னை உனக்கு உணர்த்தும்

Wednesday, September 28, 2016

Circumstances don't make the man, they only reveal him to himself
- Epictetus

* தினேஷ்மாயா *

Reaction

"It's not what happens to you, but how you react to it that matters"

- Epictetus

* தினேஷ்மாயா *

Wealth

" Wealth consists not in having many possessions, but having few wants "
- Epictetus

* தினேஷ்மாயா *

எல்லாம் அவனே !

Monday, September 26, 2016


அவிழ்க்க முடியாத முடிச்சுகளை அவிழ்ப்பவனும் அவனே

அவிழ்க்க முடியாத முடிச்சுகளை போடுபவனும் அவனே..

* தினேஷ்மாயா *

ஸ்கந்தாஸ்ரமம் திருவண்ணாமலை



    நேற்று திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீ ரமணாஸ்ரமம் சென்றேன். அங்கு தியானம் செய்தபிறகு, மலை மீது அமைந்திருக்கும் ஸ்கந்தாஸ்ரமம் சென்றேன். அங்கு செல்லும் வழியில் திருவண்ணாமலை கோவிலின் தோற்றம் கண்டு மெய்மறந்தேன். அந்த அற்புத காட்சிதான் இது..

* தினேஷ்மாயா *

சற்குரு

Monday, September 19, 2016


வாழ்க்கையின் அர்த்தம்

உயிரின்  அர்த்தம்

உலகின் அர்த்தம்

பேரண்டத்தின் அர்த்தம்

இவ்வுடலின் அர்த்தம்

ஜனனத்தின் அர்த்தம்

மரணத்தின் அர்த்தம்

அனைத்தும் அறிந்து எனக்கும்

உரைத்த சற்குரு .....

* தினேஷ்மாயா *

அமைதி


இத்தனை ஆண்டுகளாய்

எங்கெங்கோ தேடி

இன்று உமது விழிகளில்

கண்டுக்கொண்டேன்..

என் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும்

என் வாழ்க்கைக்கான அமைதியையும்..

"பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி"

* தினேஷ்மாயா *

காரணம் வேண்டுமா என்ன ?


உன்னை பார்த்தாலே கவிதை வந்துவிடுகிறது

இதைவிட வேறு காரணம் வேண்டுமா என்ன ?

* தினேஷ்மாயா *

வறட்சி


நீயில்லா என் கவிதை

வார்த்தைகள் இல்லாமல்

வறண்டு கிடக்கிறது..

* தினேஷ்மாயா *

நான் மனிதன்


நான் சில தவறுகள் செய்திருக்கிறேன்..

என் தவறுகளை திருத்திக்கொண்டேன்..

சில நானாக, சில பிறர் சொல்லி...

ஆம்..

நான் மனிதன்..

தவறுகள் செய்வது மனித இயல்பு

அதை திருத்திக்கொண்டு வாழ்வதே

மனிதனுக்கு அழகு..

தவறு என்று தெரிந்தும்,

திருத்திக்கொள்ளாமல் வாழ்வதுதான் இழுக்கு..

* தினேஷ்மாயா *

தவறு எங்கே நடக்கிறது ?

Friday, September 16, 2016


பொருளாதாரம் சொல்கிறது, இந்தியாவின் தனி மனித வருமானம் சுமார் ரூ.75,000/-

அதே பொருளாதாரம்தான் சொல்கிறது, இந்தியாவில் 29% மக்கள் வருமையில் இருக்கின்றனர் என்று.

இதில் தவறு எங்கே நடக்கிறது?

வெறும் கணக்கை வைத்துக்கொண்டு, மக்களின் உண்மையான அவல நிலையை ஒருபோதும் அரசாங்கத்தால் புரிந்துக்கொள்ள முடியாது..

* தினேஷ்மாயா *

ரத்தம்


காவிரியில் தண்ணீர்தான் கேட்டோம்..

வந்ததோ ரத்தம் மட்டுமே !

* தினேஷ்மாயா *

4/19

Thursday, September 15, 2016


    நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 பதக்கங்கள் வென்றது. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்.
இந்த போட்டியில் மொத்தம் 118 பேர் கலந்துக்கொண்டனர். 

     தற்போது நடந்துக்கொண்டிருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 பதக்கங்கள் வென்றுள்ளது. இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம். இதில் கலந்துக்கொண்ட வீரர்கள் மொத்தம் 19 பேர் மட்டுமே.

2/118 
4/19

என்ன சொல்ல.. உண்மையான திறமை அனைவரிடத்திலும் இருக்கிறது. அவர்களை ஊக்குவிக்கும் மனம்தான் நம்மிடையே குறைவு.

* தினேஷ்மாயா *

கேள்வி கேட்கிறாய் ?

Wednesday, September 07, 2016


கண்கள் பார்ப்பதற்குத்தான் 

நீ என்ன ,

உன் கண்களால்  என்னை கேள்வி கேட்கிறாய்  ?

* தினேஷ்மாயா *

மாற்றம்

Tuesday, September 06, 2016

நிச்சயம் தேவை

எனக்கொரு மாற்றம்..

இந்த ஏமாற்றங்களை

நான் எதிர்கொள்ள..

* தினேஷ்மாயா *

வடு



காதலால் ஏற்பட்ட வடு !

நிச்சயம் ஒருநாள் மறைந்தே போகும்..

உண்மையான துணையுடன் இணையும்போது !

* தினேஷ்மாயா *

உதவி

எனக்கு உதவ யாருமில்லை என்று

வருந்தியபோதுதான் புரிந்துக்கொண்டேன்..

அந்த இறைவன் எப்போதும் துணை இருக்கிறான்

என்றும் அவன் எனக்கு உதவுவான் என்று..

* தினேஷ்மாயா *

யாருமில்லை

இவ்வுலகில் 700 கோடி மக்கள் இருந்தாலும்

உனக்கென ஒருவருமில்லை என நீ

நினைக்கும் அந்த தருணம்

மிக கொடுமையானது..

* தினேஷ்மாயா *

விழித்துக்கொள்

மற்றவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை

உன்மீது திணித்து உன்னை அந்த வாழ்க்கையை வாழ சொல்வார்கள்.

விழித்துக்கொள்..

* தினேஷ்மாயா *