அவன் அருளால்..

Thursday, July 30, 2015


சிவபுராணம் சொல்கிறது...

“அவன் அருளாலே.. அவன் தாள் வணங்கி..”

அதாவது, அவன் அருள் இருந்தால் மட்டுமே, அவனை வணங்க முடியும்..

* தினேஷ்மாயா *

வருவாயா


நிறைய விளக்குகள் வாங்கி வைத்திருக்கிறேன்

நம் வீட்டில்...

நீ வந்து விளக்கேற்றுவாய் என்று -

விரைவில் !!

* தினேஷ்மாயா *

அன்புள்ள சந்தியா



அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்பார்த்து.......
இங்கே எனது இதயம்
இங்கே எனது இதயம்

அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்

எந்த பக்கம் நீ செல்லும் போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடி கொண்டாலும் மறையாதே......
தூரல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே....
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலை படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை.....
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்

தாயைக் கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப் போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா..............
என்றோ யாரோ உன் கையை தொடுவார் 
இன்பம் துன்பம் எல்லாமே அறிவார்
அன்பே அது நானாக கூடாதா 
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை .....
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்பார்த்து.......
ஓ ........................
அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
ஓ ......................


படம் : காதல் சொல்ல வந்தேன்
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் :  கார்த்திக்
வரிகள் : நா.முத்துகுமார்

* தினேஷ்மாயா *

பார்த்தாயா ?


நாம் - மொட்டைமாடியில் அமர்ந்து

பேசவேண்டாம் என்று அன்றே சொன்னேன்..

கேட்டாயா நீ..

இன்று நம் காதல் ப்ளூட்டோ கிரகம்வரை பரவியிருக்கிறது பார்...

* தினேஷ்மாயா *

காதல் பட்டம்



துருவங்களைப் பற்றி படித்து

அறிவியல் பட்டம் பெறுவதைவிட,

உன் -

புருவங்களைப் பற்றி படித்து

காதல் பட்டம் பெற விரும்பிகிறேனடி..

* தினேஷ்மாயா *

இன்றென்ன தேரோட்டம் ?



ஆடி மாதம்..

எப்போதும் வெள்ளிக்கிழமைதானே தேரோட்டம்..

இன்றென்ன தேரோட்டம் உன் தெரு வீதிகளில் ?

ஓ !! நீ தெருவில் நடந்து செல்கிறாயோ !!

* தினேஷ்மாயா *

ப்ரேமம்


  சமீபத்தில் ப்ரேமம் திரைப்படம் பார்த்தேன். என்னுள் மறைந்திருந்த காதலை வெளியே கொண்டுவந்து என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றியது. இரண்டுமுறை திரையரங்கம் சென்று பார்த்தேன். படம் முழுதும் நாம் படத்தில் மூழ்கிவிட்டேன். காதல், நட்பு, நேசம், பிரிவு, வலி, மீண்டும் ஓர் காதல், இப்படி இன்னும் பல விஷயங்களை அள்ளிக்கொடுத்தது. என் வாழ்வில், காக்க காக்க திரைப்படத்தை என்னவளுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறேன். அத்தோடு, இந்த படமும் சேர்ந்துக்கொண்டது. நானும் அவளும் சேர்ந்து இப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதிகம் இல்லாவிட்டாலும் கொஞ்சம் என்னை ஆழமாக பாதித்துவிட்டது இப்படம்.

அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

* தினேஷ்மாயா *

தலை சாய..



தலைசாய்ந்து படுக்க என் மடி இருக்க,

நீ ஏன் எங்கோ தலை சாய்க்கிறாய் கண்ணே ?

* தினேஷ்மாயா *

கலாம் அவர்களுக்கு நம் சலாம்...

Wednesday, July 29, 2015


அப்துல் கலாம்..

    இப்பெயருக்கு சொந்தக்காரர் இந்து, கிறித்தவர், இசுலாமியர் இப்படி இன்னும் எந்த மதமானாலும், என்ன இனமானாலும் அனைவரும் சொந்தம் கொண்டாடும் ஒருவர்.

    சிகரம் சரிவதை கண்டதில்லை. இன்று காண்கிறேன். 27-07-2015... இந்நாளை என் நாட்காட்டியில் இருந்து கிழிக்க மனம் வரவில்லை... அந்த நாள் வராமலே இருந்திருக்கலாமோ என்றும் கூட எண்ணம் தோன்றும்.

    எளிமையில் சிகரம் நீ. ஒழுக்கத்தின் இமயம் நீ. இளைஞர்களின் எழுச்சி நீ.

     பலர் பேசுவார்கள், சில செய்வார்கள். ஆனால் உங்களைப்போன்ற ஒருவர் தான் சொன்னபடி செய்யவும், வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டுவார்கள்.

  உம்மைப்பற்றி எழுத பேனாவை எடுத்தால், என் பேனா மை கூட கண்ணீரைத்தான் உமிழ்கிறது ஐயா. 

   இதுபோன்றதொரு மனிதனை மீண்டும் இப்பூமித்தாய் காணமுடியுமா என்பது சந்தேகமே.

     கனவு - உம்முடைய தாரக மந்திரம். இந்நாள் கனவாக இருக்ககூடாதா என்று நினைக்கிறது மனம்.

         நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததால் புனிதன் ஆகினேன் நான். உம் கருத்துக்கள், உம் செயல்கள், உம் சாதனைகள், உம் எளிமை, உம் ஒழுக்கம், உம் பன்முக மற்றும் தொலைநோக்குப் பார்வை எல்லாவற்றாலும் ஈர்க்கப்பட்டு உங்களை கதாநாயகனாக கொண்டிருக்கும் உலக இளைஞர்களில் நானும் ஒருவன்.

     நம் நாட்டின் மீது நீவிர் எங்களுக்கு கொடுத்த கடமையை திறம்பட செய்து முடிப்போம் ஐயா.

       சரித்திர நாயகன் கலாம் அவர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த சலாம்..

       நீங்கள் இம்மண்ணில் புதைக்கப்படவில்லை... விதைக்கப்பட்டுள்ளீர்கள்..

- கண்ணீருடன் - 

* தினேஷ்மாயா *

வினா வினா ஒரே வினா

Saturday, July 18, 2015



வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா? மனிதனா?

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் ஏது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணற் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ ?
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ ?

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில்
சிக்குதே சிக்குதே மனது பாவம் எனும் பொய் வலையில்

அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும்
இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும்
அன்பே உயரிய ஆவனம் செய்த அறம் நம்மை காத்திடும்

வினா வினா ஓர் வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா? மனிதனா?

கத்தியா புத்தியா இரண்டில் வேல்வதேது சொல் மனமே
புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே

பாறை மேலே தேரை போனால் பாத சுவடு இல்லையே
வேரை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே

கூறா மனமே ரகசியம்
உலகில் உறவே அவசியம்

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா? மனிதனா?

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணல் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ ?
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ ?

பூபாளம் கேட்காதோ ?
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ ?

படம்: பாபநாசம்
குரல்: ஹரிஹரன்
இசை: ஜிப்ரான்
வரிகள்: நா.முத்துகுமார்

* தினேஷ்மாயா *

சமீபத்தில் ரசித்த திரைப்படங்கள்


    சமீபத்தில் பாபநாசம் திரைப்படம் பார்த்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு மனம் நிறைவான படம் பார்த்தது போல் இருந்தது. மலையாள படத்தின் தழுவல் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கேற்றது போல் படமாக்கியது வரவேற்கத்தக்கது. விமர்சனம் எழுத எனக்கு பிடிக்காது. திரையரங்கில் சென்று படத்தை பாருங்கள். ஒரு அருமையான படம்.





      பாகுபலி - அதிகம் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் இருக்கும் குறைகளைவிட நிறைகளே அதிகம். நம் இந்திய சினிமாவை ஒரு படி மேலெடுத்து செல்லும் படம். தவறாமல் திரையரங்கில் பாருங்கள். 

* தினேஷ்மாயா *

உயிரின் உயிரே உனது விழியில்


உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில் 
தோழி போல மாறுவேன் 
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் 
தாயை போல தாங்குவேன் 
வேறு பூமி வேறு வானம் 
தேடியே நாம் போகலாம் 
சேர்த்து வைத்த ஆசையாவும் 
சேர்ந்து நாமங்கு பேசலாம் 

அகலாமலே அனுகாமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பாதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

படம்: தாண்டவம்
இசை: G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: சத்யபிரகாஷ், G. V. பிரகாஷ், சைந்தவி,
பாடல் வரிகள்: நா.முத்துகுமார்

* தினேஷ்மாயா *

என்ன பிரயோசனம் ?


நிலவை தொட்டாச்சு..

செவ்வாய் கிரகத்தை தொட்டாச்சு..

சக மனிதனின் பசிக்கு ஒரு தீர்வை காண முடியவில்லை !!

* தினேஷ்மாயா *

தர்மத்தின் வலி செல்


தர்மத்தின் வழி செல்ல செல்ல

கர்மத்தின் வலி குறையுமப்பா ..

- அகத்தியர் -

* தினேஷ்மாயா *

இசையஞ்சலி


தன் இசையைப்போல தானும் இசையோடு கலந்துவிட்ட மெல்லிசை மன்னருக்கு என் இசையஞ்சலி !!

* தினேஷ்மாயா *

வீரம்


சில நேரங்களில்

பொறுமையும் ஒருவகை வீரம் தான்..

* தினேஷ்மாயா *

திருமண சந்தை


     இன்றைய திருமண சந்தையில், மணப்பெண்ணும் மணப்பையனும் வியாபார பொருட்களாகவே பார்க்கப்படுகின்றனர். அழகும் தகுதியும் வசதியுமே விலையை நிர்ணயம் செய்கின்றன. திருமணத்தில் மனதுக்கு இடமே இல்லை இங்கு .. பணத்துக்குதான் அதிக இடம்..

* தினேஷ்மாயா *

மேக அலங்காரம்

Thursday, July 09, 2015


உஷ்ணமான உன் மேனியில் பட்டு

ஆவியான மழைத்துளிகள்தான்

மேகமாய் வானத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது..

* தினேஷ்மாயா *

தேனீ


தேனீக்கு தெரியும்

தேன் - நீ என்று..

அதான் -

பூக்களை விடுத்து

உன்னையே வட்டமடித்துக்கொண்டிருக்கிறது..

* தினேஷ்மாயா *

வட துருவம்...


என் காதலை தண்ணீரில் எழுதிவைத்து காத்திருக்கிறேன்..

வடதுருவ தண்ணீரில் !

நீ வரும்வரை என் காதல் உறைந்த நிலையிலேயே இருக்கும்..

உனக்காக மட்டுமே என் காதலும் என் இதயமும் உருகும் பெண்ணே..

* தினேஷ்மாயா *

நிராகரிப்பு


        மனிதன் இயற்கையை நிராகரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இயற்கை அன்னை இன்னமும் மனிதனை அரவணைத்து அடைக்கலம் தருகிறாள். இயற்கை மனிதனை நிராகரிக்கும்போது அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என்பதை மனிதன் உணர்வானா ?

* தினேஷ்மாயா *

உனக்குள் உறைந்தவன்


உரக்க சொல் பெண்ணே..

உன் காதலன் நான் தான் என்று..

உலகம் அறியட்டும்..

உனக்குள் உறைந்தவன் நான்தான் என்று..

* தினேஷ்மாயா *

போதை


அதென்ன ?

இந்த பெண்கள் மட்டும் திரும்பி பார்க்கையில்

அப்படியொரு போதை !!

* தினேஷ்மாயா *

வினா விடை


வினா என்னிடம்..

அதன் விடை உன்னிடம்..

எப்போதாவது

நான் விடையாக இருக்கையில்

நீ வினாவாக மாறுவாய்..

* தினேஷ்மாயா *

புத்தகம்



ஓர் புத்தகம் எழுதினேன்..

உன் பெயர் தான் புத்தகத்தின் தலைப்பு..

அதன் பக்கங்கள் அனைத்தும்

உன் பார்வையாலே நிரம்பியிருக்கின்றன..

அந்த புத்தகத்தை என்னால் மட்டுமே வாசிக்கமுடியும்..

* தினேஷ்மாயா *

உன்னைத்தவிர


மண்ணில் புதைக்கும் அனைத்து மக்கிப்போகும்..

விதையை தவிர..

என்னுள் செல்லும் அனைத்தும் தொலைந்துப்போகும்..

உன்னைத்தவிர..

* தினேஷ்மாயா *

கண்ணீரில் வாழ்க்கை

Wednesday, July 08, 2015


மீன்கள் தண்ணீரில் வாழும்.

காதலர்கள் கண்ணீரில் வாழ்வார்கள்.

* தினேஷ்மாயா *

உயிர் !!



இதுதான் உயிரின் ஆதாரம் என்று அறிவியல் சொல்கிறது.

நீதான் என் உயிரின் ஆதாரம் என்று என் இதயம் சொல்கிறது..

* தினேஷ்மாயா *

கைது செய்யுங்கள்



கைது செய்யுங்கள் வானவில்லை..

என்னவளை தாக்கிவிட்டு தப்பித்து சென்றுவிட்டது..

* தினேஷ்மாயா *

நேரமில்லை



புன்னகைக்க நேரமில்லை..

உன் புன்னகையை ரசித்துக்கொண்டே இருப்பதால்..

* தினேஷ்மாயா *

இரும்புத்திரை

Tuesday, July 07, 2015


வசதிபடைத்தோர்க்கும் ஏழைக்கும் இடையே ஒரு உறுதியான இரும்புத்திரை இருக்கிறது. அதை தகர்த்தெரியாமல் இங்கே சமத்துவம் என்பதை கொண்டுவரவே முடியாது.

* தினேஷ்மாயா *

இயலாமை

Thursday, July 02, 2015


     இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், இது மட்டும் போதாது.

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது பலருக்கும் தீமைபயக்கும் என்பதால் மது விற்பதை தடுக்க நீதிமன்றம் ஏதும் நடவடிக்கை எடுக்கலாமே ! அரசாங்கத்திற்கு அதிக வருமானம் அதிலிருந்துதான் வருகிறது என்பதால் அதில் கைவைக்க தயக்கம் காட்டுகிறதோ ?

  இது நீதித்துறையின் இயலாமையை காட்டுகிறதா ?

* தினேஷ்மாயா *