விரைந்து வா

Wednesday, April 01, 2015



என் வாழ்க்கை என்பது உன்னோடு தொடர்புடையது..

நீ இல்லாமல் என் வாழ்க்கையை நான் வாழ முடியாது..

உன் வருகைக்காக என் வாழ்க்கையை தொடங்காமல் இருக்கிறேன்..

விரைந்து வா .. 

விளக்கேற்றி துவக்குவோம்..

நன்றி: கண்கள் உபயம் - இணையம்..

* தினேஷ்மாயா *

காதல் தாண்டவம்


என் மனதில் தினமும் நீ -

காதல் தாண்டவம் கொண்டிருக்கிறாய்..

* தினேஷ்மாயா *

உன் நிறம்


செந்நிறம்..

உன் நிறம்..

* தினேஷ்மாயா * 

நாற்பண்புகள்


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

பெண்களுக்கான நாற்பண்புகளின்

ஒரே பிறப்பிடம் நீதானோ ?

* தினேஷ்மாயா *


தோழியின் கூற்று


தலைவனின் பிரிவால் வாடும்

தலைவியின் ஏக்கத்தை

தோழியின் கூற்று எடுத்துரைக்கும்..

தலைவியின் பிரிவால் வாடும்

தலைவனின் ஏக்கத்தை

எடுத்துரைக்க எந்த தோழனும் இல்லையடி..

* தினேஷ்மாயா *