வலி

Wednesday, February 22, 2012



உனக்கு என்ன தெரியும்
என் வலியைப் பற்றி...

இரண்டு இதயத்தோடு
நீ இருக்கிறாய்...

என் இதயத்தையும் உனக்கு
கொடுத்துவிட்டு,
இதயம் இல்லாதவனாய் நான்...

-என்றும் அன்புடன்..


தினேஷ்மாயா

இன்னும் கொஞ்ச நாள்...



இணையதிற்கு அடிக்கடி என்னால் பழையபடி வர நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தை படிப்பதற்காக எடுத்துக்கொள்வதால், வலையில் எழுத முடியவில்லை...

இன்னும் கொஞ்ச நாள் கழித்து பழையபடி என் எழுத்தை தொடர்வேன்..

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

மெரினா

Saturday, February 04, 2012



இன்று “மெரினா” திரைப்படம் பார்த்தேன்..

ஒரு சில திரைப்படங்கள் உயிரை தொட்டுவிட்டு செல்லும்.. அதில் இதுவும் ஒன்று..

நல்ல கதை.. நல்ல கருத்து...

குழந்தைகள் படிக்க வேண்டுமே தவிர வேலைக்கு செல்ல கூடாது, அவர்கள்தான் நம் நாட்டின் வருங்கால தலைவர்கள் என்பதை சரியாக மக்களுக்கு உரைக்கும்படி சொல்லியிருப்பது அருமை...

இடையிடையில் வரும் காதலர்களின் காட்சிகள் இன்றைய காலகட்ட காதலர்களின் உண்மை நிலையை அப்பட்டமாய் சொல்கிறது... நல்ல நகைச்சுவையான தனி திரைக்கதை இங்கே ஓடுகிறது...

உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் நட்பிற்கும் அதிக மதிப்பு கொடுக்கும் கதாபாத்திரங்களை அமைத்திருப்பது கதைக்கு பலம் சேர்கிறது..

ஆங்காங்கே வரும் எம்.ஜி.ஆர் பாடல்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை அள்ளுகிறது...

எல்லாவற்றையும்விட, படம் முடிந்ததும் தமிழ்தாய் வாழ்த்து பாட்டு போட்டு முடித்தமைக்கு என் தனிப்பட்ட சல்யூட்...

வருந்ததக்க விஷயம் என்னவென்றால், படம் பார்க்க வந்த 200 பேரில் என்னோடு சேர்த்து வெறும் 20-30 பேர் மட்டுமே தமிழ்தாய் வாழ்த்து முடியும் வரை அவர்கள் இடத்திலேயே இருந்தனர். மற்றவர்கள் தங்கள் நடையை கட்டினர்.. அவர்கள் இன்னும் வெறும் பெயரளவில் மட்டுமே தமிழர்களாய் இருக்கின்றனர் என்பதை புரிந்துக்கொண்டேன்...

அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கவேண்டிய திரைப்படம்...


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா