நேற்று

Friday, October 18, 2024




நேற்று உறங்க செல்லும் முன்

ஒரு கவிதை தோன்றியது

காலையில் எழுதிக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்

காலையில் எழுந்ததும் யோசித்துப் பார்த்தேன்

அந்த கவிதை நிம்மதியாக

சொர்க்கத்தில் ஓய்வெடுப்பதை அறிந்து

ஆனந்தம் கொண்டேன்..


* தினேஷ்மாயா *

ஞாபக மறதி



 சில மாதங்களாக

அதிக ஞாபக மறதி ஏற்படுகிறது.

Wise- ஆகி வருகிறேனா ?

அல்லது

வயாசாகி வருகிறேனா ?


* தினேஷ்மாயா *

உண(ர்)வு

Wednesday, July 24, 2024

உணவை நாம் மட்டும் உண்ணும்போது

அது உள்ளே சென்று 

கழிவாகிறது..

அதே உணவை, உணர்வோடு பிறருடன் பகிர்ந்து உண்ணும்போது

அது மனதுக்குள் சென்று

மகிழ்ச்சியாகிறது.....

- ப.பி - 

* தினேஷ்மாயா * 

10 Things Women Only Do With Men They Love !

Tuesday, April 02, 2024

1. She’ll want to know everything about you

2. Maternal instincts kick in

3. Supporting and encouraging your dreams

4. She accepts you the way you are

5. Staying with you through the lows

6. Getting close to your loved ones matter to her

7. She won’t be afraid to get vulnerable

8. She trusts you with her secrets

9. You’re her priority, and it shows

10. She’s not afraid to make sacrifices


Source: 

https://herbeauty.co/relationships/10-things-women-only-do-with-men-they-love


* DhineshMaya *

திருக்குறள் - 64

Friday, February 02, 2024

அதிகாரம்: மக்கட்பேறு

திருக்குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.


விளக்கம்:

குடிக்கிறது கூழோ கஞ்சியோ அது நம்ம குழந்தை ஊட்டிவிடும் போது தேனாவும் பஞ்சாமிர்தமாவும் மாறிடும்..


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 53

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்: 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை.


விளக்கம்:

வாழ்க்கைத்துணை நல்லா அமைஞ்சுட்டா வாழ்க்கை சொர்க்கம்... இல்லனா நரகம்..


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 45

அதிகாரம்: இல்வாழ்க்கை

திருக்குறள்: 45


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.


விளக்கம்:

மனசுல தூய்மையும், உண்மையான அன்பும் இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்..


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 34

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்

திருக்குறள்: 34


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 

ஆகுல நீர பிற....    குறள்:34


விளக்கம்:

வாழ்வின் உயர்ந்த அறம் என்ன தெரியுமா?

மனசளவில் நல்லவரா இருங்க. அதுவே போதும்..


* தினேஷ்மாயா *



திருக்குறள் - 29

அதிகாரம்: நீத்தார் பெருமை

திருக்குறள்: 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது.


விளக்கம்:


நல்ல குணம் கொண்டவங்க, கோவப்பட மாட்டாங்க...


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 12

அதிகாரம்: வான் சிறப்பு

திருக்குறள்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 

துப்பாய தூஉம் மழை .


விளக்கம்:


மழை - நீர்


நீரால் தான் இங்கே சாப்பாடு கிடைக்கிறது. 

சிலருக்கு அந்த நீரே சாப்பாடாகவும் கிடைக்கிறது.


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 1

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

திருக்குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு.


விளக்கம்:

தமிழுக்கு - அ


உலகிற்கு - சூரியன்


ஆதி பகவன் - ஆதி பகலவன் !


இயற்கையை வழிப்பட்ட தமிழர் மரபை ஒத்து, இவ்விளக்கத்தை கொடுத்துள்ளேன்..


* தினேஷ்மாயா *

நீண்ட நாள் கனவு

 திருக்குறள் எனும் அதி அற்புத நூல், ஈரடி வெண்பாவில் அழகாக உலக நீதியை எடுத்து சொல்கிறது. அதை இக்காலத்தின் மக்களுக்கு இன்னமும் எளிதாக புரியும்வண்ணம் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் விளக்கிக்கூறி ஒரு நூல் வெளியிடலாம் என்பது என் நீண்ட நாள் கனவு...

1330 குறளுக்கும் அவ்வாறு எழுதுவது சாத்தியமா என முதலில் என் மனதே முட்டுக்கட்டைப் போட்டது.. முடியாது என்று நினைத்திருந்தால், உலகம் இந்த நிலைக்கு வந்திருக்காது.. முடியும் என்றே துவங்குவோம் என முடிவெடுத்துவிட்டேன்..

நூலாக வெளியிடும் எண்ணம் இருக்கிறது. அதற்கு முன் என்னால் முடிந்தவரை சில குறட்பாக்களை இங்கே பதிவிடுகிறேன்..

* தினேஷ்மாயா *

கருணைக் கடல்

இறைவனை கருணைக் கடலாய் பார்த்த என் விழிகள்

அவன் இரக்கமற்றவன் என்பதை நான் உணர்ந்த அந்நொடியில்

உண்மையை புரிந்துக்கொண்டவன் மனதில் எனக்கு இடமில்லை என

அவனே என்னுள் இருந்து நீங்கிவிட்டானோ என்னவோ ?

* தினேஷ்மாயா *

போதும்னு சொல்லிப் பழகு

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு”   - திருக்குறள்: 945


பொருள்: 

உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையல்லாத உணவினை உண்ணும் அளவிற்கு மேல் செல்ல மறுத்து அளவாக உண்டால் உணவினால் எவ்வித துன்பமும் இல்லை அவ்வுயிர்க்கு.

இக்குறளில்  இரண்டு விஷயங்களை காணலாம்

1. உடலிற்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாத உணவை உண்ண கூடாது

2. உடலுக்கு ஏற்ற உணவானாலும் அளவாகவே உண்ணவேண்டும்.


சுருக்கமான விளக்கம்:

புடிச்ச சாப்பாடாவே இருந்தாலும் போதும்னு சொல்லிப் பழகு !


* தினேஷ்மாயா *

மனிதம்

 முகம் தெரியாத பெயர் தெரியாத யாரோ ஒரு நபர் முகம் தெரியாத பெயர் தெரியாத வேறுயாரோ ஒரு நபர்மீது காட்டும் அன்புதான், மனிதம் இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.

நீங்கள் அந்த சாட்சியாக இருந்துப்பாருங்களேன்..

* தினேஷ்மாயா *

ஆசான்

வாழ்க்கை எனக்குப் புகட்டிய பாடம்

“ரெட்” திரைப்படத்தின் “கண்ணைக் கசக்கும் சூரியனோ” பாடலில் வரும் சில வரிகள். அதை இங்கே நான் ஏற்கெனவே பதிந்திருக்கிறேன். அது -


உலகத்தை நேசி..

ஒருவரையும் நம்பாதே..

உறங்கிய போதும்

ஒரு கண்ணை மூடாதே..


* தினேஷ்மாயா * 

புரியாத விடை

நீ என்னுடம் ஏன் பேசவில்லை 

என்பதில் எனக்கு - துளியும் 

சந்தேகமும் இல்லை

சலனமும் இல்லை..


ஆனால், காரணமேயின்றி

மீண்டும் ஏன் பேச ஆரம்பிக்கிறாய்

என நினைக்கையில்

பித்துப்பிடிக்கிறது..


* தினேஷ்மாயா *

மீண்டும் பைத்தியமானேன் !

 சுமார் ஏழாண்டுகள் கழித்து

தூக்கத்திலிருந்து அதிகாலையிலேயே விழித்து

இங்கே வலையில் கிறுக்க ஆரம்பித்துள்ளேன்

இதன் அர்த்தம் என்ன ?

தலைப்பை படியுங்கள்..

கவிதையின் அர்த்தமும்

என் மனதும்

புரியும் !

* தினேஷ்மாயா *

தேடல்

இவ்வுலகிற்கு உன் தேவை ஏற்படும்போது

நிச்சயம் நீ தேடப்படுவாய்...

அதுவரை ஓய்ந்திரு மனமே !

* தினேஷ்மாயா *

அவ்வளவு எளிதாக

அவ்வளவு எளிதாக 

மனதினுள் நுழையாதவர்கள்

அவ்வளவு எளிதாக 

மனதைவிட்டு நீங்குவதுமில்லை..

* தினேஷ்மாயா *


எது உண்மை

 

என் மீதான உங்களின் அன்பு

போலியானதாகவே தெரிகிறது..

என் மீது நீங்கள் காட்டும் வெறுப்பில்

அத்தனை உண்மை நிறைந்துள்ளது...

* தினேஷ்மாயா *

இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறேன்

Thursday, February 01, 2024


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

 நான் முன்னமே இங்கே பதிவிட்டிருக்கிறேன். ஒரு ஆறு மாதத்திற்கு இங்கே எந்த பதிவும் இல்லையென்றால் நான் உயிர்ப்புடன் இல்லை என்றும், ஒரு வருடத்திற்கு எந்த பதிவும் இல்லையென்றால் நான் உயிருடன் இல்லை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று.


நான் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே இந்தப்பதிவு.

நீண்ட பதிவாக இல்லையென்றாலும், இனி சிறு சிறு பதிவுகள் இங்கே அடிக்கடி நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்..


என்றும் பேரன்புடன்

* தினேஷ்மாயா *

People are Dead !!

Wednesday, November 22, 2023

 


Updatas are LIVE

But

People are DEAD !!


- DhineshMaya

மனது நனைந்தது...

 


எவ்வளவுதான் குடை பிடித்தாலும்

மழை என்னை நனைப்பதை

நிறுத்திக் கொள்வதில்லை !

இந்தப் பூவின் வாயிலாக

என் மனதை நனைத்துவிட்டது !!

* தினேஷ்மாயா *

Take the Lead !!

Saturday, October 14, 2023


      If there are more power centers or if there are more (so called) leaders in a group, the decision making will be hindered and the decisions will not be perfect and the crew members might lack motivation to work and contribute to the group.


       That's why a single, powerful leadership is required to lead the team towards success.


        If there is no one to lead, let you take the lead !!


- DhineshMaya - 

இறைவா இறைவா !!

Thursday, September 14, 2023


 ஏய் இறைவனே இறைவனே 

உந்தன் அருள் பொழிவாயா ?!

இதயத்தில் நிறைந்தே வழிவாயா ?!

என்னுள் நீ நிறைந்தால்

அதை விட எதை எதை

நான் கேட்பேன் ?!

நீ வருவாயா ?!


வாராயோ வாராயோ

எனக்கொரு கரம் தர வாராயோ ?!

பாராயோ பாராயோ 

உனக்கென விழும் துளி பாராயோ ?!


ஓஹோ ஓ...

தீராயோ தீராயோ 

நொடியினில் நெடுந்துயர் தீராயோ ?!

தாராயோ தாராயோ 

இதயத்தில் எரிபொருள் தாராயோ ?!


ஆடை நீதானே

என் மேடை நீதானே

என்னுள் என்னுள்ளே

ஆடும் ஆட்டம் நீதானே !!


கால்கள் நீதானே

என் காற்றும் நீதானே

என்னுள் என்னுள்ளே

ஓடும் ஓட்டம் நீதானே !!


இருளில் விழுவேன்

வலியினில் 

சுருண்டே அழுவேன் 

அருவனே

உனையே தொழுவேன்

கரம் தர உடனே எழுவேன்


இறைவா இறைவா

திசை கொடு 

இறைவா இறைவா 

இசைத்திடு

இறைவா இறைவா

அசைத்திடு 

இறைவா இறைவா


வாராயோ வாராயோ 

எனக்கொரு கரம் தர வாராயோ ?!

பாராயோ பாராயோ 

உனக்கென விழும் துளி பாராயோ ?!


தடைகளே கிடையாதே

எனக்கு 

நிறுத்திட தெரியாதே

எனக்கு 

அசைவது எல்லாமே

உனக்கு

நீ என்னுள்ளே !!


கருவறை நடனம்

உன் பொறுப்பு 

முடிவெனும் நடனம் 

உன் பொறுப்பு 

அதுவரை 

மனமெங்கும் நெருப்பு

நீதானே என் இறைவா !!


இருளாய் இருளாய்

இருளதன் புலறாய் 

புலறாய் புலறாய் 

புலறதன் கதிராய்

கதிராய் கதிராய் 

கதிரதன் ஒளியாய் 

ஒளியாய் ஒளியாய்

மனதினில் நிறைவாயோ ?!


இறைவா இறைவா

திசை கொடு 

இறைவா இறைவா 

இசைத்திடு

இறைவா இறைவா

அசைத்திடு 

இறைவா இறைவா


இறைவா இறைவா

திசை கொடு 

இறைவா இறைவா 

இசைத்திடு

இறைவா இறைவா

அசைத்திடு 

இறைவா இறைவா


இறைவா இறைவா

திசை கொடு 

இறைவா இறைவா 

இசைத்திடு

இறைவா இறைவா

அசைத்திடு 

இறைவா இறைவா


இறைவா இறைவா

திசை கொடு 

இறைவா இறைவா 

இசைத்திடு

இறைவா இறைவா

அசைத்திடு 

இறைவா இறைவா


இறைவா இறைவா

திசை கொடு 

இறைவா இறைவா 

இசைத்திடு

இறைவா இறைவா

அசைத்திடு 

இறைவா இறைவா


இறைவா இறைவா

திசை கொடு 

இறைவா இறைவா 

இசைத்திடு

இறைவா இறைவா

அசைத்திடு 

இறைவா இறைவா


திரைப்படம் : லக்ஷ்மி

இசை & குரல்: சாம் C.S.

வரிகள் : மதன் கார்கி


கண்ணீர் வரவைத்த வரிகள் !!!


* தினேஷ்மாயா *

தக்காளி சட்னி

Tuesday, August 22, 2023

இங்கே அனைத்து மனிதர்களும், தங்களுக்கென்று ஒன்று நடந்தால் மட்டுமே அதை பெரிதாக நினைத்து எதிர்வினை ஆற்றுகிறார்கள். பிறருக்கு அது நடந்தால் அதை ஒரு விஷயமாகவே கருதுவதில்லை.

தான் செய்யும் தவறு பெரிதாக தெரியாது. ஆனால் அதே தவறை பிறர் செய்தால் அது பூதாகாரமாக ஆக்குவார்கள். இது மனித இயல்பு என்பதை உணர்ந்தப் பின்னர், நிம்மதி என் மனதில் ஆட்கொண்டுவிட்டது.

இந்த  மனிதர்களே இப்படித்தான் என்கிற ஞானம் வந்தாகிவிட்டது. ஆகையால், நிம்மதியும் வந்தாகிவிட்டது.

இதை உணர்ந்து நீங்களும் நிம்மதி கொள்வீர்களாக ....

* தினேஷ்மாயா *


தனியே துணையே !

Wednesday, July 19, 2023



துணிவே துணை என்றிருந்த காலங்கள் உண்டு..

தனிமையே துணை என்றிருக்கும் காலமிது !!

* தினேஷ்மாயா *

கனம்


என் கண்ணீரின் கனம் 

300 கிராம் !!

ஆம்...

ஒரு மனித இதயத்தின் சராசரி கனமும்

300 கிராமே !!

* தினேஷ்மாயா *

வருமா ?


வலிப்போக்க யாராவது வழிப்போக்கன் வருவானா ??

* தினேஷ்மாயா *

Marriage !!



Until Marriage was a Relationship, it was so divine..

When Marriage turned out to be an Institution, all these problems started !!

- DhineshMaya

நெஞ்சமே நெஞ்சமே…

Friday, June 30, 2023


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


கண்ணோரம் கொட்டும் மின்னல்…

அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற…

வெக்கம் அங்கும் இங்கும்…

ரெக்கை கட்டுதே…


உன் வாசம் தாயாய் தலை கோத…

மனம் பூக்குதே…

நெற்றி முத்தம் வைக்குதே…

தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே…


பாடல் நீயே… ஓஓ…

நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…


தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்…

வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்…

என்னவோ என்னிலே…

வண்ணமாய் பொங்குதே…


ம்ம்… துள்ளும் பாட்டிலே…

எழும் விசை…

என்னை மீட்டுதே… ஓஓஓஓ…


நெஞ்சமே நெஞ்சமே…

பக்கம் நீ வந்ததாள்…

திக்கெல்லாம் வெள்ளி மீனே…


நீ தஞ்சமே தஞ்சமே…

உன்னை நீ தந்ததால்…

முள்ளெல்லாம் முல்லைத்தேனே…


ஓ ஓ… செல்லமே செல்லமே…

உள்ளங்கை வெல்லமே…

தித்திக்கும் முத்தமே…

கொஞ்சம் தாயேன்…


ஓ ஓ… செல்லமே செல்லமே…

உள்ளங்கை வெல்லமே…

அந்திபூ காட்டுக்கே கூட்டிப்போயேன்…

காட்டுக்கே கூட்டிப்போயேன்…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


திரைப்படம்: மாமன்னன் 

வரிகள்: யுகபாரதி 

இசை: ஏ.ஆர்.ரஹ்மான் 

குரல்: விஜய் யேசுதாஸ் & சக்திஸ்ரீ கோபாலன்


பல நாட்கள் கழித்து மனதை வருடும் ஒரு இன்னிசை !!
திரும்ப திரும்ப கேட்கிறேன்..

* தினேஷ்மாயா *

ரெஹானா பாத்திமா வழக்கு !


 

இன்றைக்கு கேரளா உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 

நிர்வாணம் என்பது எப்போதும் அருவருப்பானதல்ல என்று கூறியிருக்கிறது.

வழக்கின் சாரம்:

ரெஹானா பாத்திமா என்கிற சமூக செய்பாட்டாளர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதின் தன் மேலுடம்பில் உடை எதுவும் இல்லாமல் தன் குழந்தை தன் உடலில் வர்ணம் தீட்டுவதுபோல ஒரு வீடியோ. 

அதனால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து 13 நாட்கள் சிறையில் அடைத்தது கீழமை நீதிமன்றம். பின்னர் அவரை சிறையில் இருந்து கேரளா உயர்நீதிமன்றம் விடுவித்தும், இந்த வழக்கை இரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு ஆண் மேலாடை இன்றி சுதந்திரமாக செயல்படும் இந்த நாட்டில் பெண்ணுக்கு அவ்வாறு செயல்பட உரிமைகள் மறுக்கப்படுவதென்பதை எப்படி பார்ப்பது. அதற்காக அனைத்து பெண்களும் அந்த உரிமையை விரும்பவில்லை. ஆனால் அப்படி விரும்பும் பெண்களுக்கு அந்த உரிமைகளை மறுப்பது எப்படி நியாயமாகும்?

ஒரு பெண்ணுக்கு தன்னுடைய உடல் மீது முழு சுதந்திரமும் அதிகாரமும் இருக்கிறது. அது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது.

அந்த வீடியோவில் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதென்பதை ஒரு கலையாக மட்டுமே அவர் காண்பிக்க விரும்புகிறார். அதில் கொச்சையாக எதுவும் இல்லை. அது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது. 

ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான உறவென்பது ஒரு புனிதமான உறவு. அதை இங்கே எவராலும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஒரு தாய் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதால் அந்த குழந்தையை எந்த விதத்திலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை.

ஒரு ஆண் குழந்தை தன் தாயின் மேலுடம்பை பார்த்து வளரும்போது, பிற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்பது பாத்திமா அவர்களின் வாதம். அது ஏற்புடையதும் கூட.

ஒரு பெண் தன் உடம்பை இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு ஆணாதிக்க சமுதாயம் எப்படி முடிவு செய்ய முடியும்? அது அந்த பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ? அவளுக்கான சுதந்திரம் இல்லை என்றுதானே அர்த்தம்?

நீங்கள் கலாச்சார காவலர்களாக நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

காலவெள்ளத்திற்கு ஏற்ப கலாச்சாரம் தன்னை தகவமைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்கும். அதற்கு எவரின் காவலும் தேவையில்லை..

ஆண் பெண் அனைத்து விதத்திலும் சமம் என்பதை தினம்தினம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போல. அப்போதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்திற்குப் புரியுமோ ?


* தினேஷ்மாயா *

நன்றி !!

Tuesday, June 27, 2023


 

நான் இப்போது அதிகம் இங்கே எழுதுவதில்லை. நேரம் கிடைக்கவில்லை என்பது மட்டுமே காரணம். இன்னமும் அதே வேகம் இருக்கிறது. சிந்தனை மேலும் மெருகேறியிருக்கிறது, பார்வை விசாலமடைந்திருக்கிறது, எல்லாவற்றிலும் ஒரு தெளிவும் எதையும் புது கோணத்தில் அணுகும் ஆற்றலும் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

என் ஆசையெல்லாம், இப்போது ஓடுவதுபோல இல்லாமல், பொறுமையாக நகரும் வாழ்க்கை வேண்டும். அப்போது என் வலைப்பக்கத்தில் அதிகம் அதிகம் எழுதவேண்டும். அது விரைவில் நடந்தேறும். 

அதுவரை, நான் இங்கே எழுதினாலும் சரி எழுதாவிட்டாலும் சரி, அடிக்கடி என் வலைப்பக்கத்தை வந்து பார்த்துவிட்டு செல்லும் உங்களைப்போன்ற புனித ஆத்மாக்களுக்கு என் உளங்கனிந்த நன்றி !!!

எனக்காக இல்லாவிடினும், உங்களுக்காகவாவது இனி நான் அதிகம் எழுத முயல்கிறேன்.

* தினேஷ்மாயா *

உண்மையான காதல்




 தினமும் காதல் மொழிகளை பரிமாறிக்கொள்வது மட்டுமே காதல் ஆகிவிடாது !

தடைகள் ஏற்படும்போது, வாழ்வில் கடக்க முடியாத தருணங்கள் வரும்போது உண்மையான காதல் சரியான செயல்பாடுகள் வாயிலாக தானாகவே வெளிப்படும் !!

- From the movie "Hello Meera"

* தினேஷ்மாயா *

நம்பிக்கை

Thursday, May 18, 2023


 

எல்லாம் ஒரு நாள் சரியாகிடும்

வசந்தம் நம் பக்கம் வீசும்

வாழ்க்கை இனிமையாகும்

முயற்சிகள் கைகூடும்

என்கிற நம்பிக்கையில்தான்

வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கிறது..


நடக்கும்!!

நல்லதே நடக்கும் !!


* தினேஷ்மாயா *

ஏன் நீங்கள் தலித்தா ?

Saturday, April 15, 2023

சாக்ரடீஸை படியுங்கள் என்றபோது  நீங்கள் கிரேக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை


கார்ல் மார்க்ஸை படியுங்கள் என்றபோது  நீங்கள் யூதனா என்று கேள்வி எழுப்பவில்லை


ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள் என்றபோது  நீங்கள் ஜெர்மானியனா என்று கேள்வி எழுப்பவில்லை


வ்ளாடிமிர் லெனினை படியுங்கள் என்றபோது நீங்கள் ரஷ்யனா என்று கேள்வி எழுப்பவில்லை


எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள் என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா என்று கேள்வி எழுப்பவில்லை


ஜான் லாக்கை படியுங்கள் என்றபோது  நீங்கள் சுதந்திரவாதியா என்று கேள்வி எழுப்பவில்லை


ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள் என்றபோது நீங்கள் கியூபனா என்று கேள்வி எழுப்பவில்லை


நெல்சன் மண்டேலாவை படியுங்கள் என்றபோது நீங்கள் தென்ஆப்பிரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை


ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள் என்றபோது நீங்கள் அமெரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை


மார்ட்டின் லூதர் கிங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் நீக்ரோவா என்று கேள்வி எழுப்பவில்லை


சார்லஸ் டி கோளலை படியுங்கள் என்றபோது நீங்கள் பிரெஞ்சுக்காரனா என்று கேள்வி எழுப்பவில்லை


வில்லியம் வாலஸை படியுங்கள் என்றபோது நீங்கள் ஸ்காடிஷ்ஸா என்று கேள்வி எழுப்பவில்லை


மாவோ சேதுங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் சீனனா என்று கேள்வி எழுப்பவில்லை

ஆனால்.....

பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த, 

உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்த, 

15000 பக்கங்களை எழுதிய, 

55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட, 

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை வலியுறுத்திய, 

காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காக போராடிய, 

சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவிற்குள் போராடிய 

“பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt)” அவர்களை படியுங்கள் என்றால் மட்டும், 


“ஏன் நீங்கள் தலித்தா” என்று மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது.!? 


 - படித்தில் எனக்கு பிடித்தது


* தினேஷ்மாயா *

காற்றோடு பட்டம் போல



காற்றோடு பட்டம் போல

இந்த காற்றோடு பட்டம் போல


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?


எங்கோ போனது 

என்னிடம் வந்து சேருமா…?


ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று


நம் வாழ்க்கை எப்போதும்

கண்ணாமூச்சியா…?


இந்த மண் மேலே இப்போது

நான் தான் சாட்சியா…?


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


பக்கத்துல வாழும்போது

உன்னருமை தெரியல


உன்னருமை தெரியும்போது

பக்கம் நீ இல்ல


தன்னந்தனி படகுபோல

தத்தளிக்கும் வாழ்க்கை போல


தண்டனைகள் ஏதும் இல்ல

இந்த மண்ணுல


நீரிலே பூத்தாலும்

பூக்களின் வாசங்கள்

தண்ணியிடம் சேர்வதில்லையே

என்ன விதியோ?


அன்பிலே அன்பிலே

இந்த மனம் வாடுதே

கண்ணிலே ஈரம் சேருதே

கல்லிலே பூவும் பூக்குதே


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


சின்னதொரு சோற்றைதானே

சிற்றெறும்பு கூடியே

தன்னுடைய வீட்டைநோக்கி

கொண்டு போகுமே


உள்ளபடி சொல்வதென்றால்

சிற்றெறும்பு போலக்கூட

சொந்தங்களை காக்கவில்லை 

இங்கே நானுமே 


கோயில்தான் போனாலும்

புண்ணியம் செய்தாலும்

என்னுடைய பாவம் தீருமோ

இந்த உலகில்


இன்றுதான் இன்றுதான்

என் முகத்தை பார்க்கிறேன்

கண்ணிலே ஈரம் சேருதே

கல்லையும் காலம் மாற்றுதே


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?


எங்கோ போனது என்னிடம்

வந்து சேருமா…?


ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று


நம் வாழ்க்கை எப்போதும்

கண்ணாமூச்சியா…?


இந்த மண் மேல இப்போது

நான் தான் சாட்சியா…?


திரைப்படம்: அயோத்தி

வரிகள்: சாரதி

இசை: N.R.ரகுநாதன்

குரல்: பிரதீப் குமார்



* தினேஷ்மாயா *

நல்லவர்கள் கூடும் போது..


நல்லவர்கள் கூடும் போது

நன்மைகளும் கூடி போகும்

கண் இமைக்கும் நேரம் போதும்

எல்லாம் மாறுமே


புன்னகையின் வாசமின்றி

இன்று வரை பூமி மேலே

நிம்மதியில் வாழ்ந்ததாக

இல்லை யாருமே


துன்பமும் இன்பமும்

கற்றுத் தரும் காலமே

நம்பினால் யாவும் மாறுமே

நம்பு மனமே


உன்னையும் என்னையும்

ஒன்றிணைக்கும் வாழ்விலே

அன்புதான் பாலமாகுமே

அன்புதான் பாலமாகுமே…


ஆராரோ ஆரிராரோ ஆரிராரிராே

இன்று யார்யாரோ செய்த அன்பால் 

நெஞ்சம் பூத்ததோ

எல்லா நாளுமே

விதை நெல்லாய் ஆகுமே

அன்பால் யாருமே பக்கம் வந்து

நின்றால் போதுமே


சிறு வெள்ளைத் தாள் மீது

பல வண்ணம் சேரும் போது

அங்கே தான் உண்டாகும்

தன்னால் மாற்றமே


இந்த நம்பிக்கை ஒன்றே தான்

நம்மை தேற்றுமே…


திரைப்படம்: அயோத்தி

வரிகள்: சாரதி

இசை: N.R.ரகுநாதன்

குரல்: சாய் விக்னேஷ்


படமும் சரி இந்த பாடலும் சரி, மனதை தொட்டுவிட்டது.

கண்களையும் குளமாக்கியது எனவும் சொல்லலாம்.

ரொம்ப நாள் கழிச்சு மனதை அதிகம் தாக்காமல் கனமாக்காமல் லேசாக வருடி அதே சமயம் கண்ணீரையும் தந்துவிட்டு சென்ற திரைப்படம்.

அன்பையும் மனிதத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு மனதும் மனிதரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இந்த வரிகள் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கையைத் தருகிறது. உணர்வுபூர்வமான வரிகள் !!

* தினேஷ்மாயா *

மனிதம் வாழும்

உலகின் ஏதோ ஒரு ஓரத்தில்

யாரோ ஒருவரின் உருவத்தில்

 “மனிதம்”  எப்போதும்

வாழ்ந்துக்கொண்டேதான் இருக்கும்...


#அயோத்தி திரைப்படத்தின் வாயிலாக

இந்த உண்மையை 

இந்த நம்பிக்கையை

மனதை தொடும் விதமாக விதைத்த

ஒட்டுமொத்த திரைப்பட குழுவிற்கும்

வாழ்த்துகள் கலந்த நன்றி !!

* தினேஷ்மாயா *