நான்கு பேர் மட்டுமா?

Wednesday, January 29, 2020

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பதில் அரசாங்கமும் பொதுமக்களும் தீவிரம் காட்டுவதை உணர முடிகிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் துளியும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. என் கேள்வியெல்லாம், அவர்கள் நால்வர் மட்டுமா குற்றாவாளிகள் ?
சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் ஒரு மருத்துவர் சிலரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலீசாரால் தற்காப்புக்காக சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று செய்திகள் வந்தது. ஆனால், இது தொடர்பான இன்னொரு செய்தியை நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க தவறிவிட்டோம். இந்த சம்பவம் நடந்த மறுதினம், இணையத்தில் இறந்த அந்த பெண்ணின் பெயரை ஆபாச வலைத்தளங்களில் 80 இலட்சத்திற்கும் மேலான மக்கள் தேடியுள்ளனர். அதிலும், இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அதிக தேடல் வந்துள்ளது என ஒரு இணைய செய்தி வந்தது. இது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் ?

ஒரு சில மனித மிருகங்களால், ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதைப்பற்றி மனதில் சிறிதும் ஈரமின்றி இரக்கமின்றி, அந்த பெண்ணின் வீடியோ கிடைக்குமா என்று தேடிய அந்த வக்கிர மனம் படைத்த 80 இலட்சம் மனித மிருகங்களை தண்டிப்பது யார் ? குற்றம் செய்தவன் மட்டுமா குற்றவாளி ? அந்த நால்வரை இதுபோல குற்றத்தில் ஈடுபட வைத்தது எது ? இதோ… இந்த 80 இலட்சத்திற்கும் மேலான மனித மிருகங்களின் மனதில் இருக்கும் வக்கிர குணம் தானே !

இந்த தேடலில் ஈடுபட்ட 80 இலட்சத்தில் இதுப்போன்ற நால்வர் இருக்கிறார்கள். இதுப்போல பல்லாயிர மனித மிருகங்கள் ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

இதுப்போன்ற குற்றங்கள் இருவகைப்படும். ஒன்று, திட்டம் தீட்டி செய்வது, மற்றொன்று சந்தர்ப்பத்தால் செய்வது. திட்டம் தீட்டி செய்யப்படும் குற்றங்களைவிட, சந்தர்ப்பத்தால் செய்யும் குற்றங்களே அதிகம் எனலாம். ஒரு சொலவடை இங்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்வரை தான் ஒரு ஆண் நல்லவனாக இருக்க முடியும். இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிடவும் முடியாது, எவர்க்கும் பொருந்தாது என்று புறந்தள்ளிடவும் இயலாது.

மத்திய குற்ற ஆவணப்பிரிவின் அறிக்கைப்படி, 70 சதவிகிதம் குழ்ந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவர்களின் நெருங்கிய சுற்றத்தாரால் மட்டுமே நடத்தப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கையில் எதிரில் இருப்பவர் எவர் என்றெல்லாம் பாராமல் அவர் மீது தன்னிடம் மறைத்து வைத்திருக்கும் வக்கிர மிருகத்தை கட்டவிழ்த்து விடுவர்.

ஆனால், பெரும்பாலும் இதுப்போன்ற செயல்கள், உயிரிழப்பில் கொண்டுப்போய் விடுவது வேதனையளிக்கிறது. இதற்க்குக் காரணம், அவர்க்கும் தெரியாமல், எவர்க்கும் தெரியாமல், ஒருவருக்குள் இதுநாள்வரையில் மறைந்திருந்த அந்த வக்கிர மனம், இன்று செயல்வடிவம் கொண்டு மனிதவேட்டை நிகழ்த்தியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால், செய்வதறியாது தற்கொலை அல்லது கொலையில் முடிகிறது.

இதுப்போன்ற குற்ற செயல்களின் பிண்ணனி என்னவென்று ஆராய்ந்தால், மனிதனுள் மறைந்திருக்கும் அதீத காமமும், மூர்க்க குணமும், வக்கிர மனமும், தனிமனித ஒழுக்கமின்மையும்தான்.

சமீபத்தில், பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சொல்ல முடியாத துயரத்தை எதிர்க்கொண்டார்கள். இவர்கள் மீது பரிதாபப்படும் மக்கள் ஒரு சாரார் என்றால், இவர்களின் ஆபாச வீடியோக்கள் கிடைக்குமா என்று எதிர்ப்பார்க்கும் மனித மிருகங்கள் இன்னொரு சாரார்.
அப்படி பாதிக்கப்பட்ட பெண்களின் உங்கள் குடும்ப பெண்களோ, உறவினர்களோ, தோழிகளோ இருந்தால் உங்கள் மனம் இப்படி அலையுமா ? உங்களுக்கு தொடர்புடைய பெண்களாக இருக்க வேண்டும் என்றில்லை, நீங்கள் ஒரு உண்மையான மனிதனாக இருந்தாலே போதுமே.
தனிமனித ஒழுக்கம் என்பதன் முக்கியத்துவத்தை இந்த சமூகத்தில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்கும்வரை, எத்தனை குற்றவாளிகளை தூக்கிலிட்டாலும் குற்றங்கள் குறையாது.

மீண்டும் ஒருமுறை நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி…

அந்த நால்வர் மட்டுமா குற்றாவாளிகள் ??

* தினேஷ்மாயா *

கரோனா வைரஸ்

Tuesday, January 28, 2020



     இன்று  சீனாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், திட்டமிட்டு சீன மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. சீனாவின் சொத்தே அதன் மக்கள்தான். ஆப்பிரிக்காவில் சில ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய எபோலா வைரஸுக்கு மருந்தே இல்லை, இதனால் உலகமே அழியக்கூடும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், ஆறு மாதத்தில் மருந்து கண்டிபிடிக்கப்பட்டு அந்த நோய் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த கரோனா வைரஸுக்கும் எதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் மருந்து தயாரித்து வைத்திருக்கும். அதனை வெளியிடவே இந்த கிருமியை மக்கள் மத்தியில் பரப்பியிருப்பார்கள் என்பது என் கருத்து. இந்த கருத்து உண்மையாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். தவறாக இருக்கும் பட்சத்தில் பெரிதாக பாதிப்பு யாருக்கும் இல்லை என நினைக்கிறேன். ஆனால், அதுவே உண்மையாக இருந்துவிட்டால் ??!!

* தினேஷ்மாயா * 

பேரழகு

Friday, January 24, 2020



பிரம்மாண்டம் அழகு...

எளிமை பேரழகு !

* தினேஷ்மாயா *

ஒரு ராஜா



ஒரு ஊரில்

ஒரு ராஜா இருந்தாராம்..

ஒரு ஊரில்

ஒரே ஒரு ராஜாதான் இருந்தாராம்..

* தினேஷ்மாயா *

அளவோடு உண்

Saturday, January 04, 2020



விருந்து உண்ட பின்

மருந்து உண்ணாமல் இருக்க

அளந்து உண் !!

* தினேஷ்மாயா *

திராவிடநேசன்

Wednesday, January 01, 2020


ஆண்டில் என்ன புதுமை

அறிவில் வேண்டும் முதுமை

போக்க வேண்டும் மடமை

பரப்ப வேண்டும் பொதுவுடமை

அதுவே நம் திராவிட கடமை...

-(தி)ராவிட(நேசன்)
தினேஷ்

மதுரசம்

Tuesday, December 31, 2019



மதுவை இதழ்களுக்கிடையில் பருகினால்

போதை தரும்..

இம்மாதுவை

இமைகளுக்கிடையில் பருகினாலே

போதை தருவாள்...

* தினேஷ்மாயா *

எனது உடலும்

Sunday, December 29, 2019


எனது உடலும்

உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…

கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்
கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்

எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்

ஆதி அந்தம் கடந்த அறிவே
அனைத்தும் உனதாணையே
ஆதி அந்தம் கடந்த அறிவே
அனைத்தும் உனதாணையே
ஜோதி வடிவாய் திகழும் அருளே
துதிக்கும் அடியேனையே
ஜோதி வடிவாய் திகழும் அருளே
துதிக்கும் அடியேனையே
கருணை கொண்டு கனிந்து இரங்கி
காத்து கரை சேர்க்கணும்

எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…

செய்த வினையும் செய்யும் வினையும்
உனது தவ தீயிலே
செய்த வினையும் செய்யும் வினையும்
உனது தவ தீயிலே
தீந்து கருகி தணிந்து
நீராய் ஈர்ந்த நிலையாகவே
தீந்து கருகி தணிந்து
நீராய் ஈர்ந்த நிலையாகவே
ஐந்து புலனும் அடங்கி போகும்
ஆணை தனை போடணும்

எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…

கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்
கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்

எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…

இசை தொகுப்பு: ராஜாவின் ரமணமாலை
இசை, வரிகள், குரல்: இசைஞானி இளையராஜா


* தினேஷ்மாயா *

சுற்றுகிற உலகத்திலே


சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...

வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?
நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....

அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
கன்னியை சுற்றி வரும் காளையும் இங்குண்டு...
கன்னியையும் காளையையும் சுற்ற வைக்கும் காதலும் இங்குண்டு....
அட பாட்டன் போனான் ,அப்பன் போனான்,பிள்ளைகளும் அவன் பின்னாலே..
அரசன் போனான் ,ஆண்டி போனான்,தொடர்ந்து சென்றவரும் பின்னாலே...
சுற்றிச்சுழன்றவர் வாழ்க்கையிலே,சுகத்தில் இருப்பவர்கள் யாருமில்லே...
எதை எதையோ சுற்றாதீர்,பதைபதைத்து நிற்க்காதீர்...

அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....

கல்விக்கு சுற்றும் மாணவரும்,வேலைக்குச் சுற்றும் பட்டதாரியும்,
மேல் பதவிக்காகச் சுற்றும் மனிதர்களும்,சிறு உதவிக்காகச் சுற்றும் எளியவரும்,
கல்வியும் பதவியும் கலை தரும் ஞானமும் மனிதனைச் சுற்றவில்லை...
வல்வினை தொல்வினை தன்னைச் சுற்றி வருவதை மனிதனும் உணரவில்லை...
உன்மேல் உன்னை விட பிரியமுள்ளாவர் உலகதிலுண்டோ?
உன்சுமைகளையே தன்சுமையென்று சுமப்பவருண்டோ?
பாரத்தை அண்ணாமலையில் போட்டு சுகமாய் பாடி ஆடிப்போ...
நேரத்தை வீணாய் கழிக்காமல் நீ சரணம் என்றே பாடிப்போ...

சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?
நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...

இசை தொகுப்பு: ராஜாவின் ரமணமாலை
இசை, வரிகள், குரல்: இசைஞானி இளையராஜா


* தினேஷ்மாயா *

மீட்டெடு

Monday, December 23, 2019



இயற்கையில் இருந்து

இசையை மீட்டது போதும்..

உன் உள்ளத்தில் இருந்து

என்னை மீட்டெடுக்க உதவு...

* தினேஷ்மாயா *

காதல் மழை


புருவங்கள் வானவில்

கண்கள் கார்மேகங்கள்

பார்வையோ மின்னல்

சிமிட்டலே இடி

சிணுங்கலே புயல்..

அதனால்தானோ

என் மனதில்

காதல் மழை !?

* தினேஷ்மாயா *

நேசம்


இந்த இனிய, இளைய

தங்கையும் தமையனும்

பசியை மறந்து பகிரும் பாசம்

அதில் வீசும் அன்பின் வாசம்

தேசங்கள் பல கடந்தும் வீசும்...

* தினேஷ்மாயா *

வாழ்க்கைப் பயணம்


இறைத் தேடல்

இசையின் வருடல்

இயற்கையுடனான கூடல்

இவற்றின் மீதுள்ள காதல்

இவையே என்

வாழ்க்கைப் பயணத்தின்

வழிப்போக்கர்கள்....

* தினேஷ்மாயா *

அவள் ஸ்பரிசம்


மாலைநேர மழைத்தூரல்..

இந்த குடையால்

எப்படி கொடுக்க முடியும் ?

உன் ஸ்பரிசம் தரும்

கதகதப்பை !!

* தினேஷ்மாயா *

கண்ணாடிப் பாவை




கண்ணாடி அணிந்துக்கொள்

சூரியனுக்கே கண் கூசுகிறதாம் !!

* தினேஷ்மாயா *

பெண்சிலை


பொன்சிலை ஒன்று

பெண்சிலையாய் மாறிய தருணம் !

* தினேஷ்மாயா *

தேவதை வருகை

Sunday, December 22, 2019



தேவதைகள் -

குதிரையிலும் வருமோ !!??

 * தினேஷ்மாயா *

வானவில் மங்கை


வானவில் மங்கைக்கு

வானவில்லே புடவையாய் !!

* தினேஷ்மாயா *

ஓட்டப் பந்தயம்



பேரழகில் பெரியவள் யார் என்கிற

ஓட்டப் பந்தயத்தில்

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவள்

நீ மட்டும் தானடி ...

* தினேஷ்மாயா *

பேரீச்சம் அழகி



நீ அருகில் இருப்பது பொறுக்காமல்

பேரிச்சம்பழங்கள் கீழே குதித்து

உயிர்நீர்க்கிறது ...

* தினேஷ்மாயா *

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

Saturday, December 21, 2019



சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி  
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி 
உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி   
  
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
     
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா தம்பி மனதில் வையடா  
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா நீ வலது கையடா          
தனியுடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா
தனியுடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா      
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா  
          
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுண்ணு...
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுண்ணு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே நீ வெம்பி விடாதே

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

* தினேஷ்மாயா *

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்




சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத்
தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம்
சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின்
அதிகார உலகமடா

புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

* தினேஷ்மாயா *