ஒத்திகை

Saturday, July 26, 2014


விரைவில் நடக்கவிருக்கும்

கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு

இப்போதே ஒத்திகை பார்க்கிறார்களோ !

* தினேஷ்மாயா *

காணவில்லை


மழை  இருக்கிறது..

குடை இருக்கிறது..

நானும் இருக்கிறேன்..

அவள் மட்டும் காணவில்லை !!

* தினேஷ்மாயா *

ஆயிரம் காலத்து பயிர்


கல்யாணம் - ஆயிரம் காலத்து பயிர்..

Living Together - Use and Throw Food..

* தினேஷ்மாயா *

அழகு


கண் இருப்பவன் மட்டுமே

அழகு என்னும் பாகுபாடு பார்ப்பான்..

கண் இல்லாதவனுக்கு 

எல்லாமே அழகுதான்.

* தினேஷ்மாயா *

இன்னொரு பயணம்


“ உன்னுடன் இன்னொரு இரயில் பயணம் கிடைக்காதா ? ” என்று ஏங்குகிறது மனம்..

* தினேஷ்மாயா *

காசாவிற்காக குரல் கொடுப்போம்

Friday, July 25, 2014



இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் இஸ்ரேலுக்கு ?

800 உயிர்களை தின்ற பிறகும் இன்னும் இஸ்ரேலின் உயிர்ப்பசி அடங்கவில்லைப் போலும் !

அங்கே இறப்பது நம்மைப்போன்ற ஒரு சக மனிதன்தான். மதங்களுக்காக குரல் கொடுக்க வேண்டாம். நம் சக மனிதனுக்காக குரல் கொடுப்போம்.

* தினேஷ்மாயா *

சமீபத்தில் அதிகம் ரசித்த பாடல்கள்

Thursday, July 24, 2014



சமீபத்தில் நான் அதிகமுறை ரசித்து கேட்ட பாடல்கள்..


  1. ஆனந்த யாழை, நதிவெள்ளம் மேலே - தங்க மீன்கள்
  2. விண்மீன் விதையில், யார் எழுதியதோ - தெகிடி
  3. கோன கொண்டக்காரி - மதயானை கூட்டம்
  4. கூடமேல கூடவெச்சு - ரம்மி
  5. Tum Hi Ho - Aashiqui 2
  6. Ranjha - Queen
  7. மழையின் சாரலில் - ஆஹா கல்யாணம்
  8. மெல்ல சிரித்தாய் - கல்யாண சமையல் சாதம்
  9. போ இன்று நீயாக, ஊதுங்கடா சங்கு - வேலையில்லா பட்டதாரி
  10. குக்கூ படத்தின் அனைத்து பாடல்களும்
  11. இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்
* தினேஷ்மாயா *

முடிவெடு


முடிவெடுக்க தடுமாறலாம். ஆனால், முடிவெடுக்காமல் விட்டுவிடாதே..

உன் முடிவு சரியோ,தவறோ. நிச்சயம் அது உனக்கு நல்ல அனுபவத்தை தரும்.

* தினேஷ்மாயா *

பிரிவு


உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..

உயிர் போகும் வலி என்றால்

அதன் பெயர் - பிரிவு !!

* தினேஷ்மாயா *

நான் நானாக



நான் நானாக வாழ நினைக்கிறேன்..

ஆனால் முடியவில்லை..

இந்த சமூகத்திற்காக வாழவேண்டும் என்று

ஆண்டவன் நினைக்கிறான் போல !

* தினேஷ்மாயா *

மனம் நொந்து..

Wednesday, July 23, 2014


   சமீபகாலமாக செய்தித்தாள்களில் பெண்களுக்கு எதிரான வன்புணர்வு செய்திகளை படிப்பதைவிடவும் , அதற்கு சில அரசியல் தலைவர்கள் தரும் விளக்கங்களும், அவர்களின் பேச்சுக்களாலும்தான் அதிகம் மனம் நொந்து போகிறேன்.

* தினேஷ்மாயா *

சுருக்கம்

Tuesday, July 22, 2014


   இன்றைய அவசர உலகம், 5 வரிகளுக்கு மேல் இருக்கும் எதையும் படித்துப்பார்க்க  மறுக்கிறது. அதனாலேயே, என் கருத்துக்களை சுருக்கமாய் சொல்ல கற்றுக்கொண்டிருக்கிறேன்...

* தினேஷ்மாயா *

சமஸ்க்ருத வாரம்


   சமீபத்தில் தமிழக அரசியலில் “சமஸ்க்ருத வாரம்” தலைப்பு செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சமஸ்க்ருத வாரம் கொண்டாட கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பல தமிழக அரசியல் கட்சிகளும், தமிழார்வ இயக்கங்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

நான் சமஸ்க்ருத மொழியை எதிர்ப்பவன் இல்லை. தமிழை உயிராய் மதிப்பதுபோல மற்ற இந்திய மொழிகளையும் சமமாக மதிக்கிறேன். எனக்கு மற்ற இந்திய மொழிகளை கற்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பலமுறை வருந்தியதுண்டு.

சமஸ்க்ருதம் பற்றி சில கருத்துகளை நான் இங்கே நிச்சயம் பதிவு செய்தேயாக வேண்டும். தமிழுக்கு நிகரான பல விஷயங்கள் சமஸ்க்ருதத்தில் இருக்கிறது. சொல்லப்போனால் சமஸ்க்ருதம் தமிழை விட ஒரு விஷயத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது. என்னவென்று சொல்கிறேன், தொடர்ந்து படியுங்கள்.

சமஸ்க்ருத மொழி இன்று அதிக மக்களால் பின்பற்றப்படுவதில்லை. மாறாக இந்தி அனைவராலும் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. இந்தி மொழியும் சரி, ஆங்கில மொழியும் சரி, பிற மொழி வார்த்தைகளை தம் மொழியினுள் ஏற்றுக்கொள்ளும் வல்லமை பெற்றிருக்கிறது. உதாரணமாக, தமிழ் மொழியில் கல்வெட்டு என்பதை ஆங்கிலத்தில் CULVERT என்று எளிதாக மொழிப்பெயர்க்கலாம், ஆனால் வேற்று மொழியினை சமஸ்க்ருத மொழி அவ்வளவு எளிதாக தன்னுள் ஏற்றுக்கொள்ளாது.

தமிழ் மொழியிலும், பிறமொழி சொற்கள் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. தமிழ் பேசும் நல்லுலகம் வெறும் தமிழ் ஆசிரியர்களை மட்டும் கொண்டதல்ல. சுமார் 10 கோடிக்கும் மேலான மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். ஆனால் அதில் எத்தனைப்பேர் தூய தமிழ் வார்த்தைகளை பேச பயன்படுத்துகிறோம் சொல்லுங்கள். ஆங்கிலம் கலப்படம் இல்லாமல் நம்மால் 5 நிமிடம் தொடர்ச்சியாக பேசமுடிகிறதா சொல்லுங்கள். ஆங்கில வார்த்தை கலக்காமல் 2 நிமிடங்கள் பேசினாலே 1000 ரூபாய் பரிசு தரும் பல விளையாட்டுக்கள் இங்கே முளைத்துவிட்டன. அப்படியே ஒருவர் ஆங்கில வார்த்தை கலப்படமில்லாமல் பேசினாலும் அவர் வார்த்தையில் நிச்சயம் வடமொழி கலப்படம் இருந்தே தீரும். பரிட்சை என்பது வடமொழி, தேர்வு என்பது தமிழ் மொழி. ஆனால் பிற மொழியினை தமிழ் மொழி தனக்கு தகுந்தார்போல ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது. அதனால் தான் இன்னமும் இத்தனை கோடி மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். ஆனால் சமஸ்க்ருதம் அப்படியல்ல. தன் மொழியுடன் வேற்று மொழியை கலக்க ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

இத்துனை சிறப்பு மிகுந்த சமஸ்க்ருத மொழியை நாம் ஏன் அந்நிய மொழியாக பார்த்து அதை கொண்டாடுவதை வெறுத்து ஒதுக்க வேண்டும்? அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஒதுக்குங்கள், நம் இந்திய மொழிகளை ஒதுக்காதீர்கள்.

* தினேஷ்மாயா *

பதவி உயர்வு


நேர்மையாக இருப்பவர்களைவிட

உயரதிகாரிகளுக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கே

விரைவில் பதவி உயர்வு கிடைக்கிறது !

* தினேஷ்மாயா *

செலவு


வார்த்தைகள் விலைமதிப்பற்றவை..

பார்த்து செலவு செய்யுங்கள் !

* தினேஷ்மாயா *

உயிர்



நேற்று பேருந்தில் பயணிக்கும்போது எனக்கு சில கேள்விகள் உதித்தது.

உயிர் எப்படி நம் உடலுக்குள் வருகிறது, எந்த வழியாக அது வெளியேருகிறது?

ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு கருவை உருவாக்குகிறார்கள். அந்த கரு தாயின் கருவறையில் வளர்ந்து உடலைப் பெருகிறது. அப்படியானால் அந்த உடலுக்கு உயிர் எங்கிருந்து வருகிறது. எப்படி அந்த உயிர் அந்த உடலுக்குள் செல்கிறது ?

இது இருக்கட்டும் விடுங்கள். உயிர் எப்படி உடலைவிட்டு செல்கிறது. நவதுவாரங்கள் என்பதற்கும் உயிர் பிரிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா ?

உயிர் எப்படி நம் உடலில் இருந்து பிரிகிறது ? ஒருவர் வயதாகி இறக்கிறார் என்றால், அவரின் உயிர் போகும் அந்த நொடியில் அவர் உடலில் நடக்கும் மாற்றம் என்ன ? வெறும் இதயத்துடிப்பு நிற்பது மட்டும்தானா ?

இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால் உயிர் பிரிந்துவிட்டதாக அர்த்தமா ? உயிர் பிரிவதை இன்றைய அறிவியல் வேண்டுமானால் இப்படி சொல்லலாம், ஆனால் இதற்கும் மேலான விளக்கம் ஒன்று நிச்சயம் இருந்தேயாக வேண்டும். என்னவென்று இன்னும் ஆரய்ந்து பிறகு பதிவு செய்கிறேன்.

* தினேஷ்மாயா *

வட்டி



   வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே, நடுத்தரவர்க்கத்தின் பாதி சம்பளம் கரைந்துவிடுகிறது. பிறகு எப்படி குடும்பத்தை நடத்துவது, சேமிப்பது ?

* தினேஷ்மாயா *

ஏற்றுக்கொள்

Wednesday, July 16, 2014

    

     எந்த ஒரு துன்பம் வரும்போது அதை ஏற்றுக்கொள். அதை உன் மனம் ஏற்காமல் அதனை எதிர்கொள்ளும்போதுதான் உனக்கு கஷ்டம் அதிகமாகும்.

- புத்தர் சொன்னது.

* தினேஷ்மாயா *

கனவு @ 15-07-14

    


       இன்று ( 15-07-2014) இரவு கனவு எங்கிருந்து தொடங்குகிறது என்றெல்லாம் தெரியவில்லை. நான் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கிறேன். எங்கு செல்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் என் தோளில் ஒரு பையை மாட்டியிருக்கிறேன். அது ரொம்ப பெரிதாக இருக்கிறது. அதை என் தோளில் மாட்டியபடி ஓட்ட முடியவில்லை. அதனால் அதை வண்டியின் முன் டேங்க் மீது வைத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அப்படி ஓட்டுவது கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது. நான் ஓட்டுவதற்கு இந்த பை ரொம்பவே தடங்கலாக இருக்கிறது. வண்டியை ஓட்டுவதும் இந்த பையை சரி செய்வதும் இப்படி மாறி மாறி செல்வதால், நான் எங்கே செல்ல வேண்டும் என்பதையே மறந்து நான் இதுவரை சென்ற வழியைவிட்டு வந்த வழியிலேயே திரும்பி செல்கிறேன் என்பதை உணர்ந்தேன். என்ன இது, நான் எதிர் திசையில்தானே செல்லவேண்டும் என்று சுதாரித்துக்கொண்டு வண்டியை திருப்புகிறேன். வண்டியை திருப்பும்போது அந்த பை கீழே விழப்பார்க்கிறது. உடனே பையை கொஞ்சம் சமாளித்து டேங்க் மேலே வைத்துவிட்டு, வண்டியை ஓரம் கட்டுகிறேன். அங்கே 5 அல்லது 6 காவல்துறையினர் இருக்கிறார்கள். நான் பையை சரிசெய்துக்கொண்டிருக்கிறேன். என்னருகில் இருக்கும் ஒரு தள்ளுவண்டிகாரரை அழைக்கிறார் ஒரு காவல்துறை உயரதிகாரி. அவரிடம் ஏதோ விசாரித்துக்கொண்டிருக்கிறார். நான் என்ன ஆச்சு என்று கேட்கிறேன். அருகில் இருக்கும் தெருவில் ஒரு ஆட்டோக்காரர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று என்னிடம் தெரிவிக்கிறார். அடுத்து என்னவோ சொன்னார், ஆனால் அது நினைவில் இல்லை. நானும் அவர் சொன்னதை கேட்டுவிட்டு பையை சரி செய்துவிட்டு வண்டியை கிளப்புகிறேன். இப்போது சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் பாலத்தின் மேலே செல்கிறேன். இதுதான் எனக்கு கடைசியாக நினைவில் இருக்கிறது. அடுத்து எதுவும் கனவு வரவில்லை. ஆனால் நான் கண் விழிக்கும் முன் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அப்போது இரு சிறிய கனவு. ஒரு நல்ல கானா பாட்டு, அதுவும் கிராமத்து வாசனை நிறைந்த பாட்டு அதற்கு ஒரு 10 நபர்கள் ஆட்டம் ஆடுகின்றனர். அநேகமாக தப்பாட்டம் அல்லது ஒயிலாட்டமாக இருக்கலாம். அவர்கள் பாடியபடி ஆடுகின்றனர். அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கிராமிய மணம்வீசிய அந்த பாடலை என்ன பாடல் என்று உற்று கவனிக்க எத்தனிக்கிறேன் உடனே என் நண்பர் என்னை தொலைப்பேசியில் அழைத்துவிட்டார். தூக்கமும் கலைந்து கனவும் கலைந்து கண் விழித்தேன்..

* தினேஷ்மாயா *

Humanity





   2 Bombs enuf to showcase how the scientific inventions can be misused.This is where we are going. All the new technologies we are using today can be misused anytime by anyone to ruin the entire humanity. Be careful !!

- * DhineshMaya *

நான் ரசித்த புகைப்படங்கள்

Tuesday, July 15, 2014










I love these photos. The lighting is awesome..

* தினேஷ்மாயா *

மயிலிறகு போதும்

Friday, July 11, 2014


ஒரு மயிலிறகு போதும்..

நீ என்னருகில் இருக்கையில்

என் அன்பை வெளிப்படுத்த !

* தினேஷ்மாயா *

கவிதாஞ்சலி



என் கவிதைகள் அனைத்தும்

உனக்கு சமர்ப்பணம் !!

* தினேஷ்மாயா *

பேரழகி வேண்டாம்



எனக்கு பேரழகி வேண்டாம்..

நீ போதும் !

பேரழகியிடம் இல்லாத ஒன்று

உன்னிடம் உண்டு..

எனக்கான காதல் !!

* தினேஷ்மாயா *

என்ன செய்கிறாய் ?


தனிமையில் அங்கே என்ன செய்கிறாய் ?

இன்று என் கனவில் வந்து

என்ன செய்யலாம் என்று

திட்டம் தீட்டுகிறாயோ ?

* தினேஷ்மாயா *

உறுப்பு தானம்



விண்ணுக்கு செல்லும் உயிரை

நம்மோடு எடுத்து செல்வோம்..

மண்ணுக்கு செல்லும் உறுப்புகளை

உலகிற்கு விட்டு செல்வோம்..

* தினேஷ்மாயா *

வா என் வாழ்வே வா !!


மறக்காது உன் ராகம்

மரிக்காது என் தேகம்

உனக்காக உயிர் வாழ்வேன்

வா என் வாழ்வே வா !!

( மலர்களே மலர்களே - Love Birds திடைப்பட பாடல் வரிகள் )

* தினேஷ்மாயா *

அமில மழை


பெய்யும் மழை,

அமில மழையாக

இல்லாதவரை -

நான் மழையில் நனைவது

எப்போதும் தொடரும் ...

* தினேஷ்மாயா *

தடுக்கவில்லை


நான் உன்னைவிட்டு

உடனேயே விலகவில்லை..

மெதுவாகத்தான் நடந்து சென்றேன்..

ஆனால் -

நான் பிரிந்து செல்வதை

நீ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை !

* தினேஷ்மாயா *

நீ மட்டுமே



நீ மட்டுமே

எனக்கு அந்த உணர்வை

கொடுத்தவள் !

* தினேஷ்மாயா *

தழும்புகள்


காதலினால் சுட்ட வடு உள்ளும் ஆறாது,

வெளியும் ஆறாது !

* தினேஷ்மாயா *

நினைவு கொடுத்தவள்


உனக்கு அழகான நினைவுகளை கொடுத்தவளே

உன் நினைவுகளாகும்போது -

மரணம்கூட பெரிதாக தெரியாது !

* தினேஷ்மாயா *


இந்த ஒரு பார்வையால



இந்த ஒரு பார்வையால தானே

நானும் பாழானேன்..

* தினேஷ்மாயா *

சில முத்தங்கள்



சில முத்தங்கள் -

கண்களால் கொடுக்கப்படுகின்றன !

* தினேஷ்மாயா *

நிற்காதே


நீ விலகுகையில் -

அவள் உன்னை பின்தொடரவில்லையா ?

நிற்காதே ..

தொடர்ந்து நட -

விட்டு விலகிவிடு !

* தினேஷ்மாயா *

அழிக்க முடியுமா


உன் தொடர்பை அழித்ததுபோல

உன் நினைவுகளை அழிக்கமுடியுமா

என்று தெரியவில்லை !

* தினேஷ்மாயா *

முட்டாள்தனம்


நீ அதை முட்டாள்தனம்

என்கிறாய் !

நானோ அதை காதல்

என்கிறேன் !

* தினேஷ்மாயா *

வீரம்


ஒரு ஆணின் வீரம்,

அவள் அருகில் ஒரு

பெண் இருக்கும்போது

அவள் சிரிப்பில் தெரியும்..

* தினேஷ்மாயா *

பழக்க தோஷம்..



உனக்கு குறுஞ்செய்தி

அனுப்பலாம் என்று நினைத்தேன்..

பிறகுதான் புரிந்தது -

நாம் இனி பேசிக்கவே மாட்டோம் என்று..

* தினேஷ்மாயா *

நம்பிக்கை


காதல் போராட்டத்தில்

நம்பிக்கை பாதையை

நம்பிவிட்டால்..

எல்லா துயரங்களையும்

நிச்சயம் கடந்து செல்லலாம்..

* தினேஷ்மாயா *