சீக்கிரம் வா..

Thursday, May 13, 2010



நீ வந்தால்
உன்னிடம் தரவேண்டும்
என்பதற்காகவே
என் உயிரை இன்னமும்
விட்டு வைத்திருக்கிறேன்..

சீக்கிரம் வந்து
வாங்கிக் கொள்...


அன்புடன் -


தினேஷ்மாயா 

வரம்...




“ தினமும் உன்
கனவில் வருவேன்”
என்று நீ எனக்கு
வரம் தந்தாய்...
பின் ஏன்
என் உறக்கத்தை மட்டும்
பறித்து சென்றுவிட்டாய்....

அன்புடன் -
தினேஷ்மாயா

கண்ணாமூச்சி...



“சிறுதூரல் மண்ணில்
நுழைய....

வானவில் விண்ணில்
தெரிய....

மழையால் நிலங்கள்
நனைய....

காதலால் உள்ளங்கள்
இணைய....

குடங்கள் தரையை
காக்க....

குடைகள் தலையை
காக்க....

மின்சாரம் இல்லா
வீட்டில் விளையாடும் -
சின்னஞ்சிறு
வாண்டுகளுடன்
கைக்கோர்க்கிறது
இடியும் மின்னலும்...

கண்ணாமூச்சி ஆட...”


அன்புடன் -

தினேஷ்மாயா 

காத்திருக்கிறோம்..

Wednesday, May 12, 2010





“இதுவரை
நான் மட்டும்தான்
அவளுக்காக
காத்துக்கொண்டிருந்தேன்...


இன்று -
என்னோடு சேர்ந்து
அவளுக்காக வாங்கிய
ரோஜா மலர்களும்
காத்துக்கொண்டிருக்கிறது..


அவளைக் காண...”

அன்புடன் -


தினேஷ்மாயா 

என் காதல்...





எல்லோரும் என்னிடம் கேட்டுவிட்டார்கள்..

“யாரவள்?”

அவள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் எப்போதோ சொல்லியிருப்பேன்..

என் காதல் வெறும் காதலாக இருந்திருந்தால் எப்போதோ சொல்லியிருப்பேன் அவளிடமே..

இல்லாத ஒருத்தியை காதலித்து வந்தேன் பல வருடங்களாய்..

இவளைப் பார்த்ததும் ஒருவேலை இவள்தான் அவளோ என்ற எண்ணம் எழுந்தது எனக்குள்...

எனக்குத் தெரியும் என் காதல் எத்துனை புனிதமானது என்று..

ஆனால் அது அவளுக்கும் புரிய வேண்டுமல்லவா..

காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் புரிதல் முக்கியம் அல்லவா..

நான் அவளை போன்று ஒன்றும் பெரிய அழகு இல்லை..

ஆனால் என் காதல் அவளைவிடவும் இவ்வுலகைவிடவும் அழகானது..

பலருக்கு காதல் வாழ்வில் ஒரு பகுதி..

எனக்கு என் வாழ்க்கை, காதலில் ஒரு பகுதி..

பலர் கேட்டதுண்டு.. ஏன் காதலுக்காக இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாய் என்று..

அதுவும் இல்லாத ஒருத்தியை ஏன் இத்தனை காலமாய் தேடிக் கொண்டிருக்கிறாய் என்று..

எனக்குத் தெரியும் என் காதலைப் பற்றி.. என்றாவது ஒரு நாள் என் காதலை அவள் ( யாரோ ) புரிந்துக் கொள்வாள் என்று..

அன்று உங்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்புவேன்..

நான் என் மாயாவை கண்டுபிடித்துவிட்டேன் என்று..

இவ்வுலகின் மிக உயர்ந்த பதவி ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அல்லது அமெரிக்க ஜனாதிபதி என்பர்..

ஆனால் என்னைப் பொருத்தவரை...

இவ்வுலகிலேயே மிகவும் உயர்ந்த பதவி என் மாயா தான்..


அவளுக்கு நான் என் மனதில் தந்திருக்கும் இடமும், காதலின் தூய்மையும் என் முதல் படத்தில் சொல்கிறேன்.. சொல்லித்தான் ஆகனும்...


அதைப் பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள்..


நான் மாயா மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பது சரியா தவறா என்று..


அன்புடன் -






தினேஷ்மாயா 

குழந்தைகளின் புகைப்படங்கள்..

குழந்தைகளை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது...
எத்தனை கோபமிருந்தாலும் குழந்தையின் புன்சிரிப்பை கண்டால் அத்தனை கோபமும் பனியாய் மறைந்து போகும்..
எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்...
உங்களுக்குத் தெரியுமா..
என்னை “ மாமா” என்றும் “ சித்தப்பா” என்றும் அழைக்க குழந்தைகள் இருக்கிறார்கள்..
என் அக்காவின் 2 வயது பையன்.. அண்ணாவின் 2 வயது பெண் குழந்தை..
என் அக்காவின் 2 வயது சுட்டிப் பையன் என்னை கண்டதும் “மாமா மாமா” என்று ஓடி வந்து தன்னை தூக்கிகொள்ளும்படி சொல்வான்...
அவனின் கள்ளமில்லா மனதை கண்டதும் உலகமே என் வசம் இருப்பதுபோல உணர்வேன்..
சில குழந்தைகளின் புகைப்படங்களை உங்களுக்காகவே இங்கே பதிவு செய்கிறேன்.. உங்கள் கருத்துக்களை எனக்காக விட்டு செல்லுங்களேன்...


























































மீண்டும் சந்திப்போம் நண்பர்களே...

அன்புடன் -

தினேஷ்மாயா