Thursday, February 23, 2017



ஒவ்வொரு பொழுதும் சிவனே, ஒவ்வொரு இரவும் சிவனே என்றிருப்போர்க்கு (எனக்கும்)

மஹா சிவராத்திரி என்றொன்றில்லை..

* தினேஷ்மாயா *

மனிதனின் அட்டகாசம்



செய்தி: யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்.

என் பார்வையில்: யானைகள் வாழ்விடத்திலும் வழித்தடத்திலும் மனிதர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி அட்டகாசம்..

* தினேஷ்மாயா *

மாயா வரப்போகிறாள்..

Wednesday, February 22, 2017


இந்நாள் வரையில் என் மாயாவை நான் தேடினேன்..

நான் தேடி அவள் கிடைக்கவில்லை...

இனி அந்த தேடல் பொறுப்பை

என் பெற்றோர்கள் எடுத்துக்கொண்டார்கள்..

*@*@*@*@*@*@*@*

என் மாயாவின் வருகைக்காக காத்திருக்கும்

* தினேஷ்மாயா *

ஜிப்ரான் சொன்னது

Thursday, February 16, 2017


* தினேஷ்மாயா *

கள்ளத்தனம்

Friday, February 10, 2017



உன் தோழியரிடையே நீயிருக்க

உன் கடைக்கண் பார்வைக்காக நானிருக்க

கண்ணொடு கண் நோக்கும் பொழுது

கள்ளத்தனம் நம்மிருவரையும் ஆட்கொள்ளும்..

* தினேஷ்மாயா *

பூச்செடி

Thursday, February 09, 2017




ஓ.. நீ உன் கூந்தலுக்கு பூச்சுடினாயோ?

உன் கூந்தலில் பூ பூத்தது என்று நினைத்துவிட்டேனடி..

* தினேஷ்மாயா *

ப்ரேமம்

Tuesday, February 07, 2017



காதலை

ப்ரேமமாக

பார்க்க துவங்கிவிட்டேன்..

* தினேஷ்மாயா *

தாம்பத்தியம்

Sunday, February 05, 2017


குழந்தைக்கு குழந்தையை பரிசளிப்பதுதான்

தாம்பத்தியமோ ?

* தினேஷ்மாயா *

உன் பார்வை போதுமே..



கடுங்குளிரிலும் -

உன் பார்வை போதுமே..

போர்வை எதற்கடி ?

* தினேஷ்மாயா *

உன்னுள் தோற்றேன்..



தன் மனைவியைப் பார்த்து-

உன்னால் தோற்றுப்போனேன் என்பார் சிலர்..

உன்னுள் தோற்றுப்போனேன் என்பேன் நான்..

உனக்குள் தோற்பது என்றும் சுகமடி சகியே !

* தினேஷ்மாயா *

என்னுலகம்


எல்லோரும் இந்த உலகை ஆராய்ந்துக்கொண்டிருக்க

நான் என்னுலகை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்..

பி.கு.: இவ்வுலகம் வேறு, என்னுலகம் வேறு..

* தினேஷ்மாயா *

அபிநயம்



என்னை கொல்ல

தன் கண்கள் போதாதென்று

அபிநயத்தை துணைக்கு அழைக்கிறாள் !

* தினேஷ்மாயா * 

உன்னுள்..

Friday, February 03, 2017


உன்னுள் மூழ்கிப்போவதென்பது இதுதானோ !

* தினேஷ்மாயா *

காதல் வேள்வி


மின்னலைக்கொண்டு நாங்களிருவரும் எழுப்பிய

காதல் வேள்விதான் அது !

* தினேஷ்மாயா *

தென்றலே..

தென்றலே..

அவசரம் ஏனோ ?

இன்னும் கொஞ்ச நேரம்

உன் தோழியை எனக்கு கடன் கொடேன் !

* தினேஷ்மாயா *

வானவில் வாழ்த்துது


வானவில் இறங்கிவந்து - நம்மை

வாழ்த்திவிட்டு செல்கிறது காண் !

* தினேஷ்மாயா *

பட்டம்


படித்து முடித்ததும் பட்டம் தருவது ஏன் தெரியுமா ?

படிக்க படிக்க மேன்மேலும் உயர்வதால் !

* தினேஷ்மாயா *

காவியம் படைப்போம்


என் மார்பில் நீ தலைசாக்கும் அந்நேரம்..

என் இதயத்துடிப்பை நீ கேட்கும் அந்நேரம்..

என் விரல் உன்தலை கோதும் அந்நேரம்..

உன் உச்சி முகர்ந்து நானுனை முத்தமிடும் அந்நேரம்..

அண்ணலும் நோக்க அவளும் நோக்கும் அந்நேரம்..

இன்னுமொரு காவியம் படைப்போம் நாம் !

* தினேஷ்மாயா *

திருமாங்கல்யம்..

திருமாங்கல்யம்..

செல்வியை திருமதியாக்கும்

செல்வனை செல்வந்தன் ஆக்கும் !

ஆம்.. என் வீட்டிற்கு வரும் மஹாலஷ்மி நீ ..

* தினேஷ்மாயா *

பதில் சொல்லும்..


காலம் பதில் சொல்லும்..

சில சமயம் - என்

காதல் பதில் சொல்லும்..

* தினேஷ்மாயா *

முரண்

Thursday, February 02, 2017



"வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்"
- தமிழர் பழமொழி..

பள்ளிக்கூடம் சென்றதும் நமக்கு அவர்கள் சொல்லிகொடுக்கும் முதல் பாடம்..
"பேசாதே !"

#முரண்

* தினேஷ்மாயா *

விஷம்



விவசாயத்தை தரக்குறைவாக பார்த்தோம்

வியாபாரமாக்கிக்கொண்டான் அவன்..

விவசாயி விதைத்ததை உண்டோம் அன்று

வியாபாரி திணிப்பதை உண்டு மாண்டோம் இன்று..

* தினேஷ்மாயா *

காத்திருக்கிறேன்



" புல்வெளிகூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி..
என் புன்னகை ராணி ஒருமொழி சொன்னால், காதல் வாழுமடி.. "

எனக்கென ஏற்கனவே - பாடல் வரிகள் இவை..

அவளின் வார்த்தைக்காக காத்திருக்கிறேன் என்பதை நான் எப்படி அவளுக்கு உணர்த்த முடியும். என்றாவது ஒருநாள் அவளின் வார்த்தைகள் என்னை அடையும்போது, நிச்சயம் இந்த பதிவை காட்டுவேன்.

' உன் வார்த்தைக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன்' என்று...

* தினேஷ்மாயா *

வானம் நீ


பகலில் மட்டுமே வரும் சூரியனும் அல்ல

இரவில் மட்டுமே உலவும் நிலவும் அல்ல

என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் வானம் நீ..

* தினேஷ்மாயா *

உள்ளத்தில் உள்ள.....


உள்ளத்தில் உள்ள

ஆழ்மனது ஆசைகளை

உன்னிடம் உரைக்கமுடியாமல்

எண்ணி எண்ணி

ஏங்கி ஏங்கி

தவியாய் தவிக்கிறேனடி..

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சி இலவசம்


மகிழ்ச்சியாய் இருக்க, நீங்கள் செல்வந்தராகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..

மகிழ்ச்சி இலவசம்.. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போமே..

* தினேஷ்மாயா *

அவள் கிடைப்பாள்..



நட்சத்திரத்தை விதைத்து
நிலவை அறுவடை செய்தால்,
அவள் கிடைப்பாள்..

* தினேஷ்மாயா *

தலாய் லாமா சொற்கள்



"As a Buddhist, I view death as a normal process, a reality that I accept will occur as long as I remain in this earthly existence. Knowing that I cannot escape it, I see no point in worrying about it. I tend to think of death as being like changing your clothes when they are old and worn out, rather than as some final end. Yet death is unpredictable: We do not know when or how it will take place. So it is only sensible to take certain precautions before it actually happens. Naturally, most of us would like to die a peaceful death, but it is also clear that we cannot hope to die peacefully if our lives have been full of violence, or if our minds have mostly been agitated by emotions like anger, attachment, or fear. So if we wish to die well, we must learn how to live well: Hoping for a peaceful death, we must cultivate peace in our mind, and in our way of life."
- The 14th Dalai Lama

இதன் தமிழாக்கத்தை விரைவில் பதிவு செய்கிறேன்..

* தினேஷ்மாயா *

அவள் வருவாளா?

Wednesday, February 01, 2017


அவள் வருவாளா ?

* தினேஷ்மாயா *