Suits for all

Monday, October 31, 2016


* தினேஷ்மாயா *

மகிழ்ச்சி

Tuesday, October 25, 2016


ஓவியம்: தினேஷ்மாயா

Though I don't get perfection in my art,

I got HAPPINESS in my Heart from my Art..
- DhineshMaya


* தினேஷ்மாயா *

ஒருமுறை

Sunday, October 23, 2016


* தினேஷ்மாயா *

கணபதி வாகனம்


இடம்: அகலி, கேரளா

புகைப்படம்: தினேஷ்மாயா 

முகப்பு கோபுரம்


இடம்: தஞ்சை பெரிய கோவில்

புகைப்படம்: தினேஷ்மாயா 

குறுநில மன்னர்கள்


இடம்: தஞ்சை பெரிய கோவில்

புகைப்படம்: தினேஷ்மாயா 

தஞ்சை பெரிய கோவில்


இடம்: தஞ்சை பெரிய கோவில்

புகைப்படம்: தினேஷ்மாயா 

ஆமணக்கு


இடம்: அகலி, கேரளா

புகைப்படம்: தினேஷ்மாயா

என் மூன்றாவது கண்


என் மூன்றாவது கண் வழியே, இன்று நான் எடுத்த புகைப்படம்..

இடம்: அகலி, கேரளா

* தினேஷ்மாயா *

உண்மையான மனைவி

Saturday, October 22, 2016



* தினேஷ்மாயா *

நிறங்கள்

Wednesday, October 19, 2016


நிறங்களால் ஆன மரங்கள்..

ஓவியம் : தினேஷ்மாயா

* தினேஷ்மாயா *

தனிமை

Tuesday, October 18, 2016


ஓவியம்: தினேஷ்மாயா

என் தனிமையையும், வெறுமையும்...

* தினேஷ்மாயா *

நவரசம்

கண்ணே !

நவரசத்தில் நான்கு மட்டுமே இங்கே..

மிச்சம் எங்கே ?

* தினேஷ்மாயா *

இசையோடு கலந்துரையாடல்

Monday, October 17, 2016


இசை எங்கும் பரவி இருக்கிறது..

கலைந்து கிடக்கும் எண்ண அலைகளை

ஒன்றிணைத்தால் அங்கே உள்ளொலி கேட்கும்..

அந்த உன்னதமான இசைக்கு

அளவில்லா சக்தி உண்டு..

ஓவியம்: தினேஷ்மாயா

* தினேஷ்மாயா *

ஜெய்ஹிந்த்..


என் பல வருட கனவு..

என்னுள் இருக்கும் கவிஞனை நான் சந்தித்துவிட்டேன்..

என்னுள் இருக்கும் ஓவியனை இன்று எழுப்பியிருக்கிறேன்..

கவிதையும் என் கிறுக்கல்கள்தான்..

என் ஓவியமும் கிறுக்கல்கள்தான்..

கையில் ப்ரஷ் பிடித்து இன்று நான் தீட்டிய முதல் ஓவியம் இது..

ஜெய்ஹிந்த்..

* தினேஷ்மாயா *

நல்லது நடக்கும்

Saturday, October 15, 2016



* தினேஷ்மாயா *

பெண் மயில்



பெண் மயில் !

* தினேஷ்மாயா * 

நிதர்சனமான உண்மை



* தினேஷ்மாயா *

ஏமாற்றம்


* தினேஷ்மாயா *

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !



  ஆயுதபூஜை விடுமுறை முடித்து கோயம்புத்தூர் வருவதற்காக ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தேன். அன்று 30 நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டேன். இசைஞானியின் இசையை என் காதுகளுக்கு விருந்தாக்கிக்கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு பாட்டி வந்து அமர்ந்தார். ஒரு ஐந்து நிமிடம் அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. நாம் காதில் Earphone மாட்டிக்கொண்டிந்த காரணத்தாலோ என்னவோ?

ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். கோவை இந்த ப்ளாட்பாரத்தில்தானே தம்பி வரும் என்று. நான், Earphone-ஐ கழற்றிவிட்டு ஆம் இதில்தான் வரும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் இசையோடு கலந்தேன். என்னுடன் பேச்சை தொடர்ந்தார் அந்த பாட்டி. நான் Earphone-க்கு விடைகொடுத்துவிட்டு அந்த பாட்டியிடம் உரையாடலானேன். இப்படிதாம்பா ஒருமுறை அஞ்சாவது ப்ளாட்பாரத்துல வண்டி வருதுன்னு சொல்லி திரும்ப ஒன்னாவது ப்ளாட்பாரத்துல வருதுன்னு மாத்தி சொல்லி ரொம்ப அலைஞ்சுட்டோம். வயசானவா நாங்க, மாறி மாறி ஏறி இறங்கதுக்குள்ள வண்டி வந்துருச்சு என்றார். ஆமாம் பாட்டி, அப்பப்ப அப்படி நடக்கும், ஆனா எப்பவும் இந்த ப்ளாட்பாரத்துலதான் வரும்னு நான் சொன்னேன். கோவைல இருக்க எங்க பொன்னு வீடு கொஞ்சம் இடிச்சு கட்ட போறாங்க அத பாத்துக்க நாங்க போயிட்டு இருகோம், பொன்னு ஐதராபாத்-ல இருக்கா அவங்க காலைலயே கோவை போய் சேர்ந்திருப்பாங்க, நம்ம வழியாதான் அவங்க வண்டி போச்சு ஆனா காலைல 5 மணிக்கு அவங்க கூட அதே வண்டியில எங்களால போக முடியல, அவர் பாவம் காலம்பர 4 மணிக்கே அவர எழுப்ப வேணாம்னுதான் எல்லாத்தையும் நேத்தே லாரில ஏத்தி அனுப்பிட்டோம், மேஸ்திரி இந்நேரம் அங்க போய் எல்லாம் இறக்கி வெச்சிருப்பார். நமக்கென்ன சும்மா காவல் காக்கத்தானே போறோம் அதான் பொறுமையா கிளம்புறோம்னு படபடவென பேசிட்டே போனார். மேலும் தொடர்ந்தார். அவர் அதோ அங்க உக்காந்துட்டு இருக்கார்னு ஒரு இடத்தை காட்டினார் பாட்டி. நானும் பார்த்தேன். சற்று தூரத்தில் வெள்ளை வேட்டி சட்டையுடன் கையில் ஒரு நாளிதழுடன் அமர்ந்திருந்தார் ஒரு பெரியவர். அவர் Dominic Savio-ல Head Master-ஆ இருந்து Retire ஆனவரு. இங்க இருந்தா எதாச்சும் வெளியில வேலை செஞ்சுட்டே இருப்பார். போனவாரம் கூட Principal வந்து ஒரு Meeting இருக்குனு சொல்லி Invitation குடுத்துட்டு போனார். இங்க இருந்தா மனுஷன் ஒரு இடத்துல இருக்க மாட்டார். Bank-க்கு கூட அவரே நடந்துதான் போவார். இத்தனை வருஷம் நேர்மையாக வாழ்ந்திட்டு இருக்கார். ஒருத்தர்ட்ட கூட காசுன்னு எதிர்ப்பார்த்து வாழ்ந்ததில்லை அவர். பசங்க எதாச்சும் காசு குடுத்தாகூட, அதை ஒரு ரூபா கூட குறையாம உடனே Bank போய் அவங்க account-ல போட்டுட்டு வந்துருவார். நாங்க எங்க போனாலும் ரெண்டு நாள் மூனு நாள் மேல அங்க தங்க முடியறதில்ல. நாம எதுக்கு மத்தவங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டு. எதோ நாங்க மனசுல இளமையா இருக்கறதால அங்க இங்க போயி பசங்க பேரங்கனு பாத்துட்டு வரோம். என்க்கு 75 வயசாச்சு. Sir-கு 87 ஆனா இப்பவும் யார் தயவும் இல்லாமதான் இருக்கோம். ஒரு பையன் சிங்கப்பூர்-ல இருக்கான், பெரிய பொன்னு கொச்சின்-ல இருக்கா, சின்ன பொன்னு ஐதராபாத்-ல இருக்கா. அவ வீடு ஒன்னு கோவைல இருக்கு, அத கொஞ்சம் alteration பண்றா அத பாத்துக்கத்தான் நாங்க போறோம்னு சொன்னார் அந்த பாட்டி. நான் அவர் சொன்ன அனைத்திற்கும் பொறுமையாக கேட்டுக்கொண்டும் சில நேரங்களில் என் கருத்துக்களையும் தெரிவித்து வந்தேன். அவர் இன்னமும் நிறைய பேசினார்.

அந்த பாட்டி பேசிய 20 நிமிடத்தில் 10 நிமிடம் தன் கணவரைப்பற்றியே உயர்வார் பேசிக்கொண்டிருந்தார். அந்த பேச்சில் அவர்களிடையேயான காதல் தென்பட்டது. அந்த உன்னதமான அன்பிற்கு நான் தலைவணங்கினேன். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது. சரி பாட்டி நான் கிளம்பறேன் என்று கூறி கிளம்பலானேன். அடுத்த முறை ஊருக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வந்து போப்பா என்று சொல்லி அவர்கள் வசிக்கும் வீட்டின் தெரு பெயரையும் வீட்டு எண்ணையும் என்னிடம் சொன்னார். சரி பாட்டி என்று சொல்லிவிட்டு நான் நகர்ந்தேன். அப்போது அந்த பாட்டியின் கணவரான அந்த பெருமைக்குரிய தாத்தாவை கடந்துதான் சென்றேன். அவர் அங்கே ப்ளாட்பாரத்தில் இருந்த ஒரு திண்ணையில் வெண்ணிற உடையில், கையில் தினமணி நாளேடு படித்துக்கொண்டிருந்தார். அவரை கடக்கும்போது என்னையறியாமலே அவர் மீது மரியாதைக்கொண்டது. இவர்கள் இருவரின் 50 ஆண்டுகால திருமண வாழ்க்கையை ஒரு நொடி சிந்தித்துப்பார்த்து சிலிர்த்துப்போனேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன். இந்த அருமையான சம்பவத்தை என் வலைப்பக்கத்தில் பதிந்தேயாக வேண்டும் என்று...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !

* தினேஷ்மாயா *

நமது கல்விமுறை

Friday, October 14, 2016


Lavoisier's Atom Model,
Kepler's Law of Planetary Motion,
Mendel's Law of Inheritance,
Pythagoras Theorems....

இவையெல்லாம் நம் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்த நமது கல்விமுறை, வாழ்க்கைக்கு தேவையானவற்றை, இவ்வுலகிற்கு தேவையானவற்றை சொல்லிக்கொடுக்கவில்லையே!

இவையெல்லாம் நான் பள்ளியில் பயின்றதே. ஆனால் இவற்றை நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் பயன்படுத்தியதே இல்லை.

மரக்கன்றுகள் நடவேண்டும், இயலாதவர்களுக்கு உதவ வேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், நாம் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், பொய் பேசுதல் கூடாது, பிறரை ஏளனமாக எள்ளி நகையாட கூடாது, இயற்கை வளங்களை பேணிக்காக்க வேண்டும், சிக்கனம் செய்ய வேண்டும், உழைப்பே கண் கண்ட தெய்வம், நேர்மையாக வாழ வேண்டும், சமூக அவலங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், இன்னும் இதுபோல ஏராளமான நற்குணங்களை என்று நமது கல்விமுறை நம் மாணாக்கர்களுக்கு எப்போது கற்பிக்கும் ?

இன்றைய கல்விமுறை ஒரு போட்டி மனப்பான்மையையே மாணவர்களிடம் உருவாக்கியுள்ளது. கல்வி கற்றலின் இன்பம் முழுமையாக நம் சந்ததியினருக்கு சென்று சேர்வதில்லை. கல்வியே அனைத்திற்கும் அடிப்படை. அதுவே வாழ்வின் ஆணிவேர். அந்த கல்வியே தடுமாற்றம் காணும்பொழுது, அதை கற்று வளரும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற கவலை எனக்குள் எழாமலில்லை.

கல்வி என்பது சிறந்த மாணவனை உருவாக்காமல், ஒரு சிறந்த குடிமகனை உருவாக்க வேண்டும். அப்படி நடந்தால் நம் நாடு மட்டுமல்ல ஒவ்வொரு நாடும் வல்லரசாகும்...

* தினேஷ்மாயா *

நேரம் போதாதே கண்மணி..

Thursday, October 13, 2016


திருமணத்திற்குப் பின்,

நீ வேலைக்கு செல்லட்டுமா என்று கேட்கிறாய்..

அட, நம் திருமணத்திற்குப் பின்

நானே வேலைக்கு செல்லலாமா வேண்டாமா என்று நினைக்கிறேன்..

உன்னுடனான ஊடலுக்கும் கூடலுக்குமே நேரம் போதாதே கண்மணி..

* தினேஷ்மாயா *

குறும்புக்கார குழந்தை

உன்னை காணும் ஒவ்வொரு முறையும்

உன் குறும்புக்கார குழந்தையாய் மாற ஆசை !

* தினேஷ்மாயா *

வரம்

நீ ஜனனித்த அந்த நொடியில்,

தவமே செய்யாமல், இறைவன்

எனக்கு வரம் அளித்துக்கொண்டிருந்தார்..

* தினேஷ்மாயா *

அவள் வருவாள்..

தவறான நபர்மீது அன்பு செலுத்திவிட்டேன்..

ஆனால், எனது அன்பு தவறானது அல்ல.

எனதன்பை உண்மையாக பெற

உண்மையான நபர் வருவார்..

அவள் வருவாள்..

* தினேஷ்மாயா *

மரணம் இலவசம்

எனக்கு தெரிந்தவரை.

இங்கே இலவசமாக கிடைப்பது

மரணம் மட்டுமே !

* தினேஷ்மாயா *

திருடப் பார்க்கிறது

முகத்தை மூடிக்கொள்..

உன்னிடமிருந்து ஒளியை - அந்த

மெழுகுவர் திருடப் பார்க்கிறது !

* தினேஷ்மாயா *

சிக்கிக்கொள்கிறதே !

இரு வாகனங்கள் மோதினால்தான்

விபத்து ஏற்படவேண்டுமா என்ன ?

உன்னை கடந்து செல்லும் அனைத்து வாகனமும்

விபத்தில் தன்னந்தனியாய் சிக்கிக்கொள்கிறதே !

* தினேஷ்மாயா *

பிரபஞ்ச இரகசியம்

பிரபஞ்ச இரகசியத்தை

உன்னுள் மறைத்துவைத்திருக்கிறாய்..

எனக்கும் உணர்த்துவாயா ?

* தினேஷ்மாயா *

வித்தைக்காரி


வித்தைக்காரிதான் நீ..

உன்னையே சிந்திக்கும்படி செய்துவிட்டாயே..

* தினேஷ்மாயா *

மெழுகு சிலை

உயிர்க்கொண்ட பொருளை,

மெழுகு சிலையாய் வார்ப்பார்கள்

ஆனால், ஒரு மெழுகு சிலைக்கு

உயிரூட்டி உன்னை வார்த்திருக்கிறான் இறைவன்.

* தினேஷ்மாயா *

அழகு

Monday, October 10, 2016


அழகு என்பது

நிறத்தில் இல்லை....

* தினேஷ்மாயா *

திருடி

Sunday, October 09, 2016


கொடுக்க வந்தவள் என்று எண்ணினேன்..

திருடி செல்லவே வந்தவள் நீயடி கண்ணே..

* தினேஷ்மாயா *

இரண்டு குழந்தைகள்


இரண்டு குழந்தைகள் இங்கே

இதில் எது என் செல்ல குழந்தை ?

* தினேஷ்மாயா *

பட்டத்து இளவரசி

முடியவில்லை

Friday, October 07, 2016


ஒரு அத்தியாயம் தவறாக முடிந்தால்

உன் வாழ்க்கையே தவறாக முடிந்ததாக அர்த்தமில்லை

உன் வாழ்க்கை இன்னும் முடியவில்லை..

* தினேஷ்மாயா *

இயற்கை காவலன்



இயற்கை பாதுகாவலர்கள் என்று சிலர் சுற்றுகின்றனர்..

ஐயா...

இயற்கையை நீங்கள் பாதுகாக்க வேண்டா..

இயற்கையை அழிக்காமல் இருங்கள். அதுவே போதும்..

430 கோடி ஆண்டுகளாக

இயற்கைதான் பூமியை பாதுகாத்து வருகிறது என்பதை மறவாதே..

* தினேஷ்மாயா *

தமிழன் திறமை


   தமிழன் கட்டிய கோயிலின் விரிசலை சரிசெய்ய, லண்டன் வல்லுநர் தேவைப்படுகிறார். நம் தமிழகத்தில் இருக்கும் கோயில்களை போன்று, உலகில் நீங்கள் எங்குமே காணமுடியாது. இதைப்போன்ற கோயிலை கட்டிய தமிழனைவிடவா லண்டன் வல்லுநர் சிறப்பாக செயல்படுவார் ? திறமைகள் நம் ஊரிலேயே கொட்டி கிடக்கிறது ஐயா. தேடத்தான் உங்களுக்கு நேரமில்லை..

* தினேஷ்மாயா *

ஏதாச்சும்

* தினேஷ்மாயா *

ஏதும் செய்யாமல் இருப்பதைவிட

ஏதாச்சும் செய்வது நன்றே !

* தினேஷ்மாயா *

உண்மையை காண்கையில்

Thursday, October 06, 2016



உன் கண்களை காணும் ஒவ்வொருமுறையும்

என் கண்களில் நீரை வார்க்கிறேன்..

உண்மையை காண்கையில் கண்களில் நீர் வருமோ ஐயனே !

* தினேஷ்மாயா *

பாக்கியம்



உன்னை சிந்தையில் வைக்கும் பாக்கியம் கிட்டியது

யான் செய்த பெரும் பேறு பகவான் ஸ்ரீ ரமண சற்குருவே..

* தினேஷ்மாயா *

அஞ்சுகிறேன்


பாவம் செய்ய அஞ்சுகிறேன் ஐயனே..

இதுகாணும் நான் செய்த பாவங்களை போக்கும் வழிகாட்டி அருள்வாய்..

நாயாக நான்,

மலையுருவான உனையே சுற்றிவருகிறேன்..

* தினேஷ்மாயா *

அருணாச்சலா


உன்னில் கலந்துவிட நெஞ்சம் தவிக்கிறது..

அருணாச்சலா !

அருள்புரிவாய் ஈசனே..

உன் கருணை ஒன்றே போதும்..

முக்தியைவிட மேலானது

எனக்குன் கருணை..

* தினேஷ்மாயா *

Nature

Be a servant to The Mother Nature..

Never try to master it..

* தினேஷ்மாயா *

எங்கோ படித்தது

உனக்கு சுதந்திரம் அளிப்பவரிடம்

அடங்கி இரு..

உன்னை அடக்கி வைப்பவரிடம்

சுதந்திரமாய் இரு..

- எங்கோ படித்தது.

* தினேஷ்மாயா *

போ நீ போ

Wednesday, October 05, 2016

போ நீ போ...

எனக்கு நீ வேண்டாம்..

போய்விடு..

* தினேஷ்மாயா *

அர்த்தமற்ற அன்பு

உன் அன்பை புரிந்துக்கொள்ளாதவர்,

உன் அன்பிற்கு பாத்திரமாகும்போது

உன் அன்பு அர்த்தமற்றதாகிவிடுகிறது..

* தினேஷ்மாயா *

கருணை மலை

அனைவரும் சொல்கிறார்கள் - இது

அருணை மலை என்று..

எனக்கு தெரிகிறது - இது , உனது

கருணை மலை என்று..

* தினேஷ்மாயா *

உதவி

Tuesday, October 04, 2016

உன் இதழ்கள்

இந்த பழத்தை பார்க்கும்பொழுதெல்லாம் - உன்

இதழ்களே நினைவில் வந்து செல்கிறதடி..

* தினேஷ்மாயா *

நாற்பது விரல்கள்

Monday, October 03, 2016

நாற்பது விரல்கள் இணைந்த தருணம்..

ஆசை அதிகம் வரும்

ஓசை குறைந்தே வரும்..

* தினேஷ்மாயா *

கவிதை

   இதுவரை கவிஞர்கள் எழுதிய கவிதையைவிட, எழுதி எழுதி, இது சரியில்லை என்று கிழித்தெரிந்த கவிதைகள்தான் ஏராளம்..

* தினேஷ்மாயா *