அகராதி

Saturday, November 14, 2015


என் வாழ்க்கைக்கான அகராதி நீ..

என் வாழ்க்கைக்கான அர்த்தம் நீ..

* தினேஷ்மாயா *

விடுகதைதான்..


உன் பார்வை எப்பொதும் எனக்கு

விடுகதைதான்..

எவ்வளவு சிந்தித்தாலும்

விடை கிடைப்பதேயில்லை..

* தினேஷ்மாயா *

கணக்கு


கணக்கில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்..

நீ என்னை உன் கண்களால் எத்தனைமுறை

தாக்கினாய் என்பதை...

நம் திருமணத்திற்குப் பிறகு

எப்படி திருப்பிக்கொடுக்கிறேன் என்று மட்டும் பார்...

* தினேஷ்மாயா *

சிலநெரங்களில்..


சிலநெரங்களில்..

இசை என்னை ஆட்கொள்வதுபோல

நீ கூட என்ன ஆட்கொண்டதில்லையடி..

* தினேஷ்மாயா *

காதல் ரேகை


ஜோதிடம் பார்க்கும் இடத்தில் சொன்னார்கள்..

எனக்கு ஆயுள் ரேகை நீளம் என்று...

அதெல்லாம் இருக்கட்டும் -

காதல் ரேகை எவ்வளவு நீளம் என்று கேட்டுவைத்தேன் நான்..

* தினேஷ்மாயா *

உன்னிடமே விட்டுவிட்டேன்..


என் ஆசைகள் அனைத்தையும்

உன்னிடம் கொட்டித்தீர்த்துவிட்டேன்..

இனி அவற்றை என்ன செய்யவேண்டுமோ

அதை உன்னிடமே விட்டுவிட்டேன்..

* தினேஷ்மாயா *

எனக்கென்ன ?



எனக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை

பிறருக்கு மனவருத்தமின்றி நான் செய்யும்வரை

யார் என்ன சொன்னால் எனக்கென்ன ?

* தினேஷ்மாயா *

உனக்காக மட்டும்


இந்த வாழ்க்கை உன்னுடையது..

இந்த உலகம் உனக்கானதுதான்..

ஆனால், உன் வாழ்க்கையை

உனக்காக மட்டும் வாழ்ந்துவிட்டு செத்துப்போகாதே..

பிறர்காகவும் வாழ்..

* தினேஷ்மாயா *

வார்த்தை ஜாலம்


ஊற்றாய் பெருக்கெடுத்தாலும்

சொட்டு சொட்டாய்தான் வருகிறது

என் கவிதைக்கான வார்த்தைகள்...

உன் கண்கள்தான் அதில் பாதியை

பறித்துக்கொள்கிறதே !!

* தினேஷ்மாயா *

மர்ம முடிச்சுகள்


வாழ்க்கையின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது,

எவர்க்கும் புரியாத இரகசியங்கள் வெளிவரும்...

* தினேஷ்மாயா *

உணவு

Inline images 1




நாம் உணவை உண்கிறோம் என்பதைவிட

உணவு நம்மை உண்கிறது என்பதே நிதர்சனமான உண்மை..

* தினேஷ்மாயா *

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..


நேற்றைய குழந்தைகளான இன்றைய இளைஞர்களுக்கும்

நாளைய இளைஞர்களான இன்றைய குழந்தைகளுக்கும்

என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..

* தினேஷ்மாயா *

வண்ணங்கள்

Friday, November 13, 2015


பற்பல வண்ணங்கள்

என்னுள்

பற்பல எண்ணங்களை

அவ்வப்போது தூவிவிட்டு செல்கின்றன

* தினேஷ்மாயா *

போதவில்லை


என் செல்ல மகளை கொஞ்ச 24 மணிநேரம் போதவில்லை..

நாம் வெள்ளி கிரகத்திற்கு குடியேறிவிடுவோமா மனைவியே ?

* தினேஷ்மாயா *

வீரமும் அச்சமும்


வீரத்தமிழனின் புகைப்படத்தை பகிர்ந்துக்கொள்ள

இங்கு பல தமிழக இளைஞர்கள் ஏனோ அஞ்சுகின்றனர்..

* தினேஷ்மாயா *

உன்னை அணைக்க


விளக்கை அணைப்பது

உன்னை அணைக்க..

* தினேஷ்மாயா *

இரகசியம்


பூட்டிவைத்த இரகசியம் அனைத்தும்

ஒருநாள் வெளிவரும்..

இதுவே இரகசியத்தின் இரகசியம்..

* தினேஷ்மாயா *

மறதி


அன்றாட வாழ்க்கை

நமக்கு நிறைய கற்றுக்கொடுத்தாலும்

நாம் அதில் பெரும்பாதியை

மறந்தேபோகிறோம்..

* தினேஷ்மாயா *

வஞ்சகம்


வஞ்சகமான உலகில்

அப்பாவியாய் வாழ்வது

சோதனையும் கூட சாதனையும் கூட..

* தினேஷ்மாயா *

விதை


காற்றின் வேகத்தில் நான் ஆடலாம், சாயலாம், மரித்தும் போகலாம்..

என் விதையை விட்டுத்தான் செல்கிறேன்..

* தினேஷ்மாயா *

திகட்டாத ஒன்று


உயிரினங்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் -

என்றைக்குமே திகட்டாத ஒன்று உண்டென்றால், அது

காதல் காதல் காதல்....

* தினேஷ்மாயா *

மச்சி


எங்கள் நட்பைப் பற்றி

கவிதை ஒன்றை எழுத சொன்னான் நண்பன்..

“மச்சி...

நம் நட்பே ஒரு கவிதை தானே ?!”

* தினேஷ்மாயா *

கொள்ளை


அனைவருக்கும் சரிசமமாகத்தான்

இயற்கை கொடுத்திருக்கிறது..

அனைத்து உயிர்களும் தத்தம் தேவைக்கு

வளங்களை எடுத்துக்கொண்டிருக்க -

மனிதன் மட்டும்

கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்..

* தினேஷ்மாயா *

யுக்தி


போரில் வென்றிட தடுக்க பல யுக்திகள் ...

அமைதியை நிலைநாட்ட ஒன்றுகூட இல்லை...

* தினேஷ்மாயா *

தனித்தீவு


காதலர்கள் காதலிக்க

தனித்தீவு தேவயில்லை..

இரு காதலர்கள் ஒன்றிணைந்தால்

அவர்களே தனித்தீவுதான்..

* தினேஷ்மாயா *

மிடாஸ்


மிடாஸ் மன்னன் தொட்டதெல்லாம் பொன் ஆகுமாம்.

ஆனால் -

நான் பார்ப்பதெல்லாம் நீ ஆகிறதே ...

* தினேஷ்மாயா *

உன் மனம்

Thursday, November 12, 2015


என் மனம் இரும்புதான்..

ஆனால் -

உன் மனம்தான் காந்தமாயிற்றே !

* தினேஷ்மாயா *

மண்வாசமும் உன்வாசமும்



மழையின்போது மண்வாசமும்

மழை இல்லாத போது உன்வாசமும்

என்னை அதிகம் ஈர்க்கின்றன...

* தினேஷ்மாயா *

காத்திருக்க வேண்டியதில்லை..


உனக்காக கவிதை எழுத முனையும்பொழுதெல்லாம்

வார்த்தை வர நான் காத்திருக்க வேண்டியதில்லை..

உன் கண்கள் தான் எனக்கு வார்த்தைகளை

அள்ளித்தந்துக்கொண்டே இருக்கிறதே..

* தினேஷ்மாயா *

நீ....


மழை

வானவில்

கடற்கரை

பூங்கா

காலைநேர பனித்துளி

இசை

கவிதை

புத்தகம்

நெடுந்தூர பயணம்

நீர்வீழ்ச்சி

இவையெல்லாம் என் மனதிற்கு

இன்பம் பயக்கும்..

இப்போது இவற்றுடன்

நீயும் சேர்ந்துக்கொண்டாய்..

* தினேஷ்மாயா *

நீ மட்டும்


உன்னைப்போன்ற பறவைகள் எல்லாம்

பறந்துக்கொண்டிருக்க -

நீ மட்டும் நடப்பதேன் ?

* தினேஷ்மாயா *

காத்திருக்கலாமா ?



எனக்காக பிறந்தவள் எங்கிருக்கிறாள் என்று

தேடலாமா ?

இல்லை இயற்கையே அவளை எனக்கு

அறிமுகம் செய்துவைக்கும் என்று 

காத்திருக்கலாமா ?

* தினேஷ்மாயா *

உன்னைச்சுற்றி


எனக்கும் மத்தாப்புக்கும் சிறிய வித்தியாசம் மட்டுமே..

நீ மத்தாப்பை சுற்றுகிறாய்,,

நானோ -

உன்னையே சுற்றுகிறேன்..

* தினேஷ்மாயா *

அம்மா போல அள்ளிதரும்



அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

அவ நட்டு வச்ச நாத்த எல்லாம்
கதிராக்குறா
எங்க புள்ளக்குட்டி அத்தனைக்கும்
பசி ஆத்துரா
அவ காயாமத்தான் பச்ச மண்ண
வளமாக்குறா..
வழிகாட்டுறா..

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

எத்தனையோ நாளாக
எண்ணியது ஜோராக
அத்தனையும் கைசேர
வருதே தூரல்..
அக்கா புள்ள அவ போல
அழகான மண்வாசம்
நண்டுசிண்டு விளையாட
விலகாத சந்தோஷம்..
புத்து குள்ள கட்டெறும்பு குடிஏறுதே
அத கண்டுகிட்ட தட்டானும்தான் தடுமாறுதே
வரும் காலம் இனி சோகம் இல்ல
தெளிவாகுதே..
விதிமாறுதே..

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

பட்ட மரம் பூவாக
பள்ளங்குழி மேடாக
கொட்டுகிற ஆகாயம் கொடுக்கும் சாமி
கட்டடங்கள் உருவாக
வாயக்காட்ட அழிச்சாங்க
பட்டிணியில் பல நூறு விவசாயி மறைச்சாங்க
கண்ணக்கட்டி விட்டதுபோல தெரியாமலே
நாம தட்டிக்கிட்டு நிக்கிரோமே புரியாமலே
விவசாயம் மட்டும் இல்லையினா உயிர் ஏதுடா
உலகேதுடா???

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

அவ நட்டு வச்ச நாட்ட எல்லாம்
கதிராக்குறா
எங்க புள்ளக்குட்டி அத்தனைக்கும்
பசி ஆத்துரா
அவ காயாமத்தான் பச்ச மண்ண
வளமாக்குறா..
வழிகாட்டுறா..

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்


படம்: 49 O
இசை: கே
பாடியவர்: ஜெயமூர்த்தி