கல்வி

Tuesday, April 29, 2014


நாம் கற்கும் கல்வி எதற்காக ?
வேலை வாங்குவதற்காக மட்டுமா ?
இல்லை நம்மை ஒரு நல்ல மனிதனாக்குவதற்காகவா ?

* தினேஷ்மாயா *

In Training...

Monday, April 28, 2014





DhineshMaya in Training !

* தினேஷ்மாயா *

விடுமுறை

Saturday, April 26, 2014



  16-ஆவது நாடாளுமன்ற தேர்தலில் நான் முதல்முறையாக வாக்களித்துவிட்டு சென்னை வந்தேன். வந்து இறங்கியவனுக்கு 2 மாதங்கள் அலுவலக வேலை சார்பாக பயிற்சி இருக்கிறது என்று செய்தி வந்துள்ளது. 28-04-2014 முதல் 20-06-2014 வரை. நான் என் பயிற்சி அனைத்தையும் சிறப்பாய் முடித்துவிட்டு என் வலைப்பக்கம் பக்கம் வருகிறேன். அதுவரை ஒரு சிறிய விடுமுறையை இந்த பக்கத்திற்கு விடுகிறேன்.

விரைவில் சந்திப்போம்..

நன்றி ! வணக்கம் !

* தினேஷ்மாயா *

விளையாட

Saturday, April 19, 2014


ஒரு குழந்தை விளையாட , விளையாட்டு திடல் ஒன்றும் தேவையில்லை.. விளையாடுவதற்கு அந்த குழந்தைக்கு சுதந்திரம் கொடுத்தாலே போதும்...

* தினேஷ்மாயா *

மணப்பெண்

A stunningly beautiful Indian woman poses for a portrait on the Ganges river. - Varanasi, Uttar Pradesh, India - Daily Travel Photos

இடம்: வாரணாசி

* தினேஷ்மாயா *

மெக்சிகன் நடனம்

Traditional Mexican Dance Baile Folklorico Colorful Dress 5 - Seoul, South Korea - Daily Travel Photos

* தினேஷ்மாயா *

சகோதரிகள்


* தினேஷ்மாயா *

நவ நாகரிகம்


* தினேஷ்மாயா *

காதல் தோல்வி


நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட காதல் தோல்வியை நினைத்து குடிக்கிறாரோ இந்த பெரியவர் ?

* தினேஷ்மாயா *

உணவு


  நாம் உண்ணும் உணவு நமது ஆயுளை அதிகரிப்பதாக இருக்கவேண்டுமே தவிர நம் ஆயுளை குறைப்பதாய் இருக்கவே கூடாது..

* தினேஷ்மாயா *

மூன்று காளைகள்


* தினேஷ்மாயா *

குரு எவ்வழியோ


குரு எவ்வழியோ 

சீடனும் அவ்வழியே ..

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சி


* தினேஷ்மாயா *

சுட்ருவேன்


* தினேஷ்மாயா *

சுட்ருவேன்


* தினேஷ்மாயா *

ஓய்வு

Tourists lounge on benches on the ferry between Bali and Lombok. - Lombok, Indonesia - Daily Travel Photos


* தினேஷ்மாயா *

இவை இன்றி


இவை இன்றி கணிணியில் ஒரு அணுவும் அசையாது !

* தினேஷ்மாயா *

நீரோடு விளையாடி


* தினேஷ்மாயா *

CHEERS !!!!


* தினேஷ்மாயா *

என் ஆயுதம்

bokeh_photography_03



  என் ஆயுதம் - என் புகைப்படக்கருவி தான்..

* தினேஷ்மாயா *

சம்போ மகாதேவா


* தினேஷ்மாயா *

இன்னொரு புத்தரோ ?

Parisian Street Performer Mummy Sitting Mosaic - Many Places, Around The World - Daily Travel Photos

இன்னொரு புத்தரோ இவர் ?

மரத்தடியில் ஞானம் பெற காத்திருக்கிறாரோ ?

* தினேஷ்மாயா *

மூன்று முகம்

Portrait of Three Colorful Sikh Girls - Many Places, Around The World - Daily Travel Photos

* தினேஷ்மாயா *

இளவரசி

Chinese Bai Minority Girl Traditional Clothes - Many Places, Around The World - Daily Travel Photos

 இளவரசி ஒருத்தி ராணியாகிறாள்...

* தினேஷ்மாயா *

தனியே ஒரு நாற்காலி


  

  தனியாய் இருக்கும் இந்த நாற்காலிக்கு நான் துணையாய் போய் உட்கார விரும்புகிறேன்..

* தினேஷ்மாயா *

என் மக்கள்


என் ஆப்பிரிக்க தேசத்து மக்கள்..

* தினேஷ்மாயா *

வாத்தியம்


* தினேஷ்மாயா *

பாசம்

TPOTY winners


* தினேஷ்மாயா *

குழந்தைத்தனம்

Face8 Beautiful Faces: Travel Photography World Tour

 குழந்தைத்தனம் மாறா குழந்தை ..

இடம் : மடகாஸ்கர் , அப்பிரிக்கா..

* தினேஷ்மாயா *

இமை பிரியா

Face3 Beautiful Faces: Travel Photography World Tour

இவர்கள் இணைபிரியா தோழர்கள் மட்டுமல்ல..

இமை பிரியா தோழர்களும் கூட..

* தினேஷ்மாயா *

ஓடுங்கள்


அனைவரும் நாலாபுறமும் ஓடுங்கள்..

கொலைகாரி ஒருத்தி 

தன் பார்வையால்

அனைவரையும் கொலைசெய்ய 

வந்துக்கொண்டிருக்கிறாள் ..

* தினேஷ்மாயா *

நல்லா யோசிக்கிறாங்க


* தினேஷ்மாயா *

என்ன சொல்ல !!


* தினேஷ்மாயா *

மஞ்சள் காமாலை


மஞ்சள் பூசிய கால்களோடு

நீ தெருவில் நடந்து சென்றாய்..

தெருவிற்கு மஞ்சள் காமாலை !

* தினேஷ்மாயா *

பச்சைக்கிளிகள் கையோடு


* தினேஷ்மாயா *

நில் கவனி செல்


* தினேஷ்மாயா *

பகிர்ந்து உண்



பறவைகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது...

* தினேஷ்மாயா *

இது போதுமா ??


இது போதுமா ?

இல்லை, இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?

* தினேஷ்மாயா *

அணில்


இது வெளிநாட்டு அணில் போல... அதான் இதன் முதுகில் மூன்று கோடுகள் இல்லை !!

* தினேஷ்மாயா *

விதை


உயர்ந்து நிற்கும் மரமெல்லாம்

என்றோ ஓர் நாள் விதைகளாக

மண்ணில் விழுந்தவையே....

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

Don't Judge Me


* தினேஷ்மாயா *

வீணை


* தினேஷ்மாயா *

வீணையுடம் அப்துல்கலாம் அவர்கள்


 இணையத்தில் உலா வரும்போது எனக்கு கிடைத்த அரிய புகைப்படங்களில் ஒன்று இது..

* தினேஷ்மாயா *

பைத்தியம் பிடிக்கிறது



உன் மௌனத்தை நினைக்குபோதெல்லாம்

எனக்கு பைத்தியம் பிடிக்கிறது..

அந்த பைத்தியக்காரத்தனம் தான்

என் காதல் !!

* தினேஷ்மாயா *

மைனா பற பற


* தினேஷ்மாயா *

ஒளிவட்டம்


தியானம் செய்யுங்கள்.

உங்கள் மனதுக்குள்ளே ஒரு ஒளிவட்டம் தோன்றும்.

அதுதான் கடவுள்..

அவ்ளோதான் !!

கடவுள் உன்னுள்தான் இருக்கிறது ..

அதை உணர தொடங்கிவிட்டால் போதும் ..

வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்..

* தினேஷ்மாயா *

காதலை சொல்வது எப்படி...




காதலை சொல்வது எப்படி ?

உலகத்தில் இருக்கும் ஒருதலை காதலர்களின் மனதில் தினம் தினம் தீயாய் எரிந்துக்கொண்டிருக்கும் கேள்வி இது.

எப்படி தன் காதலை சொல்வது எப்போது சொல்வது இன்னும் இப்படி பல கேள்விகள் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.

இந்த பதிவை என் நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதால் இங்கே பதிவு செய்கிறேன். இது அவருக்கு மட்டுமின்றி மற்றவர்க்கும் கொஞ்சம் உதவியாய் இருக்குமென நம்புகிறேன்.

இங்கே ஒரு ஆண் பெண்ணிடம் காதலை எப்படி சொன்னால் நல்லா இருக்கும்னு பார்க்கலாமே. ஏன்னா ஒரு ஆணின் மனசு ஒரு ஆணுக்குத்தான் தெரியும் இல்லையா..

என் விளக்கங்கள் கொஞ்சம் விளையாட்டாய் தெரிந்தாலும் கூர்ந்து படியுங்கள். உங்கள் மனதிடம் ஒப்படைத்துவிடுங்கள் பதில் சொல்லும் பொறுப்பை.

முதலில் சொல்லுங்கள்.. நீங்கள் உண்மையாகவே அவளை விரும்புகிறீர்களா. உயிருக்கு உயிராக விரும்புகிறீர்களா. அவள்தான் உங்கள் வாழ்க்கைதுணை என்று உறுதியாக நம்புகிறீர்களா. அப்படியானால் இந்த பதிவை மேற்கொண்டு நீங்கள் படிக்கலாம். இல்லையென்றால் வேறு வேலை எதாச்சும் இருந்தா பாருங்க.

ம்.. அவள் தான் உங்கள் வாழ்க்கை துணை என்று மனதில் உறுதியாய் பொருத்திட்டீங்க இல்லையா.

சரி..

அவளுக்கு நீங்கள் அவளை விரும்புவது தெரியுமா. அதாவது நீங்கள் விரும்புவது அவளுக்கு அவள் தோழிகள் வாயிலாகவோ அல்லது உங்கள் நண்பர்கள் மூலமோ அல்லது உங்கள் செயல்கள் மூலமாகவோ அவளுக்கு தெரியுமா.தெரியவில்லை என்றால் அதை முதலில் தெரியப்படுத்துங்கள். நான் என்ன சொல்ல வரேன்னா, நீங்கள் அவளை விரும்புவது அவளுக்கு உங்கள் செயல்கள் மூலம் தெரியப்படுத்துங்கள். இதுதான் முதல் கட்டமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் விடுத்து எடுத்த எடுப்பிலேயே காதலை சொல்லி விடாதீர்கள்.

அப்புறம் இன்னுமொரு விஷயம். அவள் வேறு யாரையாவது விரும்புகிறாளா என்பதையும் தெரிஞ்சுக்கனும். சரியா.

உங்களுக்கு மட்டுமே அவளை பிடித்திருக்கனும் உங்களை மட்டுமே அவளுக்கு பிடித்திருக்கனும் என்றில்லையே.

அப்புறம் அவளிடம் பேசுங்கள். முதலில் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை அவள் புரிஞ்சுக்க வாய்ப்பை கொடுங்கள். அவளை நீங்கள் புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. பார்த்ததும் காதல் தவறில்லை. ஆனால் அழகைவிட அன்பு மட்டுமே கடைசி வரைக்கும் கூட வரும் என்பதை மறந்துடாதீங்க. அவளைப்பற்றி முழுசா தெரிஞ்சுக்கோங்க. அதே சமயம் அவளுக்கு உங்களைப் பற்றி நல்ல எண்ணம் வரும்படி நடந்துக்கோங்க. அதற்கு முன்னாடி தப்பான பழக்கம் ஏதாச்சும் இருந்தா விட்டுடுங்க. அவளுக்கு செய்யுற துரோகம் அது அதோடில்லாமல் அது அவளுக்கு தெரியவரும்போது அதுவே உங்கள் காதலுக்கு முதல் எதிரியாய் மாறிடவும் வாய்ப்புகள் இருக்கு.

அவள் உங்களுடன் பேசவே மறுக்கிறாள், உங்களை பார்க்கவே வெறுக்கிறாள் என்றால், அவளை தூரத்தில் இருந்து பாருங்கள். நீங்கள் பார்ப்பதை அவளும் பார்க்க வேண்டும். தினமும் அவளை நீங்கள் பார்ப்பதைவிட அவள் உங்களை தினமும் பார்க்க வேண்டும். இதற்கு நீங்கள் என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. எப்படியாவது அவள் உங்களை தினமும் ஒரு நொடியாவது பார்க்கும்படி செய்யுங்கள்.

உங்கள் இருப்பை அவளுக்கு தெரியப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஒருவேலை நீங்கள் ஒரு ஊரிலும் அவள் வேறு ஊரிலும் இருந்தால் அவளுடன் தொடர்பில் இருக்க பாருங்கள். முடிந்தால் தினமும் ஒருமுறையாவது அவள் குரலை கேளுங்கள். அவளிடம் பேச முயலுங்கள்.

எடுத்த எடுப்பிலேயே காதலை நேரிலோ, கடிதத்திலோ, தொலைப்பேசியிலோ சொல்ல வேண்டாம்.

இன்னொரு விஷயம். நீங்கள் அவளிடம் காதலை சொல்லும்போது நேரில் சென்று சொல்லுங்கள். வேறு எவரின் துணையும் வேண்டாம், கடிதம் அல்லது வேறு எந்தவித தொடர்பும் வேண்டாம்.

நேரில் காதலை சொல்லும் துணிச்சல் உங்களுக்கு இருந்தாலே போதும், அவளுக்கு உங்களை பிடித்துவிட்டது மாதிரிதான். காதலும் வீரமும் தமிழர் பண்பாடு. காதலை மட்டும் காட்டாதீர்கள். கூடவே வீரத்தையும் காட்டுங்கள். அதுக்காக சண்டையெல்லாம் போட சொல்லல. தைரியமாக காதலை நேரில் சொல்லுங்கள்.

அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் நிங்களும் செல்லுங்கள். அவள் மனதில் இடம் பிடிக்க வேறெதுவும் செய்ய வேண்டாம். அவள் பார்வையில் இடம் பிடியுங்கள். தானாகவே அவள் மனம் உங்களைப்பற்றி நினைக்கும். அதற்காகத்தான் சொன்னேன். தினமும் அவள் உங்களை பார்க்கும்படி செய்யுங்கள் என்று.

நல்ல நாள் எதுவும் பார்க்க வேண்டாம். கடவுளிடம்கூட வேண்ட வேண்டாம். உங்கள் மனதில் இருக்கும் உண்மை காதலை அவளிடம் தெரியப்படுத்த ஒரு சில சந்தர்ப்பங்கள் போதும்.

அவள் உங்களை பார்க்கும்போது சிரித்தால் அல்லது முகம் சுழிக்காமல் பார்த்தால் உடனே அவளும் உங்களை காதலிக்கிறாள் என்று அவசர படாதீர்கள். நீங்கள் பார்க்க சுமாரக இருக்கீங்கனு அர்த்தம். வேறு எதுவும் பெரிசா இருக்க வாய்ப்புகள் இல்லை.

ஒருவேலை அவள் உங்களை பார்ப்பதை தவிர்த்தால், அவள் மனதில் உங்களுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் என்று மட்டும் சொல்லலாம். அவள் மனதில் வேறு யாராவது இருக்கலாம் அல்லது அவளுக்கு உங்கள் மீது விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் எதையும் அவசரம் காட்டாமல் பொறுமையாக முடிவு செய்யுங்கள்.

 சினிமாவில் வரும் சாகசங்கள் எதுவும் தேவையில்லை. உண்மையாக இருக்கும் பையனையே ஒரு பெண் எதிர்பார்க்கிறாள். பணத்தையோ மற்ற எதயாச்சும் எதிர்பார்த்து வந்தால் அது காதல் கிடையாது. உண்மையாக இருங்கள். நீங்கள் ஏழையென்றால் பணக்காரன் போல அவளிடம் நடந்துக்கொள்ள வேண்டாம். பணக்காரன் என்றால் தாம்தூம் என்றெல்லாம் அவள் முன் செலவு செய்ய வேண்டாம். எப்போதும் ஒரு பெண்ணை பொய்யான வெளிப்பாடுகளால் கவர நினைக்காதீர்கள். உங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்து அவள் மனதில் இடம்பிடிக்க நினையுங்கள். அதுதான் எப்போதும் நிலைத்திருக்கும்.

 எடுத்த எடுப்பிலே காதலை சொல்லாதீர்கள். கொஞ்சம் பொறுத்திருந்து சொல்லுங்கள். ஆனால் காதலை நேரில் சொல்லுங்கள், அவளிடன் தனிமையில் சொல்லுங்கள். அவள் பதிலுக்காக காத்திருங்கள். மாத கணக்கில் காத்திருக்காதீர்கள். உங்கள் காதலை சொல்லிய ஓரிரு நாட்களுக்கு அவளுக்கு சிந்திக்க நேரம் கொடுங்கள். அவளாகவே உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டாள். நீங்கள்தான் சில நாட்கள் கழித்து அவளை அணுக வேண்டும். அப்போதே உங்களுக்கு அவளின் செயல்கள் மூலம் அவளின் விடை தெரிந்துவிடும்.

காதலை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எவனும் எழுதிவைத்துவிட்டு செல்லவில்லை. என் கதையை கேட்டால் அது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும். இருந்தாலும் எனக்கு கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்தமட்டும் இங்கே பதிந்திருக்கிறேன்.

Love பண்ணுங்க Boss.. Life நல்லா இருக்கும் !

* தினேஷ்மாயா *

ஜாதகம் பார்க்கலாமா ?

Friday, April 18, 2014



    பல ஆண்டுகளாக இருந்துவரும் கேள்விதான் என்றாலும், நானும் என் கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன்.


   “ஜாதகம் பார்க்கலாமா?”

   நேரம் காலம் ஜாதகம் பார்த்து செய்யும் அனைத்து வேலைகளும் நன்மையிலேயே  முடிந்திருக்கிறதா என்ன ?

  ஜாதகம் பார்க்காமல் செய்த அனைத்து வேலைகளும் தோல்வியிலா முடிந்திருக்கிறது ?

  ஜாதகம் பார்த்து செய்துவைத்த திருமணங்கள் எத்தனையோ தடம் மாறி போயிருக்கிறது. எதுவும் பார்க்காமல் செய்த திருமணங்கள் இன்றும் சுகமாய் வாழ்ந்து காட்டுகிறது.

   எந்த விஷயத்தையும் முடிவு என்னவென்று தெரியாமல் அதை செய்யும்போதுதான் நமக்கு ஒரு புது நம்பிக்கை பிறக்கும். எப்படியாச்சும் அந்த வேலையை செய்து முடிக்கவேண்டும் என்று. முடிவு தெரிந்து ஒரு விஷயத்தை செய்வதில் என்ன இருக்கப்போகிறது சொல்லுங்கள். இரு அணிகள் மோதும் விளையாட்டில் எந்த அணி வெல்லும் என்று தெரிந்துவிட்டால், விளையாடுபவர்களுக்கும் சரி விளையாட்டை பார்ப்பவர்களுக்கும் சரி ஒரு சுவாரஸ்யமே இருக்காது.

   ஜாதகம் பார்த்து செய்யும் அனைத்து வேலைகளும் நன்மையில் மட்டுமே முடிவதில்லை. எந்த வேலையையும் நேரம் காலம் ஜாதகம் பார்க்காமல் செய்யுங்கள். எல்லாம் நன்மைக்கே என்பதை மறக்க வேண்டாம். எது நடந்தாலும் அதை ஒரு நல்ல அனுபவமாக கருதி வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வோம். இன்னும் மூட நம்பிக்கைகளில் திழைத்திருக்க வேண்டாமே !!

* தினேஷ்மாயா *

மனசே மனசே மனசில் பாரம்



மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே..
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே....
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பறிமாரினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே..
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்


படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் எனக்கு அதிகம் பிடித்த பாடல் இது. இன்றும் பிடிக்கும். இரவில் சில நேரம் தனிமையில் இதை கேட்கும்போது கண்ணிருடன் துயில்கொள்வேன்.

* தினேஷ்மாயா *

யார் கொடுத்த அதிகாரம்?



    சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் தெருவில் இருக்கும் நாய் ஒன்று நான்கு அழகான குட்டிகளை ஈன்றது. அது தன் குட்டிகளை அவ்வளவு பத்திரமாக பாத்துக்கொண்டது. இதில் வருத்தம் என்னவென்றால், நான்கு குட்டிகளையும் அக்கம்பக்கத்தில் இருக்கும் சின்னஞ்சிறு பொடிசுகள் தங்கள் வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டனர். நான்கு குட்டிகளையும் இழந்து தவித்த அந்த நாயை பார்க்கும் போதெல்லாம் மனம் லேசாக வலிக்கும்.

  பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து திருடினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இங்கே யார் நடவடிக்கை எடுப்பார் ??

  தன் குட்டிகளை தான் வைத்துக் கொள்ள முடியவில்லை, தன் கண் முன்னே தன் குழந்தைகளை எடுத்து செல்ல எந்த தாயுள்ளமும் அனுமதிக்காது. அனாதையாக இருக்கும் ஒரு நாய்க்கு ஆதரவு தாருங்கள். ஆனால் இப்படி தாயிடமிருந்து பிரித்து தாயின் அன்பு அதற்கு கிடைக்காமல் செய்துவிடாதீர்கள். நீங்கள் சொல்லலாம், எங்கள் வீட்டில் எங்களுக்கு இணையாக அந்த நாயை வளர்ப்போம், அதற்கு எல்லா வசதிகளையும் செய்துக்கொடுப்போம் என்று. ஆனால் ஒன்று தெரிந்துக்கொள்ளுங்கள், உங்கள் வசதி அந்த தாயின் அன்பைவிடவும் பெரிதல்ல. தாயிடம் இருந்து எந்த குழந்தையையும் பிரிக்காதீர்கள். அந்த தாய்க்கு வேண்டுமானால் வேறு குழந்தை பிறக்கலாம், ஆனால் அந்த குழந்தைக்கு வேறு தாய் கிடைத்தாலும் இந்த தாய்ப்போல இருக்காது.

  அதற்காக விலங்குகளை வீட்டில் வளர்க்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விலங்குகள் வீட்டில் நம்முடன் வாழ விரும்புவதில்லை. நாம்தான் அதை நம்மோடு இருக்கும்படி செய்துவிடுகிறோம். அந்தந்த உயிர்களை அதனதன் போக்கில் விட்டுவிடுங்கள். அதுதான் இயற்கையின் விதியும் கூட. இந்த விதியில் நாம் தலையிடுவது முறையா சொல்லுங்கள் ?
* தினேஷ்மாயா *