பொட்டு வைத்த ஒரு வட்டநிலா

Friday, January 31, 2014



பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா

ஆராத ஆசைகள் தோன்றும் எனை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா 
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினாத்தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா 
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா 

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி

     சென்ற முறை ஊருக்கு செல்லும்போது இப்பாடலை என் செல்பேசியில் கேட்டுக்கொண்டு சென்றேன். இப்பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தமுறை இந்த பாடல் என்னை என்னவோ செய்துவிட்டது. நிச்சயம் இதை என் வலையில் பதிந்தே தீரனும் என்று முடிவு செய்து இங்கே பதிகிறேன்..


* தினேஷ்மாயா *

மீண்டும் என் வலைக்கு..


           வேடன் வைத்த வலையில் சிக்காமல் ஓடும் மான் போல, என் வலையில் சிக்காமல் இந்த மாதம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தேன். இன்றுடன் இம்மாதம் முடிகிறது. புத்தாண்டு பிறந்ததிலிருந்தே ஓட்டம் ஆரம்பம்தான். மூன்றாம் தேதி குடும்பத்தாருடன் காஞ்சிபுரம், மகாபலிபுரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை என்று சுற்றுலா சென்றோம். எல்லாம் முடித்துவிட்டு சென்னை வந்தால், இங்கே படிப்புக்கும் வேலைக்குமே நேரம் சரியாய் இருக்கிறது. புத்தக கண்காட்சி, தி இந்து இலக்கிய விழா, இசைக்கச்சேரி என்று சுற்றிக்கொண்டும் இருந்தேன். அதற்குள் பொங்கல் வந்தாகிவிட்டது. வீட்டுக்கு சென்று குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இந்த பொங்கலை கொண்டாடினேன். மீண்டும் சென்னை வந்து ஓட்டம். அதுவும் மார்ச் மாதம்வரை அலுவலகத்தில் கொஞ்சம் ஓட்டம் அதிகம் இருக்கும். இன்னும் பல கடமைகளும் பொறுப்புகளுக்குமான ஓட்டம்.....

          இந்த ஓட்டங்களுக்கிடையில் என் வலையில் சிக்கிக்கொள்ள எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இன்று என்ன ஆனாலும் சரி என்று மீண்டும் வலைக்கு வந்துவிட்டேன். என் வலையை பிண்ணாவிட்டாலும், இந்த ஒரு மாதத்தில் என் வலையில் பிண்ண என் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் ஒவ்வொன்றையும் என் செல்பேசியில் குறித்துக்கொண்டுதான் வந்தேன். அதிகம் பேசாமல் என் பின்னலை தொடர்கிறேன்..

* தினேஷ்மாயா *

கண் தானம்

Wednesday, January 29, 2014


   சங்கர நேத்ராலயா மற்றும் தி இந்து நாளிதள் இணைந்து நடத்திய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று என் கண்களை தானம் தர எழுதிக்கொடுத்தேன்.

  நேற்று என் மனது நிம்மதியாய் உறங்கியது. தானம் என்பது நம்மிடம் இருக்கும் ஒன்றை பிறர்க்கு கொடுப்பது என்பது அர்த்தம். ஆனால் நான் என் கண்களை தானம் கொடுக்கவில்லை. இயற்கை எனக்கு கொடுத்ததை அந்த இயற்கையின் இன்னொரு குழந்தைக்கு தரவிரும்பி என் கண்களை தர விரும்பினேன். 

  தாங்களும் பிறர்க்கு ஒரு முன்னோடியாய் இருந்து உங்கள் கண்களையும் நீங்கள் இறந்தபின் பிறருக்கு தர ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

* தினேஷ்மாயா *

அழுகை

Saturday, January 25, 2014


காதல் மனதில் இருக்கும்போது

மனதில் வலி வரும்போது

இரவில் தாய் தந்தையர் அருகில் படுத்திருக்கும்போது

போர்வையை மூடிக்கொண்டு -

சத்தம் வராமல் தேம்பி அழுத காலங்கள் உண்டு ..

# அந்த அழுகை இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது #

* தினேஷ்மாயா *

பல வருட ஆசை

Friday, January 24, 2014



     எனக்கு இசையின்மீது அளவு கடந்த காதல் எப்போதும் உண்டு. சிறுவயது முதல் எதாவது கர்நாடக இசைக்கச்சேரியை நேரில் சென்று பார்க்கனும் என்று ஆசை. 

    இன்று எதேச்சையாக செய்தித்தாளில் வயலின் இசைக்கச்சேரி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு அரங்கில் நடக்கிறது என்று படித்தேன். உடனே மாலை அங்கு ஆஜர் ஆகிவிட்டேன்.

    ஒரு மணி நேரம் நடந்தது. திருமதி.மீரா சுந்தர் அவர்கள் வயலின் இசைத்தார், சுமேஷ் மிருதங்கம், கிருஷ்ணா கடம் வாசித்தார். ராகம் தாளம் என எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இசையை ரசிக்க தெரியும். அது போதாதா என்ன ?

   ஒரு மணிநேரமும் இசையின் இனிமையில் மூழ்க வைத்துவிட்டனர். தனிஅவர்த்தனம் - என்று மிருதங்கமும் கடமும் தனியாக வாசித்தனர். மிகவும் அருமையாக இருந்தது.

   பெரும்பாலும் தியாகராஜரின் பாடல்களைத்தான் இசைத்தனர். அவர்கள் இசைக்கும்போது அவர்கள் அவ்வளவு காதலோடு தங்கள் வாத்தியங்களை இசைக்கின்றனர். அந்த காதலும் என் காதுக்கு இனிமை கூட்டியது. அந்த அரங்கில் என் பெயரை பதிவு செய்துவிட்டு இதுப்போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இசை - மனிதனை மனிதனாக வைத்திருக்க உதவும் ஒரு கருவி !!

* தினேஷ்மாயா *

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Friday, January 10, 2014


  நண்பர்களுக்கு என் மனமார்ந்த உழவர் திருநாளாம், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 

   நாளை ஊருக்கு சென்று பொங்கல் திருநாளை குடும்பத்தாரோடு கொண்டாட போகிறேன். அடுத்த வாரம் சந்திப்போம்..

பொங்கலோ பொங்கல் !!

* தினேஷ்மாயா *

இவள் வேற மாதிரி

Thursday, January 09, 2014
























சமீபத்தில் ‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. கதாநாயகி சுரபி நன்றாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்,

இவள் வேற மாதிரி என்று மனசுக்குள் பட்டது. அழகாகவும் லட்சனமாகமும் இருக்கிறார். ஏனோ இவளைப்பற்றி இங்கே பதிய வேண்டும் என்று தோன்றியது..

* தினேஷ்மாயா *

காதல்


காதலியால் வாடுகிறேன்..

காதலால் பாடுகிறேன்..

* தினேஷ்மாயா *

ஊக்குவிப்போம்


யாரையும் தூற்ற வேண்டாம். 

அனைவரையும் ஊக்குவிப்போம்..

அவர் எவ்வளவு மெதுவாக முன்னேறினாலும் சரி..

முன்னேறும் ஒவ்வொருவரையும் ஊக்குவிப்போம்..

* தினேஷ்மாயா *

இது ஆரம்பம் தான்


 அமெரிக்காவில் சில தினங்களாக பனி மக்களை வாட்டி  வதைக்கிறது. வரலாறு காணாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளது. துருவ பகுதிகளில் காணப்படும் அளவிற்கு வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. 
  
  இது வெறும் ஆரம்பம் மட்டுமே. மனிதனின் இரக்கமற்ற இயற்கைக்கு விரோதமான நடவடிக்கைகளால் இயற்கை மனிதனுக்கு திருப்பி செய்யும் கைம்மாறு இது என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். அறிவியலில் எவ்வளவோ சாதித்துவிட்ட மனிதனால் இயற்கையை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை தெரிந்தும் தெரியாமல் இருப்பதுபோல் நடிக்கிறான். 

  இந்த அவலநிலை தொடரத்தான் செய்யும். இயற்கையோடு ஒத்து வாழும் வாழ்க்கையே என்றும் மனித இனத்துக்கும் அத்தனை உயிரினத்துக்கும் நன்மைபயக்கும். இதை மனிதன் உணரும் நேரம் வரும்போது மனித இனத்தில் பெரும்பகுதி அழிந்திருக்கும் !!

* தினேஷ்மாயா *

கற்றுக்கொள்

Monday, January 06, 2014


உன் நிலையை மற்றவருக்கு புரியவைக்க வேண்டாம். தேவைப்படும் இடங்களில் வெறுமனே “இல்லை” என்று சொல்ல கற்றுக்கொள். உன் விளக்கங்கள் பல நேரங்களில் நீ சொல்பவர்களில் காதுகளை சென்று சேரவே சேராது..

* தினேஷ்மாயா *

இது யாருடைய வகுப்பறை..?

Wednesday, January 01, 2014



* தினேஷ்மாயா *

இலக்கற்ற பயணி



* தினேஷ்மாயா *

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்


* தினேஷ்மாயா *

பைத்திய ருசி


* தினேஷ்மாயா *

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு


* தினேஷ்மாயா *

சொல்லித் தீராதது


* தினேஷ்மாயா *

குழந்தைகளற்ற நகரம்


* தினேஷ்மாயா *

பல நேரங்களில் பல மனிதர்கள்


* தினேஷ்மாயா *

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்


* தினேஷ்மாயா *

பின்னாமல்விட்ட கூந்தலில்


* தினேஷ்மாயா *

மண்புழுவின் நான்காவது இதயம்



* தினேஷ்மாயா *

இரண்டு பிக்சல்” குறைவான கடவுள்


* தினேஷ்மாயா *

அறைகள் நிறைய உள்ள வீடு


* தினேஷ்மாயா *

கனவின் உபநடிகன்


* தினேஷ்மாயா *

இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்


* தினேஷ்மாயா *

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்


* தினேஷ்மாயா *

யுக மழை


* தினேஷ்மாயா *

ராஜீவ்காந்தி சாலை


* தினேஷ்மாயா *

மௌன அழுகை


* தினேஷ்மாயா *

ஏன் என்னை கொல்கிறீர்கள்?


* தினேஷ்மாயா *

அடை மழை


* தினேஷ்மாயா *

உதிரிகளின் நீலப்படம்


* தினேஷ்மாயா *

தற்கொலை குறுங்கதைகள்



* தினேஷ்மாயா *

கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்


* தினேஷ்மாயா *

புத்தகம் பேசுகிறது



    இம்மாதம் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. முகநூலில் அதன் பக்கத்தில் திரட்டிய என்னை கவர்ந்த சில புத்தகங்களின் முதல் பக்கத்தை இனிவரும் சில பதிவுகளில் என் வலையில் பதிகிறேன்.

நன்றி : முகநூல்.

* தினேஷ்மாயா *

தேடல்


வாசிப்பு என்பது ஒரு பசி..! ஒரு தேடல்.. !

பகுத்தறிவு பாதையிலே நடக்கவைக்கும்

நல்ல புத்தகங்களை நன்றாக

படியுங்கள் ( வாசியுங்கள் )


நன்றி :  முகநூல்

* தினேஷ்மாயா *

எங்கெங்கும் மகிழ்ச்சி பரவட்டும்


 எங்கெங்கும் மகிழ்ச்சி பரவட்டும். அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும். மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிவைத்துவிட்டு மகிழ்ச்சியோடு இருக்க பழகிக்கொள்ளுங்கள். வாழ்க்கை இனிமையானதாக அமையும்..

* தினேஷ்மாயா *

மூன்று விஷயங்கள்


  கடைசியில், மூன்றே விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்..

அவை -

1. நீங்கள் எவ்வளவு அன்புடன் வாழ்ந்தீர்கள்.

2. உங்கள் வாழ்க்கையை எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தீர்கள்.

3. உங்களுக்கு கிடைக்காதவற்றை எவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்தீர்கள் என்பதுதான்..

- புத்தர் -

* தினேஷ்மாயா *

செல்லம்மா



     இந்த வருடத்தின் முதல் பதிவு இது. என்ன பதியலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்கிற பாடலை பார்த்துக்கொண்டிருந்தேன்.




      தங்க மீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வாழ்ந்திருக்கும், செல்லம்மா கதாப்பாத்திரம் என்னை மிகவும் அழவைத்தது, கவரவும் செய்தது. அவளின் நடிப்பு அத்துனை கச்சிதம். அவள் பேச்சு, அவள் செய்கைகள், அவள் பேச்சின் தோரனை, அதிலிருக்கும் குறும்புத்தனம், அவளின் செல்ல கோபம், அவளின் கெஞ்சல், அவள் கேட்கும் கேள்விகள், அவளின் அழுகை, அவளின் புன்சிரிப்பு, தந்தையிடம் காட்டும் பாசம், அவளின் அப்பாவித்தனம் இப்படி ஒவ்வொன்றும் என்னை அதிகம் ஈர்த்தது.

     நடிகைகளை வர்ணித்து எழுத ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நடிப்பை வர்ணிக்க ஒரு சிலரே. நான் அவளின் நடிப்பை வர்ணிக்க விரும்பினேன். 

   இந்த செல்லம்மா என்றென்றும் என் மனதில் இருப்பாள். அவளின் நடிப்பு என்றும் என்னால் மறக்க முடியாது..

    செல்லம்மா என்பது பாரதியின் துணைவியார் பெயர் என்பதையும் இங்கு நான் பதிந்தேயாக வேண்டும்..

* தினேஷ்மாயா *

01-01-2014



  இந்த வருடத்தின் முதல்நாள், என் அலுவலகத்தில் மிகவும் நன்றாக முடிந்தது. இந்த வருடத்தில் பூக்கள் என்னை வரவேற்றது. மனம் கவரும் பூக்களால் இவ்வருடம் துவங்கியுள்ளது. இனி எல்லாம் சுகமே !!

* தினேஷ்மாயா *