இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Monday, December 30, 2013



நண்பர்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள்.. 
பிறக்கின்ற புது வருடம், அனைவருக்கும் இனிதாக அமையட்டும், வெற்றியையும் மகிழ்ச்சியையும் அள்ளி தரட்டும்..

* தினேஷ்மாயா *

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது !!

Thursday, December 26, 2013


‘உனக்கா’கத்தானே இந்த உயிர் உள்ளது !!

பி.கு: அந்த ‘உனக்கா’க காத்துக்கொண்டிருக்கிறேன் ...

* தினேஷ்மாயா *

எனை சாய்த்தாலே



எனை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி வீழ்வேனோ முழுதாக
இதழ் ஓரத்தில் நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ.........
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேறத்தான் பார்த்தேன்

நடக்கிறவரை நகர்கிற தரை
அதன்மேல் தவிக்கிறேன்
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போல வானம்
அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
தள்ளிப் போக எண்ணும்
கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டி செல்ல கண்டேன்

என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி வீழ்வேனோ முழுதாக

மாலை வந்தால் போதும்
ஒரு 110-ல் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும்
உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கொண்டேன்

எனை சாய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி வீழ்வேனோ முழுதாக
இதழ் ஓரத்தில் நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ.........
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேறத்தான் பார்த்தேன்

நடக்கிறவரை நகர்கிற தரை
அதன்மேல் தவிக்கிறேன்
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்..


படம்: என்றென்றும் புன்னகை

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: ஹரிஹரன்,ஸ்ரேயா கோசல்


* தினேஷ்மாயா *

எது வளர்ச்சி


சராசரியாக  கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காணப்பட்ட ஹரப்பா மொஜஞ்சதரோ நாகரிக மக்கள் தங்கள் இருப்பிடங்களை நன்கு திட்டமிட்டு நகரங்களையும் வீடுகளையும் சீரான இடைவெளிவிட்டு அமைத்திருந்தனர். மனிதனுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத காலம் அது. 


ஆனால், நவநாகரிக மனிதன் வாழும் இந்த காலத்தில் வீடுகளையும் நகரங்களையும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவன் இஷ்டம்போல் கட்டிக்கொள்கிறான். பிற்கால தலைமுறை நம் வாழ்க்கைமுறையை பார்த்து எள்ளி நகையாடப்போகிறது என்பது உண்மை. இப்படி எந்த திட்டமிடுதலும் இன்றி கட்டப்படும் நகரங்களும் வீடுகளும்தான் நாம் அறிவியலில் வளர்ச்சிக்கண்டாலும், மனதளவில் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பது எடுத்துக்காட்டுகிறது.

* தினேஷ்மாயா *

வறுமைக்கோடு




வறுமையைப் பற்றி ஏதும் அறியாதவர்கள், வறுமையில் வாழ்ந்திராதவர்கள் கைகளில் ஒரு எழுதுகோலை கொடுத்து, ஒரு கோடு வரைய சொல்கிறார்கள். அதுதான் இந்த வறுமைக்கோடு. அவர்களைப்பொறுத்தவரை அது வெறும் கோடுதான்.




வறுமை என்னும் நிலை எவ்வளவு கொடுமையானது என்பது அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துக்கொண்டு வறுமையைப்பற்றி பேசவோ, ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு செய்பவன் வறுமைக்கோட்டுக்கு மேலே கீழே என்றோ, அல்லது ஒரு கோடு வரைந்து அந்த கோட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்த இங்கு எவர்க்கும் உரிமை இல்லை.

ஒரு நாள் அந்த வறுமையில் வாடும் மக்களோடு வாழமுடியுமா இந்த ஆட்சியாளர்களால் ?

ஒரு நாள் வேண்டாம், ஒரு மணிநேரம் ?

* தினேஷ்மாயா *

எந்தன் கையில் இல்லை


காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை

சொல்லவந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை !!

- காதலர் தினம் திரைப்பட பாடல் ஒன்றின் வரிகள் -

* தினேஷ்மாயா *

வெண்மதி வெண்மதியே நில்லு



வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,

வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்.

வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்.


அஞ்சு நாள் வரை,
அவள் பொழிந்தது,
ஆசையின் மழை,
அதில் நனைந்தது,
நூறு ஜென்மங்கள்,
நினைவினில் இருக்கும்,
ஆறு போல்,

எந்த நாள் வரும்
உயிர் உருகிய,
கண்களால் சுகம்,
அதை நினைக்கையில்,
ரத்த நாளங்கள்,
ராத்திரி வெடிக்கும்..
ஒரு நிமிஷம் கூட,
என்னை பிரியவில்லை,
விவரம் ஏதும்,
அவள் அறியவில்லை,
என்ன, இருந்து போதும்,
அவள் எனதில்லையே,
மறந்து போ,
என் மனமே…

ஓ ஹோ,

வெண்மதி, வெண்மதியே, நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்,

ஜன்னலின் வழி,
வந்து விழுந்தது,
மின்னலின் ஒளி,
அதில் தெரிந்தது,
அழகு தேவதை,
அதிசய முகமே,
ஆ ஹா ஹா..

தீ பொறி என,
இரு விழிகளும்,
தீக்குச்சி என,
என்னை ஊரசிட,
கோடி பூக்களாய்,
மலர்ந்தது மனமே,
அவள் அழகை பாட,
ஒரு மொழியில்லையே,
அளந்து பார்க்க,
பல விழியில்லையே,

என்ன, இருந்த போதும்,
அவள் எனதில்லையே,
மறந்து போ,
என் மனமே…

உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்,
மேலும் மேலும்,
துன்பம் துன்பம் வேண்டாம்


படம் : மின்னலே

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர் : ரூப்குமார் ரதோர்

* தினேஷ்மாயா *

இரவா பகலா குளிரா வெயிலா




இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி
காதல் இதுதானா ?
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனதும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ளே உன்னை அணைப்பேன்

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதினி

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதினி

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்

பாடலாசிரியர்: பழனி பாரதி

எனக்கும் என்னவளுக்கும் ரொம்ப பிடித்த பாடல்..

* தினேஷ்மாயா *

என்றென்றும் புன்னகை




    நேற்று என்றென்றும் புன்னகை படத்திற்கு சென்றிருந்தேன். படம் பார்த்தேயாக வேண்டும் என்று வலுகட்டாயமாக என் நண்பர்களையும் அழைத்து சென்றேன்.

          படத்தைப்பற்றி நான் விமர்சிக்க மாட்டேன், அது இப்போது தேவையும் இல்லை. படத்தில் என்னை கவர்ந்த விஷயங்களை இங்கே பகிர்துக்கொள்ளப்போகிறேன்.

           படத்தில் கதை பெரிதாக இல்லையென்றாலும், திரைக்கதை கதைக்கு வலு சேர்க்கிறது. நட்பை மிகவும் அழகாக சித்தரித்திருக்கிறார்கள். காதல்மீதும் பெண்கள்மீதும் ஜீவாவுக்கு இருக்கும் வெறுப்பு பெரும்பாலான படங்களில் பார்த்தாச்சு அதனால் அதில் புதுமை எதுவும் தெரியவில்லை. ஆனாலும், ஜீவாவுக்கும் த்ரிஷாவுக்குமான காதலை மிக அழகாக செதுக்கியிருக்கிறார்கள். அப்புறம், நான் இதை சொல்லியே ஆகனும். த்ரிஷா அவ்ளோ அழகு. வழக்கமாக த்ரிஷா என்னை அதிகம் கவர்ந்ததில்லை இதுவரை. ஆனால் இப்படத்தில் த்ரிஷாவை ரொம்ப அழகாக தெரிகிறார், அழகாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முகத்தில் பொலிவும், நடிப்பில் முதிர்வும் தெரிகிறது. 

           பாடல்கள் அனைத்தும் ரசிக்கவைக்கிறது. சந்தானம் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். பொதுவாகவரும் பல நகைச்சுவைக் காட்சிகள் கைத்தட்டல்களை அள்ளி செல்கிறது. பிண்ணனி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் எப்போது முடியும் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு வராமல் பார்த்துக்கொண்டார் இயக்குனர்.

       “பொண்ணுங்க பாதியிலேயே போய்டுவாங்க” - இந்த வசனம் ஏனோ தெரியலை என்னை கொஞ்சம் உள்வரை தாக்கியது. 

          மொத்தத்தில் திரைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நீங்களும் நேரம் கிடைத்தால் பாருங்கள். 

   உணர்வுகளையும் உறவுகளின் அவசியத்தையும் நன்று பதிவு செய்திருக்கிறார்கள்.

   வாழ்த்துக்கள் !!

* தினேஷ்மாயா *

ஒத்தையில உலகம் மறந்து போச்சு

Tuesday, December 24, 2013



ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

அரட்டைகள் அடித்தோமே
குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே
இப்போது பாதியில் பிரிந்தோமே

இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை 
யார் அதை அறிவாரோ

அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனி மேல் நானே தனியாள் ஆனேன்
நட்பு என்ன நடிப்போ

நமக்கென இருந்தோமே 
தினசரி பிறந்தோமே
திசைகளாய் பிரிந்தோமே
கல்யாண காட்டினில் தொலைந்தோமே

பனித்துளி மலரோடு 
பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது
என்றே நீ சொன்னது மறக்காது

நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த

திரைப்படம்என்றென்றும் புன்னகை
பாடியவர்கள்திப்புஅபய்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்கபிலன்


இன்னமும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. படத்தின் விமர்சனம் படித்தேன். நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் படத்தை பார்த்துவிட்டு பதிவு செய்கிறேன்.
இந்த பாடல் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கேட்டேன். மற்ற பாடல்களைவிட இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நட்பின் பிரிவில் இருக்கும் வலியை சொல்கிறது இப்பாடல். காதலின் பிரிவில் இருக்கும் வலியை தான் அதிகம் பாடலாய் கேட்டிருக்கிறோம். அத்தி பூத்தார்போல நட்பின் பிரிவில் இருக்கும் வலியை வெளிப்படுத்தும் விதமாக வரும் பாடல்களில் இந்த பாடலும் சிறப்பான ஒன்று.

* தினேஷ்மாயா *

தூக்கம்

Monday, December 23, 2013


சுகமான உறக்கத்தைவிட

நிம்மதியான உறக்கம்தான் வேண்டும்..

* தினேஷ்மாயா *

பூக்கள்

Thursday, December 19, 2013


    நம் வாழ்வில் பூக்களின் பங்கு பெரிதும் கலந்திருக்கிறது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் பூக்களை நாம் பயன்படுத்துகிறோம்.

      ஒருவரை வாழ்த்த மலர்கொத்து கொடுக்கிறோம். திருமணத்தில் சில நேரங்களில் மலர்கொத்து கொடுத்து வாழ்த்துவோம், திருமண மேடையை அலங்கரிக்க பூக்களை பயன்படுத்துகிறோம், கிறித்துவ திருமணத்தில் மணப்பெண் கையில் மலர்கொத்து கொடுப்பார்கள், காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், தங்கள் அன்பை பரஸ்பரம் பகிர்ந்துக்கொள்ளவும் பூக்கள் கொடுப்பர், கணவன்மார்கள் மனைவிக்கு பூ வாங்கிகொடுத்தாலே அதுவே மனைவிக்கு அதீத மகிழ்ச்சியாய் இருக்கும், இறைவனுக்கு பூக்களால் அலங்காரம் செய்வோம், அந்த பூவை இறைவன் பாதத்தில் இருந்து எடுத்து பெண் பக்தைகளுக்கு பிரசாதமாய் கொடுப்பர், மலர் கண்காட்சி நடத்துகிறோம், பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் நம் கலாச்சாரப்படி தலையில் பூ சூடிக்கொள்வார்கள், திருமணத்தின்போது கழுத்தில் பூக்களால் செய்த மாலையை மாற்றிக்கொள்வார்கள், இசுலாமிய மதத்திலும் பூக்களை மக்களின் சமய நிகழ்ச்சிகளில் காணலாம், புத்த மதத்தில் தாமரை பூ பிறப்பை குறிக்கிறது, இறைவனை வணங்கும்போது எதேச்சையாக பூ கீழே விழுந்தால் அது நல்ல சகுணம் என்றெல்லாம் கருதுவோம், பூக்களை காணும்போது நம் மனதுக்குள் பரவசம் ஏற்படும், கவிஞர்கள் பலர் பூக்களை வர்ணித்து கவிதகள் எழுதுவார்கள், பெண்ணை மலரோடு ஒப்பிடுவார்கள், பூக்கள் முதலிரவிலும் காமத்திலும் அதிக பங்குவகிக்கிறது. இதெல்லாம்விட, மனிதன் இறந்தபின்பு அவனது இறுதி சடங்குகள் அனைத்தும் பூக்கள் இல்லாமல் நடக்காது..

   பூக்கள் நம் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்வில் ஒரு அங்கமாய் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை..

* தினேஷ்மாயா *

நன்றி..



 முகமறியா தோழி ஒருவர் அயல்தேசத்தில் இருந்து இன்று என்னை தொடர்புக்கொண்டு என் வலைப்பக்கத்தை படித்துவிட்டு வாழ்த்து தெரிவித்தார். என் மாயா பற்றி விசாரித்தார். ஆனால் என்ன, அவள் என்னைப்பிரிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டி இருந்தது.

முகமறியா முகவரியரியா அந்த அன்புத்தோழிக்கு என் நன்றிகள் பல. 

* தினேஷ்மாயா *

ஓஷோ

Tuesday, December 17, 2013


கொஞ்சம் முட்டாளாய் இருந்தால்,
வாழ்க்கையை ரசிக்கலாம்..

கொஞ்சம் புத்திசாலியாய் இருந்தால்,
தவறுகளை தவிர்க்கலாம்...

- ஓஷோ

நன்றி: முகநூல் / இணையம்

* தினேஷ்மாயா *

மாறிவிட்டேனா ?

Monday, December 16, 2013


அவளுக்காக என்னை மாற்றிக்கொண்டேன்..

நான் மாறியபிறகு சொன்னாள்...

“ நீ மாறிவிட்டாய்” என்று..

* தினேஷ்மாயா *

தொலைநோக்கு பார்வை

Tuesday, December 10, 2013



   குறுகியகால கொள்கைகளை பூர்த்திசெய்துக்கொள்வதால் நாம் தொலைநோக்கில் இருக்கும் உயர்வை மறந்துவிடுகிறோம். சிற்றின்பம் ஒருபோது உண்மையான இன்பம் பயக்காது..

* தினேஷ்மாயா *

பாகப்பிரிவினை


   பாகப்பிரிவினையால் நாம் சாதித்தது என்ன ?

இருப்பதை ஒன்றாக அனுபவிக்க தெரியாமல், சரிபாதியாய் பிரித்துக்கொண்டு பல விஷயங்களை இழந்துவிட்டோம் என்பதே உண்மை..

* தினேஷ்மாயா *

நண்பர்கள் !!

Monday, December 09, 2013


   நம் நண்பர்கள் எவரும் நம்மை தொலைப்பேசியில் அழைத்து பேசுவதில்லை என்று நாம் நினைக்கும் அதே நேரத்தில், நாமும் அவர்களை அழைத்து பேச முயல்வதில்லை என்பதை மறந்துவிடுகிறோம்..

* தினேஷ்மாயா *

அன்பை வளர்ப்போம்


   நாம் அறிவியலை வளர்த்த அளவிற்கு, அன்பை வளர்க்க பாடுபடவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை..

* தினேஷ்மாயா *

முதல் காதல்

Sunday, December 08, 2013


நன்றி : முகநூல்

* தினேஷ்மாயா *

எனக்கு தெரியும்


 எனக்கென பிறந்தவள் இவ்வுலகின் எங்கோ ஒரிடத்தில் எனக்காக கையில் பூக்களை ஏந்தி காத்திருக்கிறாள் என்று எனக்கு தெரியும்..

* தினேஷ்மாயா *

பொது சொத்து


இவ்வுலகில் எந்த உயிரும் சொந்தம் கொண்டாட முடியாத, அனைத்து உயிருக்கும் ஒரு பொது சொத்து உண்டென்றால், அது காதல்தான்..

* தினேஷ்மாயா *

கருகலைப்பு..



  முட்டையின் விருப்பமின்றி நடந்தேறுகிறது பல கருகலைப்புகள்.

* தினேஷ்மாயா *

தீண்டல்


    நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு, கல்லூரிக்கு திரும்பும்போது அந்த ஆட்டோவில் உன்னருகில் அமர்ந்தேன் நான். அன்றுதான் உணர்ந்தேன் தீண்டலின் புரிதல்களை.. 

 சிறு வருத்தம். அந்தநாள் தான் நான் உன்னை கடைசியாக பார்த்த நாள் !!

* தினேஷ்மாயா *

செல்லமான பேசி


மற்றவர்களுடன் பேசுகையில்

செல் பேசி..

உன்னுடன் பேசுகையில்

செல்லமான பேசி..

* தினேஷ்மாயா *

எப்போது மழை வரும் ?


எப்போது மழை வரும் ? - என்று

காத்திருக்கும் காய்ந்த நிலம் போல

நீ எப்போது வெளியே வருவாய் என்று

உன் வீட்டு வாசலையே

பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

தஞ்சை


தஞ்சை -

தலையாட்டி பொம்மைக்கு மட்டும் பெயர் போனதல்ல...

நம் நினைவுகளுக்கும் தான்..

* தினேஷ்மாயா *

யாருமில்லா மெரினா


மேகமில்லா

அலைகளில்லா

ஆட்களில்லா

முக்கியமாக காதலர்களில்லா

ஆச்சர்யமூட்டும் மெரினா !!

* தினேஷ்மாயா *

நினைவிருக்கா


உனக்கு நினைவிருக்கா ?

நாம் தனிமையில் நடந்து சென்ற

அந்த சாலை..

இன்றும் தனிமையில் நடமாடும்

காதலர்களுக்கு பாலமாய் இருக்கிறது..

* தினேஷ்மாயா *

ஐயோ பாவம்..


ஐயோ பாவம் அந்த தேநீர்..

உன் இதழ் பட்டு -

தேனாய் மாறிவிட்டதே !!

* தினேஷ்மாயா *

யார் கொஞ்சுவார்



 குழந்தையை கொஞ்சும்போது

குழந்தையாகவே மாறிவிடும்

உன்னை யாரடி கொஞ்சுவார் ?

* தினேஷ்மாயா *

தேவதை தெரு


கடைத்தெரு -

நீ நடந்து செல்கையில்

தேவதை தெரு..

* தினேஷ்மாயா *

தள்ளுவண்டி



  காதலர்களுக்கு யார் இடம் கொடுக்காவிட்டாலும், கடற்கரையில் தள்ளுவண்டி காதலர்களுக்கு தனிமையில் பேச அடைக்கலம் கொடுக்கிறது..

* தினேஷ்மாயா *

ராட்டினம்


அந்த கடற்கரையில் -

குழந்தைகள் ராட்டினத்தில் சுற்றுகின்றனர்..

நானோ -

ராட்டினமாய் உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன்..

* தினேஷ்மாயா *

சிறகடிக்கின்றன..


என் நினைவுகள் அனைத்தும்

உன்னை சுற்றியே வட்டமடிக்கின்றன..

* தினேஷ்மாயா *

கும்பகோணம் டிகிரி காபி


* தினேஷ்மாயா *

கோயில் வாசற்படி


* தினேஷ்மாயா *

கொஞ்சம் பக்கம் வாயேன்


இரவில் வெளிச்சமின்றி

குழந்தைகள் விளக்கேற்றி

படித்துக்கொண்டிருக்கிறார்கள்..

நீ கொஞ்சம் அவர்கள் அருகில் வாயேன் !!

* தினேஷ்மாயா *

குளிர் காய்கிறேன்



அந்த மலைப்பிரதேசத்தில்..

அனைவரும் நெருப்பு பற்றவைத்து

குளிர் காய்ந்தனர்..

நானோ -

உன்னை மட்டுமே

தூரத்திலிருந்து பார்த்து

குளிர் காய்ந்தேன்..

* தினேஷ்மாயா *


நீ மீட்டும் போது



நீ மீட்டும்போதுதான்

இசை புதிதாய் பிறக்கிறது !

* தினேஷ்மாயா *

மழைப்பயணம்


* தினேஷ்மாயா *

சென்னை புறநகர் ரயில்


* தினேஷ்மாயா *

ஆண்-பெண் நட்பு


ஆண்-பெண் நட்பு

தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.

முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை,
என் தோழியை/நண்பனை
விட வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்...!
வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண்-பெண் நட்பு

நன்றி : முகநூல்

* தினேஷ்மாயா *

என் நண்பன் சொன்னது



காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...
காதலுக்காக காத்திருங்க
தப்பு இல்லை...
கையை அறுத்துக்குங்க அதுவும்
தப்பு இல்லை....
ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட
தப்பில்லை....

ஆனா
அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க
தகுதியானவங்களா இருக்கணும்...!

தகுதி இல்லாத ஒருத்தங்களுக்கா க நீங்க
உங்களை வருத்திக்கிறதும்
காத்திருக்கிறதும் முட்டாள்தனம்..

அந்த முட்டாள்தனத்த ஒரு போதும்
பண்ணாதீங்க..
.
ஒருத்தருகொருத்தர்
அனுசரிச்சு போகலன்னா அந்த
காதலே அர்த்தமற்றதாகி விடும்..
அது ஒரு தலை காதலா கூட மாறிடும்.

பரஸ்பரம் ரெண்டுபேருக்கும்
பிடிச்சிருந்தா தான் காதல்...
ஒருத்தங்களுக்கு
பிடிச்சிருந்தா அது வெறும் நேசம்
நேசத்தை காதல்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்க.

நேசத்தை காதல்னு நினைச்சு கற்பனை வானில்
சிறகடிச்சுப் பறக்காம
நடைமுறைக்கு சாத்தியமானதா
எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.

உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்களை
நீங்கள் வருத்திவாழுறத விட
உங்களை பிடிச்சவங்களுக்காக
உங்க தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க
அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...

- என் நண்பன் சொன்னது -

* தினேஷ்மாயா *

கண்கள் வலித்தாலும்



கண்கள் வலித்தாலும்

உன்னையே பார்க்க விரும்புகிறது

இதயம் வலித்தாலும்

உனக்காகவே துடிக்க விரும்புகிறது

* தினேஷ்மாயா *

கற்பூர பொம்மை ஒன்று


கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல்
நீ பாடம்மா நீ பாட..

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம்வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் என்றும் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

தாயன்பிற்கே ஈடேதம்மா 
ஆகாயம் அட அது போதாது 
தாய் போல யார் வந்தாலுமே 
உன் தாயைப்போலே அது ஆகாது 
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன்குழல்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் 
நீ பாடம்மா நீ பாடம்மா 

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

படம் : கேளடி கண்மனி
இசை : இளையராஜா
வரிகள் : மு.மேத்தா
பாடியவர் : சுசிலா

* தினேஷ்மாயா *

காதல் ரோஜாவே


காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மயில்லை ஓய்ந்து போ!
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ!
பாவையில்லை பாவை தேவையென்ன தேவை?
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே  எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

திரைப்படம் : ரோஜா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : SPB

* தினேஷ்மாயா *

என்மேல் விழுந்த மழைத்துளியே




என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல்
உனக்குள் தானே நானிருந்தேன்

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணைத் திறந்தால் நிரிருக்கும்
என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசையிருக்கும்
என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் 
என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என்மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ?
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ?

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல்
உனக்குள் தானே நானிருந்தேன்

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

திரைப்படம் : மே மாதம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து


* தினேஷ்மாயா *