ஆடி கிருத்திகை

Wednesday, July 31, 2013









தமிழ் கடவுள் முருகனுக்கு எல்லா மாதமும் விசேஷம்தான். ஆடி மாசம் கொஞ்சம் அதிகம் சிறப்பு. இன்று ஆடி கிருத்திகை. வெற்றிகரமாக எட்டாவது ஆண்டாக இந்த ஆடி கிருத்திகைக்கும் முருகனின் அறுபடைவீடான திருத்தணிக்கு சென்று முருகனை வழிப்பட்டுவிட்டு அரோகரா சொல்லிவிட்டு வந்தேன்.. 

திருத்தணி முருகனுக்கு அரோகரா ......

* தினேஷ்மாயா *

நீ !!

Monday, July 22, 2013


அதிகாலை எழுந்திருக்க பலருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்..

ஆனால்,

எனக்கு நீ !!

* தினேஷ்மாயா *

என்னுடைய சொந்த தேசம்


எந்த தேசம் போனபோதும்
என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே !!

* தினேஷ்மாயா *

நீதானே என் பொன்வசந்தம் !!


நீதானே என் பொன்வசந்தம் !!

* தினேஷ்மாயா *

காத்திருக்கிறேன்..


அவளுக்காக காத்திருக்கிறேன் !!


* தினேஷ்மாயா *

இசை = வாழ்க்கை

Sunday, July 21, 2013


* தினேஷ்மாயா *

இசையின் பரிமாணம்




























நான், இசையை மட்டுமல்ல...

இசையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் ரசிக்கிறேன் ...


* தினேஷ்மாயா *

என் நிலை..


emotionally : i'm in pain

mentally: i'm stressed

physically: i SMILE !!

* தினேஷ்மாயா *

தமிழ் எண்கள்

Friday, July 19, 2013



   இந்த 24 ஆண்டுகளில் சென்றமாதம்தான் தமிழ் எண்களை எழுத கற்றுக்கொண்டேன். இதுநாள்வரையில் மற்றவர்கள் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்பதைவிட நான் ஏன் தமிழ் எண்களை கற்க ஆர்வம் காட்டவில்லை என்கிற கோபம்தான் எனக்கே என்மீது வருகிறது. ஆனால் இனி நான் மார்தட்டிக்கொள்வேன். எனக்கும் தமிழ் எண்கள் தெரியும். எங்கு கேட்டாலும் எப்போது கேட்டாலும், ஏன், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தமிழ் எண்களை எனக்கு எழுதிக்காட்டத் தெரியும்...

- தமிழன் என்கிற முழு உணர்வுடன் - 

* தினேஷ்மாயா *

மேக ஊர்வலம்


        ஒவ்வொரு முறையும் மேகங்களை பார்க்கும்போது, எனக்கு மேகங்களில் எதாவது ஒரு உருவம் இருப்பதுப் போன்ற ஒரு உள்ளுணர்வு தோன்றும். மேகங்களை உற்று பார்த்தால் ஒரு உருவம் அல்லது தோற்றம் தெரியும், மேலோட்டமாக பார்த்தால் ஒரு தோற்றம் தெரியும், ஒரு நொடியில் பார்த்து திரும்பினால் இன்னொரு தோற்றம் தெரியும். இப்படி மேகங்கள் வானில் ஊர்வலம் செல்லும்போது பல வித்தைகளை காட்டிவிட்டு செல்கிறது. நம்மில் எத்தனைப்பேருக்கு இந்த அழகை ரசிக்க தெரிந்திருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அழகு என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம். என் பார்வைக்கு இணையத்தில் நான் தேடி கிடைத்த சில மேகத்தோற்றங்களை இங்கே பதிவு செய்கிறேன். வசதி வந்ததும் நானே ஒரு கேமரா வாங்கி என் கண்ணில் படும் இயற்கை அழகு அத்தனையையும் பதிவு செய்கிறேன். இப்போதைக்கு உங்கள் பார்வைக்கு இதோ இந்த மேக ஊர்வலம் !!




& காதல் சின்னம் &


& நாய் மற்றும் குரங்கின் முகம் &




& எலி &



& யானை குட்டி &



& கிரீடம் &








& மனிதனின் கை &


* தினேஷ்மாயா *

செய்வதெல்லாம் காதல்

Wednesday, July 17, 2013


செய்வதெல்லாம் காதல்...

காதலைத் தவிர வேறொன்றுமில்லை !!!

* தினேஷ்மாயா *

கடமை


நடக்கத் தெரியாத வயதில்,

நமக்கு நடைப்பழகி

நமக்கு துணையாய் இருந்த பெற்றோரை...




அவர்கள் நடக்க முடியாத வயதில்,

ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு

உறுதுணையாய் இருக்க வேண்டியது

நம் ஒவ்வொருவரின் கடமை...

* தினேஷ்மாயா *

ஏளனம்


உச்சியில் இருப்பவனுக்கு,

கீழே இருப்பவர்கள் அனைவரும்

ஏளனமாய்த்தான் தெரிவார்கள்...

நிதர்சனமான உண்மை !!

( சில விதிவிலக்குகளும் உண்டு )

* தினேஷ்மாயா *

கனவில் வாழாதே


கனவுகளோடு வாழலாம்..

ஆனால். கனவில் வாழக்கூடாது..

* தினேஷ்மாயா *

அன்பின் வெளிப்பாடு


* தினேஷ்மாயா *

உண்மையான வலி ..

Monday, July 15, 2013


மனசு வலிக்குது !!

ஆனால், அந்த வலியைவிட அதிகமான வலி என்னவென்றால்,

மனதில் இருக்கும் வலியை எவரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாமல் தவிப்பதுதான் ..

* தினேஷ்மாயா *

திருப்பி அடி !!


* தினேஷ்மாயா *

உண்மையான சந்தோஷம்

     

       ஆயிரம் ரூபாய் கொடுத்து உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள் என்று சொல்வதைவிட, நூறு ரூபாய்க்கு நமக்கு பிடித்த எதையாச்சும் வாங்கிக்கொடுத்தாலே போதும், அதுதான் நம்மை உண்மையாக நேசிப்பவர்க்கு உண்மையான சந்தோஷமாக இருக்கும்..

* தினேஷ்மாயா *

கண்ணீர் பரிசு


பல நாட்களுக்கு பிறகு,

நேற்றிரவு -

என் தலையனைக்கு

கண்ணீரை பரிசாக கொடுத்தேன்...

* தினேஷ்மாயா *

ஜாதிகள் இருக்குதடி பாப்பா


“ ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்றான் பாரதி..

ஆனால், நான் சொல்கிறேன்

“இன்றளவும், ஜாதிகள் இருக்குதடி பாப்பா”

* தினேஷ்மாயா *

அன்பான குடும்பம்

Monday, July 08, 2013


இறைவன் அருளால், இதுப்போன்ற ஒரு அன்பான, அழகான குடும்பம் போதும் எனக்கு..

* தினேஷ்மாயா *

நடப்பது நடந்தே தீரும்


நேரத்தையும் காலத்தையும் எவராலும் ஏமாற்ற முடியாது. நீங்கள் என்ன நினைத்தாலும் இழந்துவிட்ட நேரத்தை திரும்பவும் கொண்டுவர முடியாது, வருங்காலத்தையும் மாற்ற முடியாது. நடப்பது நடந்தே தீரும். நம் ஒரே வேலை என்னத்தெரியுமா ?

இந்த உலகத்தில் நம் வாழ்க்கையை நமக்கும் பிறர்க்கும் உபயோகமாய் வாழ வேண்டும். நடப்பது அனைத்தும் நல்லதாய் நடக்கும்..

* தினேஷ்மாயா *

தேவைக்கேற்ப..


நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், இந்த உலக தேவைக்கேற்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நம் முகங்களை மாற்றிக்கொண்டுத்தான் ஆகவேண்டும்...

* தினேஷ்மாயா *

கடல் போர்வை


மேகத்தை போர்வையாய் விரித்தது அந்த காலம்

நாங்கள், கடல் அலையையே போர்வையாய் விரிப்போம் என்கிறார்கள் இவர்கள்..

* தினேஷ்மாயா *

வாழ்க்கை ஒரு குழப்பமான வட்டம்


வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை,

வாழ்க்கை ஒரு குழப்பமான வட்டம்..

அதேசமயம், 

திறமையானவர்கள்  அந்த

குழப்பமான வட்டத்தில் இருந்து

மீண்டு வருவார்கள்..

* தினேஷ்மாயா *

கவிதை வரவில்லை


உன்னை பார்க்கும்போது

கவிதை வரவில்லை..

காதல் மட்டுமே வருகிறது !!

* தினேஷ்மாயா *

மழை பொய்த்துவிட்டதா?


    இயற்கை வளங்களை அழித்து நாம் தான். நம் தேவைக்காக இயற்கைக்கு எதிராக நடந்துவருகிறோம். வான் சிறப்பு என்பதை கடவுள் வாழ்த்துக்கு அடுத்து இரண்டாவது அதிகாரமாய் வைத்திருக்கிறார் வள்ளுவர். அப்படியானால் வானின் சிறப்பும் மழையின் சிறப்பும் எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்.

   அனைத்து தவறுகளையும் இயற்கைக்கு எதிராக செய்துவிட்டு, மழையை குறைக்கூறினால் எப்படி.

   மழை என்றும் பெய்துவிட்டுத்தான் போகும்..
   ஒருநாளும் மழை பொய்த்துப்போகாது மானிடா !!

* தினேஷ்மாயா *

உழவு


  இருக்கும் விளை நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் என்னும் பெயரில் வீடு கட்ட பயன்படுத்திக்கொண்டா பின் நாம் எந்த நிலத்தில் உழுது எதை உண்போம். உணவு, உடை, அப்புறம்தான் உறைவிடம். உறைவிடத்திற்காக உணவை இழப்பதா ?

* தினேஷ்மாயா *

இயற்கை மனம்


     பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உண்டு என்பார்கள். இது சிவனின் திருவிளையாடல் கதையில் ஒன்று. அதைப்பற்றி பேசி நக்கீரனுக்கு ஏற்பட்ட விளைவுகள் தனிக்கதை. ஆனால் நான் அதைப்பற்றி பேசப்போவதில்லை. 
     சில நாட்களுக்கு முன்னர் வாடிகா தேங்காய் எண்ணெய் வாங்கினேன். இதுவரை உபயோகித்த மற்ற எண்ணெயை விடவும் இதில் மனம் கொஞ்சம் அதிகமாகவே அதுவும் மனதை கவரும்விதமாகவும் இருந்தது. இதை நுகர்ந்தவுடன் என் மனதில் முதலில் தோன்றிய எண்ணம், இதுப்போன்ற பொருட்களால்தான் பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மனம் இருக்குமோ என்று நக்கீரன் சொன்ன கூற்று நினைவுக்கு வந்தது. சரி மனதில் பட்டத்தை இங்கே பதியலாமே என்று இந்த பக்கம் வந்தேன்..

* தினேஷ்மாயா *

கண்ணீர் சிந்தாதே

Saturday, July 06, 2013


யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே

உன்னை உண்மையாக விரும்புபவர்கள்

உன்னை கண்ணீர் சிந்தவிட மாட்டார்கள் !!

* தினேஷ்மாயா *

உன்னோடு நானிருந்த


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *