ஔவை-யார்?

Sunday, May 26, 2013



* தினேஷ்மாயா *

கண்ணழகி


* தினேஷ்மாயா *

பாசம்



    சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படங்கள் என்னை கொஞ்சம் அதிகம் பாதித்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படமும் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தேன்.

  கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் ஆரம்பம் முதல் நகைச்சுவையாக ரசிக்கும்படி இருந்தது. படம் முடியும் தருவாயில் தந்தையின் அன்பை எடுத்துரைக்கும் ஓர் பாடல் வந்து என் கண்களை குளமாக்கியது. இன்னமும் அந்த பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

  தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தை பார்க்கும்போதும் இதே உணர்வுதான். படம் ஆரம்பத்தில் வரும் பாடல்தான் கடைசியிலும் வந்தது. ஆனால், கடைசியில் அந்த பாடலை கேட்கும்போதும் மேலே சொன்ன அதே நிலைதான் ஏற்பட்டது. தாயின் அன்பை அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.


எத்தனையோ தமிழ் படங்கள் பார்த்திருக்கிறேன், இந்த இரண்டு படங்கள் காட்டும் தந்தையின் அன்பையும், தாயின் பாசத்தையும் மற்ற படங்களில் என்னால் உணரமுடியவில்லை..

* தினேஷ்மாயா *

உழைப்பு

Saturday, May 25, 2013


வியர்வையால்

இதுவரை

யாரும்

மூழ்கடிக்கப்படவில்லை !

- லோ. ஹாய்லர்



* தினேஷ்மாயா *

சிறந்த நண்பன்


புத்தகங்களும், நண்பர்களும்

குறைவாக இருந்தாலும்

சிறந்ததாக இருக்க வேண்டும்..

நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

வெற்றிக்கு அருகில்


* தினேஷ்மாயா *

சீர்திருத்தம்


* தினேஷ்மாயா *

அடிமையில்லை



* தினேஷ்மாயா *

நம்பிக்கை போதும்


* தினேஷ்மாயா *

அவமானம்


* தினேஷ்மாயா *

கைரேகை ?


* தினேஷ்மாயா *

அன்பு - பிரபஞ்சத்தின் ஒரே பொதுமொழி..

Tuesday, May 21, 2013



அன்பு - பிரபஞ்சத்தின் ஒரே பொதுமொழி..


* தினேஷ்மாயா *

விவசாயி

Monday, May 20, 2013


விவசாயியும் விவசாயமும் இல்லையென்றால், இந்த உலகம் என்றைக்கோ அழிந்துப்போயிருக்கும்...

* தினேஷ்மாயா *

பாதுகாப்பானதா?


நாம் உட்கொள்ளும் உணவு தானியங்களுக்கு பயன்படுத்தும் ரசாயன உரங்களை சுவாசிப்பதும் ஆபத்தென்றால், அந்த உணவை நாம் உட்கொள்வது எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும் ?

இதுப்போன்ற பொருட்களை கண்டறிவது கடினம்தான். அரசாங்கமும் விவசாய மக்களுமே இதற்கு ஓர் நல்ல தீர்வை கொண்டுவர முடியும்..

* தினேஷ்மாயா *

வழி


எல்லா பிரச்சனைகளுக்கும் வெளியேவர ஒரு வழி நிச்சயம் இருக்கும்..

* தினேஷ்மாயா *

இசை



* தினேஷ்மாயா *

என் வாழ்க்கை

Sunday, May 19, 2013


இது என் வாழ்க்கை ..

என் விதிகளின்படி

வாழ்கிறேன் ..

வெற்றியும் தோல்வியும் என்னையே சாரும் ..

அறிவுரை என்கிற பெயரில்

எவரும் பக்கத்தில் வந்துவிடாதீர்கள் ..

* தினேஷ்மாயா *

ஆரம்பம்


வெற்றி வேண்டுமானால், முதலில் நமது முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்..

* தினேஷ்மாயா *

கண்ணதாசன் பொன்மொழி


* தினேஷ்மாயா *

பொறுமை


* தினேஷ்மாயா *

கடந்த காலம்


* தினேஷ்மாயா *

வெளியேறு

நீ தடைகள் என்று  நினைக்கும் எதையும் தடைகளாக கருதாதே. அது நிச்சயம் பெரிய தடைகளாக இருக்காது. அதை உடைத்தெரிந்து வெளியேறு.. ஜெயிக்கலாம்..

* தினேஷ்மாயா *

நானிருப்பேன்


* தினேஷ்மாயா *

வராதே


* தினேஷ்மாயா *

யார் கொடுத்தது ?




போலீசாருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ?

 “உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை வழக்கில் பிடிபட்டவர், போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தை சேர்ந்தவர் பல்பீர். கடந்த மாதம் நடந்த ஒரு கொலை தொடர்பாக பல்பீரையும் பேனி கான் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவகார் போலீசார் பிடித்து சென்றனர். குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதற்காக, போலீசாரால் பல்பீர் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சூடான தட்டில் அவரை உட்கார வைத்துள்ளனர். 

அடித்து உதைத்ததோடு பெட்ரோல், ஆசிட்டை ஊசி மூலம் உடலில் ஏற்றி டார்ச்சர் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரவதை தாங்காமல் மயங்கி விழுந்த பல்பீர், இடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, போலீசாரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் வாக்குமூலமாக கொடுத்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பல்பீர் இறந்தார். பிரேத பரிசோதனையில் பல்பீர் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக அவகார் போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சைலேந்திர சிங்  உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.”

- இதை ஒரு மனித உரிமை மீறல் பிரச்சனையாக பார்க்க வேண்டும். உயிரை கொல்லும் அதிகாரத்தை போலீசாரின் கைகளில் இந்த அரசாங்கமே கொடுத்திருக்கிறது. இது தீயவர்களை தண்டிக்கும் ஒரு கருவி என்று நீங்கள் கருதினால், அது நல்லவர்களையும் பதம்பார்க்கிறதே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தங்களை கேட்க யாருமில்லை என்கிற தைரியத்தில்தான் போலீசார் தங்கள் இஷ்டம்போல நடந்துக்கொள்கின்றனர். இந்த நிலையை மாற்ற நிச்சயம் ஒரு புரட்சி ஏற்பட்டால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன்.

* தினேஷ்மாயா *

தீர்ப்பு நாள்

Saturday, May 18, 2013


* தினேஷ்மாயா *

என்ன சொல்ல வற




ஒரு மணிநேர Advise-கு அப்புறம் என் மனசு கேக்குற ஒரே கேள்வி.
“நீ இப்ப என்ன சொல்ல வற”

* தினேஷ்மாயா *

மாத்தியோசி




 “ மாத்தியோசி” - இது எல்லா நேரங்களிலும் ஒத்து வராது !! ”

# எதையாச்சும் மாத்தியோசிக்கலாம்னு யோசிச்சப்ப உதிர்ந்தது இது...

* தினேஷ்மாயா *

SELFISH



ஏன் இப்படி Selfish-ஆ இருக்கனு கேட்குறாங்க. அதுக்காக எனக்கும் சேர்த்து உன்னை சாப்பிட சொல்லவா முடியும் !? 
என் வேலைகளையாச்சும் எனக்காக என்னை செய்ய விடுங்களேன்..

* தினேஷ்மாயா *

வேத வாக்கு


வேதங்களை ஒரு சில இனத்தவர்தான் படிக்க வேண்டும் என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்ன ?

* தினேஷ்மாயா *

சமஸ்கிருதம்



வெளிநாட்ல இருந்து வந்த இயேசுவே தமிழ்ல ஜபம் பண்ணா ஏத்துக்குறாரு, இந்த உள்ளுர் லோக்கல் கடவுளுக்கு சமஸ்கிருதம் வேணுமாம்

தினேஷ்மாயா *

ஆசை நூறு வகை




புத்தர்: எதற்கும் ஆசைப்படாதே.
MY MIND VOICE : அப்ப என்ன DASH-ku வாழனும் ??

* தினேஷ்மாயா *

சிவபானம்


இதுதான் சிவபானம் என்பதோ ?

* தினேஷ்மாயா *

எங்கயா இருந்தீங்க



எல்லோரும் எங்கயா இருந்தீங்க இவ்ளோ நாளா ?
தேவைப்படும்போது உதவி செய்ய வராம, இப்போ மட்டும் ஓசில அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க!!!

* தினேஷ்மாயா **

உன்னாலும் முடியும்





எப்படி உன்னால மட்டும் இது முடியுதுஇப்படி பலர் என்னிடம் கேட்டதுண்டு..
இப்படி கேட்பதை நிறுத்திவிட்டு நீயும் முயற்சி செய்தால் - அது உன்னாலும் முடியும்...
* தினேஷ்மாயா *

ஒரு கேமரா

Photo: கைல ஒரு கேமரா இருந்தா போதுமே. நம்ம பயலுக எல்லாரும் மயக்கம் என்ன தனுஷா மாறிடுறாங்க..

  கைல ஒரு கேமரா இருந்தா போதுமே. நம்ம பயலுக எல்லாரும்
“மயக்கம் என்ன”  தனுஷா மாறிடுறாங்க..

* தினேஷ்மாயா *

ரெண்டு ஏக்கர்




   ஊர்ல ரெண்டு ஏக்கர் இடம் வாங்கி இருக்கேன் . அவள் நினைவுகளை மொத்தமாக குழி தோண்டி புதைத்திட..

* தினேஷ்மாயா *

எல்லாமே பழசு




 இப்ப வரும் படங்கள் தான் புதுசா இருக்கு. கதை எல்லாம் பழசாவேதான் இருக்கு. ( சில படங்கள் தவிர )

* தினேஷ்மாயா *

பழைய பஞ்சாங்கம்


காலப்போக்கில் எல்லாம் மாறிவருகிறது. நாமும் அதற்கேற்ப மாறித்தான் ஆகனும். இல்லைனா, நம்மளையும்பழைய பஞ்சாங்கம்னு முத்திரை 
குத்திடுவாங்க இன்றைய பொடிசுங்க..

* தினேஷ்மாயா *


அருமை


* தினேஷ்மாயா *

அக்கா


அக்கா இருக்கும்

அனைவர்க்கும்,

இரண்டு தாய்..

- படித்ததில் பிடித்தது

* தினேஷ்மாயா *

சொல்லி இருக்கலாம்ல...



  
     உன் காதலை என்னிடம் சொன்னாய். உன் அன்பு எவ்வளவு புனிதமானது எவ்வளவு ஆழமானது என்று எனக்கு புரியவைத்தாய். என்னை உன் குழந்தைப்போல் பார்த்துக்கொண்டாய். எல்லாவற்றிலும் என்கூட இருந்தாய். நான் இதுநாள் வரை அன்னையின் மடியில்கூட படுத்து அழுததில்லை. என் சோகத்திலும் கூட உன் மடியில்தான் அதிகம் படுத்து அழுததுண்டு. எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டோம். தினமும் பேசுவோம். அன்று நடந்த அனைத்தையும் என்னிடம் பகிர்ந்துக்கொள்வாய். வீட்டு பிரச்சனை, வேலை செய்யும் இடத்தில் நடந்தவை, உன் சந்தோஷம், உன் வலி, உன் துக்கம், உன் அனைத்தையும் என்னிடம் சொல்லி பகிர்ந்துக்கொண்டாய்.
  
    நம் வாழ்க்கைக்காகவும் சமூகத்திற்காகவும் நான் ஒரு பெரிய பதவியில் இருந்து அனைவர்க்கும் உதவி செய்யவேண்டும் என்று சொன்னாய். நானும் படிக்க ஆரம்பித்தேன். நீ தந்த ஊக்கம்தான் எங்கோ இருந்த என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது. நான் என்று படிக்க ஆரம்பித்தேனோ அன்று முதலே உன் கஷ்டங்களை நீ என்னிடம் சொல்வதை குறைத்துக்கொண்டாய். நீ என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து செல்வதை உணர்ந்த நானும் உன்னைத்தேடி வந்தேன். எனக்கு அறிவுரை சொல்லி என்னை படிப்பில் கவனம் செலுத்தவைத்தாய். நீ சொன்னபடி, உனக்காகவும் சமூகத்திற்காகவும் என்னை முழுவதுமாய் படிப்பில் ஈடுபடுத்திக்கொண்டேன். எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருந்தது. நீ அதிகம் உயிராய் நேசித்த உன் தந்தை இறைவனடி சேர்ந்ததையும்கூட எனக்குத்தான் முதலில் சொல்லி அழுதாய். நானும் நேரில் வந்து உனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அதற்குப்பின் உன் வீட்டில் ஏற்பட்ட எந்தவொரு பிரச்சனையையும் என் கவனத்திற்கு நீ கொண்டுவரவே இல்லை. எத்தனையோ விஷயங்கள் என்னிடம் சொல்லியிருக்கிறாய் நீ. உன் வாழ்க்கை சம்பந்தமான பிரச்சனையை என்னிடம் சொல்லவே இல்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக என்னிடம் பேசாமலே இருந்தாய். மனம் கேட்காமல் தங்கையிடம் உன்னை சென்று பார்க்க சொன்னேன். நீ என்னைவிட்டு பிரிந்து சென்ற விஷயத்தை அவள் சொல்லித்தான் நான் தெரிந்துக்கொண்டேன். என் நலனுக்காக உன் வாழ்க்கையை நீ தியாகம் செய்ய துணிந்திருக்கிறாய் ஆனால் அதில் என் காதலும் அடங்கி இருக்கிறது என்பதை மறந்துவிட்டாயா. நீ எந்தமுடிவையும் எடுக்கும் முன்பு என்னிடம் யோசனை கேட்பாய். இந்த விஷயத்தில் என் நன்மைக்காக தியாகம் செய்கிறேன் என்று என்னை பிணமாக்கிவிட்டு நீ சென்றுவிட்டாய். எனக்கு தனிமை பிடிக்கும் என்று உனக்கு தெரியும். அதற்காக என்னை இப்படி அனாதையாகவே விட்டுவிட்டு செல்வாய் !!!???

  இன்றும் என் மனம் கேட்பது ஒரேயொரு விஷயம் தான். நீ முடிவெடுக்கும் முன், உன் பிரச்சனையை என்னிடம் ஒருமுறையாச்சும் மனம்விட்டு “சொல்லியிருக்கலாம்ல!?”

- கண்ணீருடன்
* உன் தினேஷ் *

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்


தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன்முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன்முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே

படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா
பாடியவர்: விஜய் ஏசுதாஸ்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்


இந்த பாடலை திரையரங்கில் பார்க்கும்போதும், இங்கே பதியும் போதும் கண்கள் கலங்கின. வேறெதுவும் என்னால் சொல்ல முடியவில்லை.......

* தினேஷ்மாயா *

கீதாச்சாரம்


எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவருடைதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே வாழ்வின்  நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

- பகவத்கீதை


வெகுநாட்களாக இதை என் வலையில் பதியவேண்டி இருந்தேன் இன்றுதான் நேரம் கிடைத்தது. வாழ்க்கையை புரிந்துக்கொள்ள இந்த வரிகள் போதும்.

* தினேஷ்மாயா *

பூவே செம்பூவே

Friday, May 17, 2013



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே..

நிழல்போல நானும்  
நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே..

படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடியவர்: கே,ஜே,யேசுதாஸ்
பாடல் வரிகள் : கவிஞர் வாலி

* தினேஷ்மாயா *

தண்ணீர் தண்ணீர்

Thursday, May 16, 2013


    சென்னையில் கடந்த சில நாட்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் பெரும்பாலான மக்கள், பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரும் சரி, ஏழை மக்களும் சரி 25 முதல் 30 ரூபாய் கொடுத்து இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி உபயோகித்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதில்லை. ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு சுகாதாரமானது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது ஆனாலும் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சென்னையில் ஏறக்குறைய அனைத்து தரப்பு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவந்தது. 

           இதற்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை, சில நாட்களாக உள்ளூரில் சுத்திகரித்து விநியோகிக்கப்படும் அனைத்து சிறிய நிறுவனங்களையும் மூடும்படி வெளிநாட்டு நிறுவனங்களான KINLEY, AQUAFINA போன்ற நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாக இந்த தொழிலில் ஈடுபட்டுவருவோர் குற்றம் சாட்டுகின்றனர். மே 20-ம் தேதிவரை அனைத்து உள்ளூர் நிறுவனங்களையும் மூடும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.

         இன்றைய நிலைக்கு அந்நிய நிறுவனங்களின் தண்ணீரின் விலை ரூ.77 முதல் 100 வரை இருக்கிறது. மேல்தட்டு மக்களால் இந்த குடிநீரை வாங்கி உபயோகிக்க முடியும் நம்மைப்போன்ற சாமானிய மக்களால் அது சாத்தியமாகாது. 

     சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதன் முன்விளைவுகளை வேறு துறைகளில் இருந்தே என்னால் காண முடிகிறது. பெப்சி , கோக-கோலா போன்ற பானங்களை நாம்தான் இங்கே வளர்த்துவிட்டோம். விளையாட்டு வீரர்களும் சரி, திரையுலக கலைஞர்களும் சரி அனைவரும் தங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்று இதுபோன்ற வெளிநாட்டு பொருட்களில் விளம்பரங்களில் நடித்து மக்களை வாங்க வைக்கின்றனர். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நம் சந்தையில் கால்பதித்து பின்னர் நம் சந்தையில் இருக்கும் சிறு நிறுவனங்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு தான் மட்டுமே முழு ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள் இது போன்ற நிறுவனத்தார். ஆனால் இந்த உண்மை நம் மக்களுக்கு தெரியாமல் மோகத்தால் அந்நிய பொருட்களுக்கு துணைபோகின்றனர். 

     இன்றுமுதல் நான் ஒரு சபதம் எடுக்கிறேன். இதுபோன்ற அந்நிய பொருட்களை அறவே ஒழித்து என் அனைத்து பயன்பாட்டிற்கும் நம் நாட்டில் தயாரான பொருட்களையே உபயோகிப்பேன். இதுவரை இதை கடைபிடித்துதான் வருகிறேன். ஆனால், இன்று முதல் அந்நிய குளிர்பானங்களையும்கூட நான் ஆதரிக்க மாட்டேன். இந்த மாற்றம் நம் அனைவரிடத்திலும் தேவை. நமக்கு உதவும் நம் நாட்டு வியாபாரிகளுக்கு நாம்தான் உறுதுணையாக இருக்க முடியும். சிந்தித்து செயல்படுவோம் தோழர்களே..

* தினேஷ்மாயா *

மனமில்லை..

Tuesday, May 14, 2013


கடவுள் சிற்பத்தை ஒரு
“கல்”
என்பவர்கள்,
பணத்தை ஒரு 
“காகிதம்” என்று
ஒத்துக்கொள்ள மனமில்லை...

* தினேஷ்மாயா *