தேவதையே வா என் தேவதையே வா

Thursday, May 31, 2012







தேவதையே வா என் தேவதையே வா


உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்

பூமழையே வா என் பூமழையே வா

உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்

நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்

பாவம் தானே பூமியில்

சிலுவைளும் சிறகெனப் பறந்திடு

தேவதையே வா என் தேவதையே வா

உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்



விளையும் பூமி தண்ணீரை விலகச் சொல்லாது

அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது

சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது

வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது

பாதை தேடும் கால்கள் தான் ஊரைச் சேரும்

குழலை சேரும் தென்றல் தான் கீதமாகும்

சுற்றும் இந்த பூமியை சுழலச் செய்யும் காதலை

கற்றுக் கொண்டேன் உன்னிடம்

இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை





அடைமழை நம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்

அனலாய் வெயில் சுட்டாலே மழையே தூவென்போம்

தனிமைகள் தொல்லை தந்தாலே துணையைக் கேட்கின்றோம்

துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்

ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்

கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே

அன்பை வைத்து வாழலாம்

சுகமென தினம் சுமைகளில் மகிழ்ந்திரு



தேவதையே வா என் தேவதையே வா

உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்

பூமழையே வா என் பூமழையே வா

உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்

நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்

பாவம் தானே பூமியில்

சிலுவைளும் சிறகெனப் பறந்திடு





படம்: மலைக்கோட்டை

இசை: மணிசர்மா

பாடியவர்: விஜய் யேசுதாஸ்

வரிகள்: யுகபாரதி

 
 
 
- என்றும் அன்புடன்..
 
தினேஷ்மாயா

தமிழ் மகளுக்கு







தமிழ் மகளுக்கு

தேடித் தேடி மருத்துவம் செய்தும்

மாறாதிந்த சாதி ஜுரம்.

கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது

வியாதியில் வந்து முடிந்தது காண்

காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்

கண்டு மயங்கும் மந்தைகளாய்

ஆகிப் போனதில் வந்த விளைவுகள்

சொல்லிப் புரியும் வேளையிலே

ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்

காரியம் கெட்டுப் போனது காண்

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி

ஆயிர மாண்டுகள் செய்ததனால்

ஆகமம் பழகிப் போனது காண்

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்

காவியின் வண்ணம் சற்றே மாறி

கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்

சாதியுஞ் சாமியும் சாராயம் போல்

சந்தைக் கடையில் விற்குது காண்

சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்

மாறா வர்ணம் நாலும் காண்

புத்தன் சொன்ன தம்ம பதத்தில்

பாதி மட்டுமே பிரபலம் காண்



எழுதியவர்: நடிகர் கமல்ஹாசன்

 
- என்றும் அன்புடன்..
 
தினேஷ்மாயா

பாரதியின் புதிய ஆத்திச்சூடி







அச்சம் தவிர்


ஆண்மை தவறேல்.

இளைத்தல் இகழ்ச்சி

ஈகை திறன்

உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு

எண்ணுவது உயர்வு

ஏறுபோல் நட

ஐம்பொறி ஆட்சிக்கொள்

ஒற்றுமை வலிமையாம்.

ஓய்தல் ஒழி.

ஓளடதம் குறை.

கற்றது ஒழுகு.

காலம் அழியேல்.

கிளைபல தாங்கேல்.

கீழோர்க்கு அஞ்சேல்.

குன்றென நிமர்ந்து நில்.

கூடித் தொழில் செய்.

கெடுப்பது சோர்வு

கேட்டிலும் துணிந்து நில்.

கைத்தொழில் போற்று

கொடுமையை எதிர்த்து நில்.

கோல்கைக் கொண்டுவாழ்

கவ்வியதை விடேல்.

சரித்திரச் தேர்ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்

சிதையா நெஞ்சு கொள்.

சீறுவோர்ச் சீறு.

சுமையினுக்கு இளைத்திடேல்.

சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்

சேர்க்கை அழியேல்.

சைகையில் பொருளுணர்.

சொல்வது தெளிந்து சொல்

சோதிடந் தளை யிகழ்.

சௌரியம் தவறேல்.

ஞமலிபோல் வாழேல்.

ஞாயிறு போற்று

ஞிமறென இன்புறு.

ஞெகிழ்வது அருளின்.

ஞேயம் காத்தல்செய்.

தன்மை இழவேல்.

தாழ்ந்து நடவேல்.

திருவினை வென்று வாழ்.

தீயோர்க்கு அஞ்சேல்.

துன்பம் மறந்திடு

தூற்றுதல் ஒழி.

தெய்வம் நீ என் றுணர்.

தேசத்தைக் காத்தல் செய்.

தையலை உணர்வு செய்.

தொன்மைக்கு அஞ்சேல்.

தோல்வியில் கலங்கேல்.

தவத்தினை நிதம் புரி.

நன்று கருது.

நாளெலாம் வினை செய்;

நினைப்பது முடியும்

நீதிநூல் பயில்.

நுனியளவு செல்.

நூலினைப் பகுத்துணர்.

நெற்றி சுருக்கிடேல்.

நேர்படப் பேசு.

நையப் புடை.

நொந்தது சாகும்.

நோற்பது கைவிடேல்.

பணத்தினைப் பெருக்கு.

பாட்டினில் அன்பு செய்.

பிணத்தினைப் போற்றேல்.

பீழைக்கு இடங்கொடேல்.

புதியன விரும்பு.

பூமி இழந்திடேல்.

பெரிதினும் பெரிது கேள்.

பேய்களுக்கு அஞ்சேல்.

கொய்மை இகழ்.

போர்த் தொழில் பழகு.

மந்திரம் வலிமை.

மானம் போற்று.

மிடிமையில் அழிந்திடேல்.

மீளுமாறு உணர்ந்துகொள்.

முனையிலே முகத்து நில்.

மூப்பினுக்கு இடங் கொடேல்.

மெல்லத் தெரிந்து சொல்.

மேழி போற்று.

மொய்ம்புறத் தவஞ் செய்.

மோனம் போற்று.

மௌட்டியந் தனைக் கொல்.

யவனர்போல் முயற்சிகொள்.

யாரையும் மதித்து வாழ்.

யௌவனம் காத்தல் செய்.

ரஸத்திலே தேர்ச்சிகொள்.

ராஜஸம் பயில்.

ரீதி தவறேல்.

ருசிபல வென்றுணர்.

ரூபம் செம்மை செய்.

ரேகையில் கனி கொல்.

ரோதனம் தவிர்.

ரௌத்திரம் பழகு.

லவம் பல வெள்ளமாம்.

லாகவம் பியற்சி செய்.

லீலை இவ் வுலகு.

(உ)லோக நூல் கற்றுணர்.

லௌகிகம் ஆற்று.

வருவதை மகிழ்ந்துண்.

வான நூற் பயிற்சி கொள்.

விதையினைத் தெரிந்திடு.

வீரியம் பெருக்கு

வெடிப்புறப் பேசு.

வேதம் புதுமை செய்.

வையத் தலைமை கொள்.

வௌவுதல் நீக்கு.

 
எழுதியவர் : பாரதியார்
 
 
 
 
- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

காதல் வந்தால் சொல்லி அனுப்பு




Babe... Tell me you love me


I hope I hear it

While I'm alive



காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்



சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி



கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி..



காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்



உயிரைத் தவிர சொந்தம் இல்லையே

காதலிக்கும் முன்பு

இந்த உலகே எந்தன் சொந்தமானதே

காதல் வந்த பின்பு



Babe.. Tell me you love me

It's never late.. Dont hesistate



சாவை அழைத்து கடிதம் போட்டேன்

காதலிக்கும் முன்பு

ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்

காதல் வந்த பின்பு



உன்னால் என் கடலலை

உறங்கவே இல்லை

உன்னால் என் நிலவுக்கு

உடல் நலமில்லை

கடல் துயில் கொள்வதும்

நிலா குணம் கொள்வதும்

நான் உயிர் வாழ்வதும்

உன் சொல்லில் உள்ளதடி..

உன் இறுக்கம்தான்

என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி



காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்



என் கண்ணீர்..



பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்

உன்னை காணும் முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன்

உன்னைக் கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான்

கண் திறந்த பின்பு

என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்

உன்னை கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை

அதற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை

நான் கரையாவதும்

இல்லை நுரையாவதும்

வளர் பிறையாவதும்

உன் சொல்லில் உள்ளதடி

உன் இறுக்கம்தான்

என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..



காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்



காதல் வந்தால் சொல்லி அனுப்பு

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு



படம்: இயற்கை

இசை: வித்யாசாகர்

பாடியவர்: திப்பு

வரிகள்: வைரமுத்து

 
 
- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

எங்கே செல்லும் இந்த பாதை



எங்கே செல்லும் இந்த பாதை,

யாரோ யாரோ அறிவார்?

எங்கே செல்லும் இந்த பாதை,

யாரோ யாரோ அறிவார்?

காலம் காலம் சொல்ல வேண்டும்,

யாரோ உண்மை அறிவார்?

நேரத்திலே நான் ஊர் செல்லவேண்டும்,

வழி போக துணையாய் அன்பே வாராயோ?

எங்கே செல்லும் இந்த பாதை,

யாரோ யாரோ அறிவார்?



ஊரை விட்டு ஒரு ஓர் குடிசை,

அங்கே யார் சென்று போட்டு வைத்தார்?

காதலிலே ஓர் பைத்தியமே

சொர்க்கம் அதுவென்றே கட்டிவைத்தார்?

காணும் கனவுகளில் இன்பம் இன்பம்,

உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்,

காதல் என்றால்,

ஓ… வேதனையா?



எங்கே செல்லும் இந்த பாதை,

யாரோ யாரோ அறிவார்?

காலம் காலம் சொல்ல வேண்டும்,

யாரோ உண்மை அறிவார்?



மண் கேட்டா அந்த மழை பொழியும்,

மேகம் பொழியாமல் போவதுண்டா?

கரை கேட்டா அந்த அலைகள் வரும்,

அலைகள் தழுவாமல் போவதுண்டா?

கண்ணீர் மழையில் உந்தன் முன்னே முன்னே,

காதல் மழையே பொழி கண்ணே கண்ணே,

என் உயிரே, ஹோ, என் உயிரே,



எங்கே செல்லும் இந்த பாதை,

யாரோ யாரோ அறிவார்?

காலம் காலம் சொல்ல வேண்டும்,

யாரோ உண்மை அறிவார்?

நேரத்திலே நான் ஊர் செல்லவேண்டும்,

வழி போக துணையாய் அன்பே வாராயோ?

எங்கே செல்லும் இந்த பாதை,

யாரோ யாரோ அறிவார்?

காலம் காலம் சொல்ல வேண்டும்,

யாரோ உண்மை அறிவார்?



படம்: சேது

இசை: இளையராஜா

வரிகள்: அறிவுமதி

பாடியவர்: இளையராஜா

 
 
- என்றும் அன்புடன்

தினேஷ்மாயா

நீ தூங்கும் நேரத்தில்








நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது


நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே..

கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும்

நீ வேண்டும் என்னுயிரே ஓ.... என் உயிரே…

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓஓ..

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே..

ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..

ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..

ஆரிரோ..ஆராரிரோ..ஆரிரோ..



மடி மீது நீ இருந்தால்

சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ

நொடி நேரம் பிரிந்தாலும்

காலங்களும் நின்று போகாதோ

ஒரு மூச்சில் இரு தேகம்

வாழ்வது நாமன்றி வேறாரோ

நம் காதல் வெள்ளத்தில்

நடுவே நாம் இருந்தாலும்

என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓஓ



நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே..

கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும்

நீ வேண்டும் என்னுயிரே ஓ.... என் உயிரே…



கண்ணோடும் நெஞ்சோடும்

உயிரால் உன்னை மூடிக் கொண்டேனே

கனவோடும் நினைவோடும்

நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

மதி பறிக்கும் மதிமுகமே

உன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே

எங்கே நீ சென்றாலும்

அங்கே நான் வருவேனே

மனசெல்லாம் நீ தான் நீ தானே ஓஓ



நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே..

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓஓ..

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே..

கண்மணியே ஓ கண்மணியே..

என்னுயிரே ஓ என்னுயிரே…





திரைப்படம்: மனசெல்லாம்

இசை: இளையராஜா

பாடியவர் : ஹரிஹரன்

 
 
- என்றும் அன்புடன்..
 
தினேஷ்மாயா

அகரம் இப்போ சிகரம் ஆச்சு




அகரம் இப்போ சிகரம் ஆச்சு


தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழல் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழல் ஆச்சு



சங்கீதமே சந்நிதி

சந்தோஷம் சொல்லும் சங்கதி

சங்கீதமே சந்நிதி

சந்தோஷம் சொல்லும் சங்கதி



அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழல் ஆச்சு



கார்காலம் வந்தால் என்ன

கடுங்கோடை வந்தால் என்ன

மழை வெள்ளம் போகும்

கரை இரண்டும் வாழும்

காலங்கள் போனால் என்ன

கோலங்கள் போனால் என்ன

பொய் அன்பு போகும்

மெய் அன்பு வாழும்



அன்புக்கு உருவமில்லை

பாசத்தில் பருவமில்லை

வானோடு முடிவுமில்லை

வாழ்வோடு விடையுமில்லை



இன்றென்பது உண்மையே

நம்பிக்கை உங்கள் கையிலே



அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழல் ஆச்சு



தண்ணீரில் மீன்கள் வாழும்

கண்ணீரில் காதல் வாழும்

ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே

பசியாற பார்வைபோதும்

பரிமாற வார்த்தை போதும்

கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்



தலைசாய்க்க இடமாயில்லை

தலை கோத விரலாயில்லை

இளங்காற்று வரவாயில்லை

இளைப்பாறு பரவாயில்லை



நம்பிக்கையே நல்லது

எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது



அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழல் ஆச்சு



சங்கீதமே சந்நிதி

சந்தோஷம் சொல்லும் சங்கதி



அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழல் ஆச்சு



திரைப்படம்: அகரம்

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 
 
-என்றும் அன்புடன்..


தினேஷ்மாயா

விழிகளிலே விழிகளிலே



விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே…

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே…



இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...

இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ

நடந்து போகையில் பறக்குது மனது

துன்பத்தில் இது என்ன வகை துன்பமே

நெருப்பில் எரிவதை உணருது வயது

இதுவரையில் எனக்கு இது போல் இல்லை

இருதய அறையில் நடுக்கம்

கனவுகள் அனைத்தும் முன் போல் இல்லை

புதியதாய் இருக்குது எனக்கும்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே ..



சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ

இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்

மொத்தில் இது என்ன வகை பந்தமோ

இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்

இது என்ன கனவா நிஜமா

இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்

இது என்ன பகலா இரவா

நிலவின் அருகினில் சூரியன் வெளிச்சம்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே...



விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே…



விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

 
 
இந்த பாடல் வந்து பலமாதங்கள் வரை நான் இதை கேட்கவில்லை. என்னவள் இந்த பாடலை கேட்குமாறு என்னை வற்புறுத்தினாள். கேட்ட பின்புதான் புரிந்தது ஏன் அவள் என்னை அவ்வளவு வற்புறுத்தினாள் என்று. பாடல் வரிகளும், பாடியவர்களின் குரலும், பாடலின் இசையும் உயிரில் ஒட்டிகொண்டது என்னவளைப்போல..



- என்றும் அன்புடன்

தினேஷ்மாயா

நண்பா நண்பா நாளை உலகம்



நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்

அது தெரியும் தெரியும் கண்ணில் நாளைய விடியலில்

நீ பதறாதே..

நீ சிதறாதே..

நம்மை நாமே தேடி தேடி

நதிகள் போல ஓடி ஓடி

நம்மை நாமே கண்டு பிடிப்போம்…

ஒன்றாக சாதிப்போம்

ஒரு நாளில் சந்திப்போம்

ஒன்றாக சாதிப்போம்

ஒரு நாளில் சந்திப்போம்

சந்திப்போம்..

நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்

அது தெரியும் தெரியும் கண்ணில் நாளைய விடியலில்



எந்த பந்தம் இல்லாமல்

ரத்த சொந்தம் இல்லாமல்

இதயங்கள் இன்று பிரிகின்ற போது

நெஞ்சில் வலிகள் கொண்டோமே

நட்பு என்ற வார்த்தைக்குள்

ரெண்டு அர்த்தம் இங்குண்டு

தன்நலமின்மை உயிர்தரும் உண்மை

நட்பில் ஒன்றாய் வாழ்ந்தோமே

நட்பெனும் சொந்தம் உயிரினை போலே

கடவுளை விடவும் ஒரு படி மேலே

எங்கோ பிறந்தோமே

அட எங்கோ வளர்ந்தோமே

இங்கே இணைந்தோமே

இரு இதயம் நனைந்தோமே

நம்மை நாமே தேடி தேடி

நதிகள் போல ஓடி ஓடி

நம்மை நாமே கண்டு பிடிப்போம்…

ஒன்றாக சாதிப்போம்

ஒரு நாளில் சந்திப்போம்

ஒன்றாக சாதிப்போம்

ஒரு நாளில் சந்திப்போம்

சந்திப்போம்..

நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்

அது தெரியும் தெரியும் கண்ணில் நாளைய விடியலில்..



காத்திருக்கக் கற்றுக்கொள்

காலம் போகும் ஏற்றுக்கொள்

ஒரு பிடி வைரம் உருப்பெறும் நேரம்

நூறு நூறு வருடங்கள்

ஊசி வந்து உயிர் தொட்டு

பாடல் பாடும் இசைத்தட்டு

வலிகளை தாங்கு வடுக்களை வாங்கு

அக்கினிகுஞ்சாய் போராடு

ஓய்ந்துவிடாதே நீ ஒரு காற்று

தளர்ந்துவிடாதே நம்பிக்கை ஏற்று

விதைகள் கிழியாமல் சிறு துயிரும் தோன்றாது

கப்பல்தான் நிற்கும் கடல் அலைகள் நிற்காது

நம்மை நாமே தேடி தேடி

நதிகள் போல ஓடி ஓடி

நம்மை நாமே கண்டு பிடிப்போம்…

ஒன்றாக சாதிப்போம்

ஒரு நாளில் சந்திப்போம்

ஒன்றாக சாதிப்போம்

ஒரு நாளில் சந்திப்போம்

சந்திப்போம்..



படம்: பிப்ரவரி 14

இசை: பரத்வாஜ்

பாடியவர்கள்: கார்த்திக், பரத்வாஜ், ஜனனி பரத்வாஜ்

நான் பத்தாவது படிக்கும்போது மேடையில் ஏறி பாடிய பாடல் இது. மேடை பயம் என்பதால் ஓரிரு வரிகள் மட்டுமே பாடிவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும் இந்த பாடல் வரிகள் இன்றும் என்னுள் இனித்து வருகிறது…

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

இன்னும் என்ன தோழா..

Monday, May 21, 2012




இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பல கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுன்வோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!


திரைப்படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: பா.விஜய்
பாடியவர்கள்: பல்ராம், நரேஷ் ஐயர், சுரேஷன்


- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா